ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லைட் ஏரியாவும் – கேவலமான உண்மைகள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மேலைத் தேயத்தில் மூடிய திரைக்குள் இடம் பெறும் நிர்வாண நடனங்களை Strip டான்ஸ் என அழைப்பார்கள். மேலைத் தேசத்தவர்களைப் பொறுத்த வரை பொது வெளியில் வைத்து, ஓர் சமூகத்திற்கு முன்னால் இவ்வாறான நடனங்களை அரங்கேற்ற மாட்டார்கள்.

பொது வெளியில் கொஞ்சம் கவர்ச்சி தூக்கலாக ஆடப்படும் நடன வகைக்கு பலே டான்ஸ் என பேர் வைத்துள்ளார்கள் அவர்கள். ஆனால் நம்ம ஊர்களில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை வயது வேறுபாடின்றி இறை உணர்வை வேண்டிச் செல்லும் ஆலயங்களில் அங்கங்கள் வெளித் தெரிய ஆடப்படும் முழு நீளக் கவர்ச்சி நடனத்திற்கு நம்மவர்கள் வைத்திருக்கும் பெயர் ரெக்கார்ட் டான்ஸ்.

சின்ன மேளம், ஒயிலாட்டம், மானாட்டம் இவை எல்லாவற்றையும் விட முற்று முழுதாக பெண்களை விபச்சாரப் பொருளாக்கி பப்ளிக் ப்ளேஸில் வயது வேறுபாடின்றி அனைவரும் பார்த்து தொலையுங்கள் எனும் நோக்கில் இடம் பெறுகின்றது இந்த மாதிரியான நடனங்கள்.

முன்பெல்லாம் ஊருக்கு ஊர் வருத்தப்படாத வாலிபர் சங்கங்கள் இருப்பது போல இப்பொழுதெல்லாம் ஊருக்கு ஊர் ஒவ்வோர் ஊரின் இளைஞர் அணியின் பெயரிலும் இந்த ரெக்கார்ட் டான்ஸ் குறூப் வேறு!

குறிப்பிட்ட வயதினர் மட்டும் பார்த்து ரசிக்கும் வண்ணம் ஒரு மூடிய அறைக்குள் அல்லது மூடிய திரைக்குள் இப்படி ஒரு நிகழ்வு இடம் பெற்றால் சரி வயது வந்தோருக்கான கூட்டத்தின் நிகழ்வு என்று ஒதுக்கலாம். ஆனால் ஒவ்வோர் ஆலயத் திருவிழாக்களின் போதும், ஒவ்வோர் பிரதேச சமூக நிகழ்வுகளின் போதும் பொது வெளியில் இவ்வாறு நிர்வாண நடனம் ஆடப்படுவதை எப்படி எமது சமூக கலாச்சார காவலர்கள் அனுமதிக்கிறார்கள் என்று தான் தெரியவில்லை?

அம்மாள் தொண்டர்கள், ஐயனார் ரசிகர்கள், மாரியாத்த டான்ஸ் டீம், என பல்வேறு பெயர்களில் குறூப் வேறு. இன்னும் கொஞ்ச நாள் போனால் கருணாநிதி டீம், ஜெயா டீம் என ரெக்கோர்ட் டான்ஸிற்கு குறூப் ஆரம்பிச்சிடுவாங்க போலிருக்கே!

நடனம் ஆடினால் பரவாயில்லை. அங்கே பார்வையாளர்களாக இருக்கும் விசிலடிச்சான் குஞ்சுகளான – சிறுவர்களின் மூஞ்சிகள் அப்படியே தெரியும் வண்ணம் அதை கூட வீடியோ பிடித்து யூடியூப்பில் அப்லோட் பண்ணி இண்டர்நேஷனல் லெவலுக்கு அனுப்புறாங்கப்பா! என்னங்க கலாச்சார காவலர்களே பொது வெளியில் பெண்களை ஆண்கள் விபச்சாரத்திற்கு உள்ளாக்கும் செயலை கண்டுக்க மாட்டீங்களா?

பெண்ணியவாதிகளே நீங்கள் எல்லாம் எங்கே போயிட்டீங்க?

இதையும் படிக்கலாமே
பர்மாவில் தேக்கு மரத்தை வெட்டி நீங்கள்...
அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்...
Bigg Boss நிகழ்ச்சியின் வெற்றியாளர் ஆர...
தடைகளை உடைத்து சாதனை படைத்தது தளபதியின...
என் தங்கையோடு பிரபல நடிகர் தவறான தொடர்...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
விவேகம்,கபாலி,வசூலை பின்னுக்கு தள்ளி ம...
அம்மாடியோ .! நயன்தாராவின் காதல் பரிசு
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
நடிகை சமந்தாவின் கண்கலங்க வைக்கும் இன்...
விபச்சாரம் செய்து கைதான பிரபல நடிகைகள்...
பிக் பாஸ் ஆரவ்விற்கு டும்டும்டும் .! ம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •