Trespass – திடுக்! திடுக்! திரிலிங் பட விமர்சனம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கோலிவுட்/ஹாலிவூட்/ஹோலிவூட்/கொலிவூட் பட விமர்சனம்!

படம் பற்றிய அவுட் லைன் ஸ்டோரி:
ஊருக்குச் சற்றுத் தொலைவாக, அழகிய கடற்கரைக்கு அருகே ஓர் பென்னாம் பெரிய பங்களா. அங்கே, அழகும் இளமையும் குன்றாத மனைவி, அன்புக்கு இணையாக ஓர் மகள். பணத்திற்கு குறைவின்றி டைமன் வியாபாரம் என மிகவும் சந்தோசமாக இருக்கும் ஓர் பணக்கார வியாபாரியின் வீட்டினை கொள்ளையிட நீண்ட நாட்களாக கொள்ளையர்கள் திட்டம் தீட்டுகிறார்கள். பல்வேறு வழிகளிலும் உளவு நடவடிக்கைகள் மேற்கொண்டு, இறுதியில் போலீஸ் போன்று வேஷமிட்டு, வீட்டினுள் செல்ல காத்திருக்கிறார்கள். டைமண்ட் வியாபாரியின் ஆசை மகளோ தன் நண்பர் குழாத்துடன் அவுட்டிங் போகப் பெற்றோரிடம் பர்மிஷன் கேட்கின்றார்.

பெற்றோர் பர்மிஷன் கொடுக்காது, வீட்டினுள் உட்கார்ந்து நல்ல பழக்கம் பழகு எனத் தம் பிள்ளையிடம் சொல்லி வைக்கின்றார்கள். பெற்றோரின் கண்ணில் மண்ணைத் தூவிட்டு, அன்பு மகளோ மதிலேறி குதிச்சு நைட் டைம்மா பார்த்து அவுட்டிங் போயிடுறா. கொள்ளையர்களும் போலீஸ் போன்று வேஷமிட்டு மாஸ்டர் ப்ளான் போட்டு, டைமண்ட் வியாபாரியின் வீட்டினுள் நுழைஞ்சிடுறாங்க. டைமண்ட் வியாபாரியின் களஞ்சிய அறையினைத் திறந்து, அதனுள் இருக்கும் பணத்தினையும், வைரங்களையும் தம் வசம் ஒப்படைக்க வேண்டும் என்பதே கொள்ளையர்களின் கோரிக்கையாகும். கொள்ளையர்கள் டைமண்ட் வியாபாரியைப் பணிய வைக்கும் நோக்கில் பல்வேறு கொடூரங்களை அரங்கேற்றுகின்றார்கள்.

கொள்ளையர்கள் வியாபாரியின் மகளைத் தேடும் நேரத்தில் மகள் வெளியே சென்றிருப்பதனை பெற்றோர் உணர்ந்து மனம் மகிழ்கிறார்கள். ஆனால் மகளும் வீட்டிற்கு வந்து விட கொள்ளையர்களின் மிரட்டல் இன்னும் அதிகமாகின்றது. டைமண்ட் வியாபாரி பணிந்தாரா? தன் வசம் உள்ள சொத்துக்களை கொள்ளையர்களிடம் வழங்கினாரா இல்லை குடும்பத்துடன் பலியானாரா என்பதனைத் திடுக் திடுக் திரிலிங் படமாகச் சொல்லி நிற்கிறது Trespass.

இனி படம் பற்றிய சில தகவல்கள்:
2011ம் ஆண்டு செப்டெம்பர் மாதம், மில்லேனியம் பிலிம்ஸின் விநியோகத்தில், Nu Image Films And Winkler Films தயாரிப்பிப் திரைக்கு வந்திருக்கிறது இந்த ஹாலிவூட் படம். கணவனும், மனைவியுமாக நடிகர் Nicolas Cage மற்றும், நடிகை Nicole Kidman ஆகியோர் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன், Cam Giandet, Liana Liberato, Ben Mandelsohn உள்ளிட்ட பல ஹாலிவூட் நட்சத்திரங்கள் இப் படத்தில் நடித்திருக்கிறார்கள். விறு விறுப்பிற்குப் பஞ்சமின்றி David Buckely அவர்கள் தன் இசையினால் இப் படத்திற்கு இனிமை சேர்த்திருக்கிறார். சண்டைக் காட்சிகள், த்ரிலிங் காட்சிகள், என அனைத்தும் கலந்து விறு விறுப்பினை கொடுக்கும் வண்ணம் இப் படத்தினைத் தயாரித்திருக்கிறார் இயக்குனர், Joel Schumacher அவர்கள்.

சில சுவாரஸ்யங்கள்:
படத்தில் சுவாரஸ்யம் நிறைந்த காட்சிக்கு உதாரணமாக…கொள்ளையர்களில் ஒருவன் கோடீஸ்வரனின் வீட்டினை உளவு பார்க்கும் நோக்கில் செக்கியூரிட்டியாக வேலைக்கு வருகின்றான். காலப் போக்கில் தன் கட்டழகால் கோடீஸ்வரனின் மனைவியினை கவர்ந்திழுக்க முயற்சிக்கிறான். சந்தர்ப்ப சூழ் நிலையால் திருட வந்தவனுக்கு, தித்திக்கும் அழகுடன் இருக்கும் நடிகை Nicole Kidman மீது மோகம் ஏற்படுகின்றது. இந்த மோகத்தினைக் கொள்ளையிட வந்த போது, உன் மீது உள்ள காதலால் உன்னை மட்டும் உன் குடும்பத்தில் விட்டு வைக்கிறேன் எனவும், தனக்கும், உனக்கும் உள்ள கள்ள காதலை உன் கோடீஸ்வர கணவனிடம் சொல்லிடுவேன் எனவும் போலியாக மிரட்டுகிறான் கொள்ளையர்களில் ஒருவன். அப்புறம் என்ன நடந்திருக்கும் என ஆவலா? உடனே….ட்ரெயிலரைப் பாருங்க. ட்ரெயிலர் பிடிச்சிருந்தா படத்தினையும் பாருங்க.

Trespass: கொள்ளையிட வந்து கொல்லப்பட்ட திருடர்களின் கதை!
இப் படத்தின் ட்ரெயிலரினைக் கண்டு களிக்க இங்கே கிளிக் செய்யுங்கள்.

இதையும் படிக்கலாமே
களவு தொழிற்சாலை
பிக் பாஸ் நிகழ்ச்சி ஸ்க்ரிப்ட் இல்லை ஓ...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
இத்தனை ஆபாசமாக ஓவியாவா ?திட்டித் தீர்க...
மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்
இந்த கருவிகள் இருந்தால் பெண்களுக்கு ஆண...
பிரபல தமிழ் நடிகரின் மகள் திருமணத்திற்...
அய்யோ நாட்டாமை தம்பி டீச்சரை வைச்சுருக...
அஜித் படங்களை இதற்காக தான் பார்க்க போக...
இணையத்தில் தீயாய் பரவும் பிரபல நடிகையி...
Ovia
போதையில் நடிகர் ஜெய் செய்த செயலால் சின...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •