mersal title

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

அட்லீ பிறந்தநாள் பரிசாக மெர்சல் டீசர் 21 ம் திகதி வெளியானது. அந்த டீசர் வெளியான சில மணி நேரத்திற்குள் 5 லட்சதிற்கு மேட்பட்ட  லைக்ஸ் அள்ளி இது வரை இருந்த  யூடியூம் சாதனையை முறியடித்தது.

அதிக பொருட்செலவில் தயாராகி இருக்கும் இந்தப் படத்தின் டீசர் காட்சிகள் தனது பிரமாண்டத்தை நிரூபிக்கிறது. விஜய்யை மட்டுமே மையமாக வைத்து சுற்றிச் சுழலும் டீசர்,

அவரது ரசிகர்களுக்கு சரியாக தீனியை போட்டிருக்கிறது. டீசர் தொடக்கத்திலேயே ‘பற்றியெரியும் நெருப்பொன்று. பற்றி எரிய உனைக் கேட்கும்’விஜய் என

உச்சரிக்கும் வசனங்கள் வெறும் வார்த்தையாக இல்லாமல் அரசியல் வாடையை அள்ளித் தெளிக்கிறது. ’நீ விதைத்த வினையெல்லாம் உன்னை அறுக்க

காத்திருக்கும்’எனும் வரிகளை அழுத்தி உயர்த்தி விஜய் உச்சரித்திருப்பது ரசிகர்கள் மத்தியில் தீயாய் பரவி வருகிறது.

இந்த நிலையில் ராஜேந்திரன் என்ற திரைப்பட தயாரிப்பாளர், உயர்நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றை தொடுத்தார். அதில், ‘நான் ஏற்கெனவே 2014ல் ‘மெர்சலாகிட்டேன்’ என்ற பெயரில் ஒரு படத்தை துவக்கினேன். அந்தப்படம் தயாரிப்பில் உள்ள நிலையில் விஜய் நடிக்கும் ‘மெர்சல்’ என்ற படம் வெளிவர உள்ளது. இந்தப்படம் வந்தால் என் படம் பாதிக்கப்படும்’ என்று குறிப்பிட்டு இருந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, வழக்கை வரும் அக்டோபர் 3-ம் தேதி ஒத்திவைத்தவர், அதுவரை ‘மெர்சல் படத்தின் விளம்பரங்கள் எதுவும் வெளியிடக்கூடாது’ என்றும் தீர்ப்பில்  கூறியுள்ளார். 

இதுகுறித்து, ‘மெர்சல்’  படத்தின் தயாரிப்பு தரப்பில் பேசினோம். ‘ஏற்கெனவே காதல், காதலுக்கு மரியாதை, காதல் மன்னன், காதலர் தினம், காதல் வைரஸ், காதல் சடுகுடு, காதலே நிம்மதி… என்று ஒரே வார்த்தைள் பல படங்களில் திரும்பத் திரும்ப இடம்பெற்றுள்ளன. ஆனால் அவற்றுக்கெல்லாம் எந்த பிரச்னைகளும் வரவில்லை. ‘மெர்ச’லுக்கு மட்டும் ஏன் இந்தப் பிரச்னை? மேலும் இன்றில் இருந்து கோர்ட் விடுமுறை. அதன் அடுத்த அலுவல் நாள் 3-ம் தேதிதான். அதைப் பயன்படுத்தி இப்படி வழக்கு போட்டிருக்கிறார்கள். இந்த வழக்கை நாங்கள் சட்டப்படி சந்திப்போம்” 

மெர்சல் கிட்டயே மிரட்டலா? பார்போம் .

இதையும் படிக்கலாமே
சூப்பர் ஸ்டாரின் வழியைப் பின்பற்றும் இ...
வசூலில் விஷாலின் துப்பறிவாளன்
vijay
saami 2 vikram
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
நடிகை அமலாபால் போன்று 14 லட்சம் வரி மோ...
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
கண்கலங்க வைத்த இயக்குனர் ஏ ஆர் முருகதா...
நடிகை தமன்னாவை ஆடையின்றி நிற்க சொன்ன ப...
என்னை படுக்கைக்கு அழைத்தவர்கள் பெயர் வ...
அஜித் படங்களை இதற்காக தான் பார்க்க போக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •