பிஸ்தா பர்ஃபி தேவையானவை:

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

 

பிஸ்தா பருப்பு(உப்பில்லாதது)- 1 டம்ளர்
சர்க்கரை- 2 1/2 டம்ளர்
நெய்- 1/4 டம்ளர்
நீர்- 3/4 டம்ளர்
ஏலக்காய்த்தூள்- 1/2 தேக்கரண்டி

செய்முறை:

1. ஒரு வாணலியில் நெய்யை விட்டுப் பிஸ்தா பருப்புகளை ஓரிரு நிமிடங்களுக்கு வதக்கவும்.
2. ஆற வைத்துப் பிஸ்தாவை மின்னரைப்பானில் தண்ணீர் விட்டு அரைக்கவும்.
3. சர்க்கரையைக் கொடுக்கப்பட்டுள்ள தண்ணீரின் அளவைப் பயன்படுத்திப் பாகு காய்ச்சிக் கொள்ளவும்.
4. பாகில் அரைத்தப் பிஸ்தாக் கலவையைக் கொட்டிக் கிளறவும்.
5. ஒட்டாமல் கெட்டியான பதம் வந்ததும் ஏலக்காய்த்தூளைக் கலந்து நெய்யை விட்டுக் கிளறி வேறு நெய் தடவிய தாம்பாளத்திற்கு மாற்றி ஆற விட்டு வில்லைகள் போடவும்.
6. சுவையான பிஸ்தா பர்பி தயார்.

பின்குறிப்பு:

சர்க்கரைப்பாகு வைக்க விரும்பாதவர்கள் பிஸ்தாப்பருப்பு, சர்க்கரை ஒன்றாகக் கலந்து குறைந்த தீயில் அடுப்பை ஏற்றிக் கூடுதல் நேரமெடுத்தாலும் கெட்டியாகும் வரைப் பொறுமையாகச் செய்து வில்லைகள் செய்து கொள்ளலாம்.

இதையும் படிக்கலாமே
சிட்னியில் ஆதித் தமிழன் இசைப் பயிற்சி
வெளிநாடுகளில் தொழில்புரியும் இலங்கையரு...
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
சிங்களத்தை உலுக்கியெடுக்கும் புலிகளின்...
அம்மா சொல்லை கேட்காததால் சிறுமி பரிதா...
உடல் பலவீனம் நீங்கி பலம் பெற வேண்டுமா?
வாழ்வாதார உதவு செய்வதற்கு பாலியல் லஞ்ச...
நான்கு மனைவிகள் கணவருக்கு செய்த செயல் ...
பாலியல் தொழிலாளிகளுடன் மகன் பிறந்ததை க...
குட்டிக் குழந்தையாய் நாம் பார்த்த சூர்...
திருமணமாகி 2 வருடங்கள் கூட முடியாத நில...
ஆரவ்- வை தொடர்ந்து ஓவியாவின் முத்த மழ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •