வெள்ளைபடுதலைக் குணமாக்கும் எள்ளு உருண்டை!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

பூப்படைந்த பெண்களில் அதிகமானோருக்கு உள்ள பிரச்சினை தான் வெள்ளைபடுதல் எனப்படும் (Vaginal Discharge) பிறப்புறுப்பின் கருப்பைக் கழுத்து வழியே எச்சில் போன்ற திரவம் சுரப்பதாகும். பெரும்பாலான பெண்களுக்கு இப் பிரச்சினை இருக்கின்ற போதும்; பிறப்புறுப்பினைத் தொற்று நோய்களிலிருந்து கழுவிச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் தான் வெள்ளைபடுதலினைக் குணப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் கூறுகின்றார்கள். ஆனாலும் ஒரு சில சத்தான உணவுகளை உட்கொள்வதன் மூலமாகவும் இந்த வெள்ளைபடுதலைக் குணப்படுத்த முடியும்.
அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?
அந்த வகையில் வெள்ளைபடுதல், மலச்சிக்கல், மாதவிடயாயின் போது ஏற்படும் வலி, குழந்தை பெற்ற பெண்களின் தசைகள் இறுக்கமாக எனப் பல பிரச்சினைகளுக்குத் தீர்வினைக் கொடுக்கவல்ல “எள்ளுப் பணியாரம் எப்படிச் செய்வது” பற்றிய குறிப்புக்களை புரட்சி வானொலியின் சுவையருவி எனும் பகுதியூடாக பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன். தேவையான பொருட்கள்:*எள்ளு- 150-200g எள்ளு (Sesame Seeds)

*ஒரு முழுத் தேங்காயின் துருவிய தேங்காய்ப் பூ. (Coconut Powder)
*வெல்லக் கட்டி & சர்க்கரை: (Jaggery Cube)
*சிறிதளவு சர்க்கரை (Sugar)
இனி எள்ளு உருண்டை எப்படிச் செய்வது- செய்முறை!
*எள்ளைப் பொன் பருவமாகும் வரை- அல்லது எள்ளிலிருந்து எண்ணெய் சொட்டும் வரை வறுத்தெடுக்கவும்.
*தேங்காய்ப் பூவை தனியாக கொட்டி, பதமாகும் வரை வறுத்தெடுக்கவும்.
*வெல்லக் கட்டியினைச் சிறிது சிறிதாக வெட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு வைக்கவும்.
*இனி வறுத்தெடுத்த எள்ளு, தேங்காய்ப்பூ, வெட்டி வைத்த சர்க்கரை, சிறிதளவு சீனி முதலியவற்றை ஒன்றாக கொட்டி மிக்ஸியில் மிக்ஸ் பண்ணி அரைக்கவும். (அரைக்கும் மிக்ஸிக் குவளையில் தண்ணீர்த் தன்மையோ, எண்ணெய்த் தன்மையோ இல்லாது பார்த்துக் கொள்ளவும்).


*அரைத்தெடுத்த எள்ளுக் கலவையினை, உருண்டையாக்கி (Sesame Balls) காற்றோட்டமான பகுதியில் ஒரு தட்டில் வைக்கவும்.
*இரண்டு மணித்தியாலங்களின் பின்னர் உங்களின் நாவிற்குச் சுவையூட்டும் எள்ளுருண்டை தயார்.
*நீங்கள் விரும்பினால் சிறிதளவு கோதுமை மாவில் தண்ணீர் சேர்த்துக் கலவையாக்கி, அந்தக் கலவையினுள் எள்ளுருண்டையினை உருட்டி எண்ணெயிலும் பொரித்தெடுக்கலாம்.
*போத்தலினுள் இந்த எள்ளுருண்டையினைப் பொதி செய்தால் இரண்டு வாரங்கள் வரை பழுதாகாது வைத்திருந்து நீங்கள் உண்டு மகிழலாம்.
அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?
இது தான் எள்ளு உருண்டை செய்வதற்கான ரெசிப்பி. ஸோ உங்களுக்கு சந்தேகம் ஏதும் இருந்தால் நீங்கள் கேட்கலாம்.

 

முக்கிய குறிப்பு: எள்ளு உருண்டையில் தேங்காய்ப்பூ, வெல்லக் கட்டி முதலிய இனிப்பு – கொழுப்புத் தன்மை வாய்ந்த பதார்த்தங்கள் சேர்க்கப்படுவதால் நீரிழிவு நோயுள்ளோர் தவிர்ப்பது நல்லது. 

புரட்சி வானொலிக்காக கமலேஷ்

அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
சில உணவுகளை அதிகமாக உண்ணும்போது ஏற்படு...
கொழுப்பை விரட்டும் கடுகு
மிளகு
ஆரோக்கியத்திற்கு இயற்கை பானம்!
இயற்கை அழகு குறிப்புகள்
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ...
இது பொய்யல்ல நிஜம்..! எந்த வேலை செய்தா...
பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இத...
ஞாயிற்றுக் கிழமையில் யார் யாருக்கு நல்...
இரவில் உறக்கத்தை தொலைத்து தவிப்பவரா நீ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •