உடல் வலி தாங்க முடியலையா? இத சாப்பிட்டா உடனே உடல்வலி பறந்து போகும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

உடல் வலி என்பது அனைவருக்கும் பொதுவானது தான். குறிப்பாக அதிம வேலைப்பழு உள்ளவர்கள், நிம்மதியான உறக்கம் இல்லாதவர்கள், ஒட்டப்பந்தய அல்லது விளையாட்டு வீரர்கள், குடும்பத்தலைவிகள் என பலரையும் இது வாட்டி எடுக்கக்கூடியது.
இந்த உடல் வலியிலிருந்து தப்பிக்க ஒரு சில பொருட்களை சாப்பிடுவதும், ஒரு சில வழிமுறைகளை கையால்வதாலும், இந்த உடல் வலியிலிருந்து தப்பிக்க முடியும்.
உடல் வலி அதிகமாக இருப்பவர்கள் மற்றும் மன அழுத்தம் அதிகமாக இருப்பவர்கள், செரி ஜூஸை பருகலாம். இது சதைகளில் உண்டாகும் வலியை குறைக்கிறது. இது ஓட்டபந்தய வீரர்களுக்கும், உடற்பயிற்சி செய்து உடல்வலியால் அவதிப்படுவர்களுக்கு மிகச்சிறந்தது.
மற்றொரு சுவையான ஜூஸ் என்னவென்றால் ப்ளூபெரி தான். பல ஆய்வுகளில் ப்ளூ பெரி ஸ்மூத்தியை உடற்பயிற்சிக்கு முன்னால் குடிப்பதனால், சதைகள் சேதமாவதை தடுக்கலாம் என கூறுகின்றன. இது மன அழுத்தத்தையும் குறைக்கின்றன.
சிவப்பு மிளகாய் விதைகளில் கேப்சைசின் என்ற சத்து உள்ளது. இது தசைகளை வலிமைப்படுத்தும் தன்மை கொண்டது. மூட்டு வலியால் அவதிப்படுபவர்கள் இதனை எடுத்துக்கொள்ளலாம். மிளகாயை மிக்ஸியில் போட்டு ஒன்று இரண்டாக, முழுவதும் பொடியாக்காமல் அரைத்து, உணவுகளில் சேர்த்து சாப்பிட்டால் உடல் வலிக்கு நிவாரணம் கிடைக்கும்.
தொடர்ச்சியாக உடல்வலி இருப்பவர்களுக்கு விட்டமின் டி குறைபாடு இருக்கும். விட்டமின் டி திரவ, கேப்சூல், மாத்திரைகள் என்று பல வடிவங்களில் கிடைகிறது. உணவு வடிவில் தேவை என்றால், மீன், முட்டை போன்றவற்றை சாப்பிட்டலாம். சூரிய ஒளியில் தினமும் சிறிது நேரம் நிற்பதாலும் விட்டமின் டி சத்தினை பெறலாம்.
மெக்னீசியம் மனித உடலுக்கு தேவையான ஒரு முக்கியமான சத்தாகும். இது தசைகள் சிறப்பாக செயல்பட உதவுகிறது. இது வாழைப்பழம், பாதாம், பிரவுன் அரிசி ஆகியவற்றில் நிறைந்துள்ளது.
ஐஸ் ஒத்தடம் அல்லது சூடான நீரில் ஒத்தடம் தருவதினால், உடல் வலியிலிருந்து உடனடியாக விடுபடலாம். இது மிகவும் எளிமையான மற்றும் விரைவான வழியும் கூட…
உடல் வலியிலிருந்து விடுபட நல்ல உறக்கம் தேவை. அதிகமான வேலைப்பளு, ஓய்வின்மை ஆகியவைகளும் உடல் வலிக்கு காரணமாக இருக்கும். எனவே போதுமான நேரம் தூங்க வேண்டியது அவசியம்.


 

இதையும் படிக்கலாமே
இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிட...
பட்டுப் போன்ற சருமத்திற்கு மூலிகைப் பொ...
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
உங்கள் தொலைபேசி சூடாகிறதா? காரணம் என்ன...
ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் ...
மாதம் 1 லட்சத்தி 50 ஆயிரம் ரூபாய் லாப...
யாழில் கைது செய்யப்படும் இளைஞர்கள் குற...
இந்த பெண்ணை பார்த்திருக்கின்றீர்களா.? ...
கவிஞர் சினேகனுக்கு திருமணம் . பிக் பாஸ...
முதலிரவில் மனைவி முகத்தை பார்த்து அதிர...
ஆபாச இணைய தளங்களை பார்ப்பவரா நீங்கள் ....
என்_வெளிநாட்டு_காதல்_கணவனே

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share