வெற்றிலையின் மருத்துவ குணங்கள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

அனைத்து நோய்களுக்கும் ஒரே தீர்வு வெற்றிலை-பாக்கு போடுவது மட்டுமே! அதிர
மனித உடலுக்கு நோய் ஏன் வருகிறது? என்பதற்கான காரணத்தை சித்த வைத்தியமும் ஆயுர்வேதமும் சொல்லும் போது உடம்பில் உள்ள “வாதம்,பித்தம், கபம் (சிலேத்துமம்)” போன்றவைகள் சரியான விகிதத்தில் இல்லாமல் கூடும் போதோ குறையும் போதோ நோய் வருகிறது என்று சொல்கிறார்கள். இது முற்றிலும் சரியான காரணமாகும்.

இந்த மூன்று சத்துக்களும் சரியான கோணத்தில் உடம்பில் அமைந்து விட்டால் நோய் வராது என்பதை விட நோயை எதிர்த்து
நிற்கும் ஆற்றல்(நோய் எதிர்ப்பு சக்தி) நம் உடம்பிற்கு வருகிறது.

நோய் எப்போது ஏற்படுகிறது? உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும்போது நோய்க் கிருமிகள் எளிதில் தொற்றிக் கொள்கின்றன. ஊட்டச்சத்துக் குறைவினாலும் நோய் ஏற்படுகின்றன.

நோயில்லா பெருவாழ்வு வாழ நாம் செய்ய வேண்டியது, நம் உடலில் உள்ள நோய் எதிர்ப்பு சக்தியை வலுவாக்க வேண்டும். அதற்கு சரியான நேரத்தில் சமச்சீர் உணவு உண்டு நல்ல வாழ்வியல் பழக்கங்களோடு வாழ்வதே. சமச்சீர் உணவு உண்டபின்னர் வெற்றிலை பாக்கு போடுவதை பழக்கமாக வைத்துக்கொள்ளுங்கள். இதை போடுவதால் நமது உடலில் புத்துணர்ச்சி அடைந்து வாதம் பித்தம் கபம் ஆகிய மூன்று நிலைகளையும் சமன் படுத்துகிறது..

இந்த மூன்று நிலைகளையும் சரியான படி வைக்க தாம்பூலம் உதவி செய்கிறது.

பாக்கில் இருந்து கிடைக்கும் துவர்ப்பு பித்தத்தை கண்டிக்க கூடியது.பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக இந்தியாவிலிருந்து சீனா, பர்மா, வியட்நாம் நாடுகள் வாயிலாக மேற்கத்திய நாடுகளுக்கு வெற்றிலை போடும் பழக்கத்தை அறிமுகப்படுத்தியதில் இந்தியாவிற்கு தான் முதலிடம்.
தாம்பூலம் தரிப்பதால் ஆண், பெண் இடையே மோகம் அதிகரிக்கும். உணவு எளிதில் செரிமானமாகும்; வயிற்று புழுக்கள் வெளியேறும். தொண்டை கட்டு, அதிக தாகம், பல்வலி, ஆகியன நீங்கும். ருசியை கூட்டி, உண்ட உணவினை எளிதில் செரிமானம் செய்துவிடும் தன்மை தாம்பூலத்திற்கு உண்டு. அசைவ உணவுகள் செரிப்பதற்கு, கடினமான உணவுகளை அதிகம் உட்கொள்வதால் ஏற்படும் மலச்சிக்கல் நீங்க, குடல் சுத்தமாக தாம்பூலம் தரிப்பது நல்லது என சித்த மருத்துவம் குறிப்பிடுகிறது. அது
மட்டுமன்றி தாம்பூலம் தரித்த பின்பு மனம் புத்துணர்ச்சியடைவதுடன், சிந்திக்கும் திறன் அதிகரித்து, ஆடல், பாடல் ஆகியவற்றில் மனம் ஆர்வம் கொள்வதுடன் ஆண், பெண் போக உணர்ச்சி அதிகரிக்கும் என பதார்த்த குண சிந்தாமணி என்ற சித்த மருத்துவநூல் குறிப்பிடுகிறது.

சுண்ணாம்பில் உள்ள காரம் வாதத்தை நீக்க வல்லது.

வெற்றிலையில் உள்ள உரைப்பு கபத்தை நீக்கி விடும்.

இப்படி பார்த்தால் தாம்பூலம் போடுதல் என்ற ஒரே பழக்கத்தில் உடம்பில் உள்ள மூன்று
தோஷங்களையும் முறை படுத்தும் நிலை அமைந்து விடுகிறது.

தாம்பூலம் போடுவதற்கென்று தனிப்பட்ட நெறிமுறையே நமது முன்னோர்களால் வகுக்க
பட்டிருக்கிறது.

காலையில் சிற்றுண்டிக்கு பிறகு போடும் தாம்பூலத்தில் பாக்கு அதிகமாக இருக்க வேண்டும்.

காரணம் மதிய நேரம் வந்து வெப்பம்
அதிகமாகும் போது உடம்பில் பித்தம் ஏறாமல் அது பாதுகாக்கும்.

அதே போல மதிய உணவிற்கு பிறகு சுண்ணாம்பு சத்து அதிகம் எடுத்து கொள்ள வேண்டும் அது உணவில்
உள்ள வாதத்தை அதாவது வாயுவை கட்டுப்படுத்தும்.

இரவில் வெற்றிலையை அதிகமாக
எடுத்து கொண்டால் நெஞ்சில் கபம்
தங்காது.இந்த முறையில்தான் தாம்பூலம் தரிக்க வேண்டும் என்பது நமது முன்னோர்களின் கட்டளை.

இதை மீறும் போது தான் சிக்கல் வருகிறது.

இன்றைய சூழலில் சர்க்கரை, இதயநோய், போன்ற பல வியாதிகள் வந்தவர்களுக்கும், வராமல் தடுக்க நினைப்பவர்களுக்கும் மருத்துவர்கள் சொல்லும் தாரக மந்திரம், உணவுக் கட்டுப்பாடு மற்றும் உடற்பயிற்சி.

ஓர் ஆரோக்கியமான உடலில் வாதத்தின் அளவே பிரதானமாய் இருக்கும்.

வாதத்தின் (காற்றின்) அளவு ஒரு பங்கு என்றால் அதில் பாதி அளவு பித்தம் இருக்கவேண்டும்.

பித்தத்தின் அளவில் பாதி சிலேத்துமம் இருக்க வேண்டும் என்றெல்லாம் நாட்டு மருத்துவ நாடி அறிவியல் கூறுகிறது.

இதில் ஏதேனும் மாறுதல்கள் ஏற்பட்டால் உடலில் நோய்க்கூறுகள் தோன்றுகின்றன.

நிலம் – உடலின் அமைப்பு
நெருப்பு – உடலின் (நொதி), (சுரப்புகள்)
காற்று – சுவாசிக்கும் ஆக்ஸிஜன்
நீர் – உடலில் உள்ள எல்லா திரவங்களும் (ரத்தம், நிணம்)
ஆகாயம் – உடலில் உள்ள வெற்றிடங்கள்

உடலில் இந்த ஐந்து மூலகங்களும் சேர்ந்து 3 தோஷங்களாக உள்ளன. அவை வாதம் (காற்று), பித்தம் (நெருப்பு), கபம் (நீர்) என்பன ஆகும். இவை ஒவ்வொரு உடலிலும் ஒவ்வொரு விகிதத்தில் இருக்கின்றன.

வாதம் – காற்று

பித்தம் – நெருப்பு

சிலேத்துமம் – நீர்

என மூன்று இயற்கைக் கூறுகளோடு இவை ஒப்பிடப்படுகின்றன.

சித்தமருத்துவத்தை பொறுத்தவரையிலும் பஞ்சபூதங்களும், அறுசுவைகளும் ஒன்றுடன் ஒன்று இணைந்தவையாகக் கருதப்படுகிறது.

இனிப்பு – மண்ணும் நீரும்
துவர்ப்பு – மண்ணும் காற்றும்
கசப்பு – காற்றும் ஆகாயமும்
புளிப்பு – மண்ணும் தீயும்
உப்பு – நீரும் தீயும்
காரம் – காற்றும் தீயும்
என்ற வகையில் தொடர்புடையதாகக் கருதப்படுகிறது. எனவே இனிப்பு சாப்பிடும் பொழுது கபம், கசப்புடன் வாதமும், தீயுடன் பித்தமும் உருவாகும் என்று சொல்லப்படுகிறது. கலோரி என்ற ஒரு உணவின் சத்து அளவு இன்றைக்கு வெகுவாகப் பேசப்படுகிறது. இந்த அளவுடன் கூட சித்த மருத்துவம் ஒவ்வொரு உணவுப் பொருளில் உள்ள நிறமூட்டி (Colour), மணமூட்டி (Flavour), சுவையூட்டி(Smell or taste) இவைகளைக் கொண்டே உணவின் உபயோகத்தையும் கலோரியையும் நிர்ணயிக்கிறது.

நம் உடலில் நாளமில்லா சுரப்பிகள் உள்ளன. அவையாவன:
(1)பிட்யுட்டரி
(2)பீனியல்
(3)அட்ரீனல்
(4) பான்கிரியாஸ்
(5) நாபிச் சக்கரம்
(6) தைராய்டு
(7) பாலியல் சுரப்பிகள் ஆகும்.

இவை ஒரு மனிதனின் குணத்தை நிர்ணயிப்பதில் முக்கிய பங்கு வகிக்கிறது.
இவை சரியாக செயல்பட்டால் ஒருவர் அன்பு, தைரியம், கருணை, வைராக்கியம்,பொறுமை, எளிமை, பொது நலம், சுறுசுறுப்பாகவும் சந்தோஷமாகவும் இருப்பர்.
இவை சரியாக செயல் படாவி ட்டால் அதிக காமம், கோபம், பிடிவாதம்,அமைதியின்மை, சிடுசிடுப்பு, ஆடம்பர பொருட்கள் மேல் மோகம், கோழைத்தனம்,
அதிக ஆசை, சுயநலம், சோம்பேறித்தனம், சோர்வு, தற்கொலை எண்ணம், திருடும்எண்ணம், கொடூரம், பயம் போன்றவற்றுடன் காணப்படுவர். எனவே மனரீதியானபிரச்னை உள்ளவர்கள் இயற்கை உணவை உன்னுங்கள்.

நமது உடல் விந்தையான எந்திரம். தனக்கு தேவையான சத்துக்கள் இருக்கும் பொருளை (உணவை) சாப்பிட ஆசை கொள்ள வைக்கிறது. அதுபோலவே தனக்கு வந்த நோயை தீர்த்துக் கொள்ள அதுவே முயல்கிறது. நாம் செய்ய வேண்டியதெல்லாம் அதன் மொழியை புரிந்து கொண்டு அதற்கேற்ப நடந்து கொள்வதே. ஆனால் இன்று உடல் சொல்ல முயற்சிக்கும் விஷயங்களை ஆழ்ந்து, கூர்ந்து கவனித்து, புரிந்து நடக்க நேரமில்லை.

இதையும் படிக்கலாமே
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன...
இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரட...
ஆண்களின் 6 பேக் தேவையில்லை பெண்களுக்கு...
அதிகமாக பகிருங்கள்: மாதம் ரூபாய் 25000...
உடலுறவுக்கு முன் இதை செய்யுங்கள் தாம்ப...
நீங்கள் பிறந்த கிழமையை வைத்து உங்கள் க...
ஆண்களே உஷார்! ஆண்களைத் தாக்கும் Top 8 ...
100 வருடம் கவலையின்றி நலமுடன் வாழ நேரம...
கோழியை கற்பழித்து கொன்ற சிறுவன்..!
முதலிரவில் மனைவி முகத்தை பார்த்து அதிர...
நாம் விரும்பி உண்ணும் பலாப்பழத்திலும் ...
தவறுதலாக வழங்கப்பட்ட வாட்ஸ்அப் பயன்பாட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share