தன்ஷிகாவிற்கு குவியும் பிரபலங்களின் ஆதரவு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

மீரா கதிரவன் இயக்கத்தில் வெங்கட்பிரபு, விதார்த், கிருஷ்ணா, தன்ஷிகா உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் ‘விழித்திரு’. இதில் டி.ராஜேந்தர் ஒரு பாடல் பாடி, அதற்கு நடனமும் ஆடியுள்ளார். அக்டோபர் 6-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது.

 இதில் தன்ஷிகா பேசும்போது, மேடையிலிருந்த அனைவரையும் பற்றி பேசிவிட்டு டி.ராஜேந்தரை பற்றி குறிப்பிட மறந்துவிட்டார். இதனைத் தொடர்ந்து பேசவந்த டி.ராஜேந்தர் “‘கபாலி’ படத்தில் ரஜினியோடு நடித்தவுடன் தன்ஷிகா, டி.ராஜேந்தரை மறந்துவிட்டார். அவருடைய பேச்சில் என்னைப் பற்றிக் குறிப்பிட மறந்துவிட்டார்” என்று கூறினார்.

தொடர்ச்சியாக தன்ஷிகாவை கடுமையாக சாடவே, தன்ஷிகா  டி ராஜேந்தர் காலை தொட்டு மன்னிப்பு கேட்டார் .ஆனால் அதை கண்டுகொள்ளாத ராஜேந்தர் கடும் வார்தைகளால் தன்ஷிகாவை வசை பாட அழுதே விட்டார் தன்சிகா.

இந்த விவகாரம் நடிகர் சங்கச் செயலாளர் விஷால், டி.ராஜேந்தருக்கு தனது கடும் கண்டனத்தை தெரிவித்திருக்கிறார். மேலும், இதில் தமிழ் திரையுலகினர் பலரும் தன்ஷிகாவுக்கு ஆதரவாக தங்களுடைய கருத்துகளை சமூகவலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார்கள். அவற்றில் சில

தனஞ்ஜெயன்: வீடியோவைப் பார்த்தேன். உங்கள் தவறை சரி செய்ய உங்களால் முடிந்ததை செய்தீர்கள். ஆனால் அது சரியாகப் புரிந்துகொள்ளப் படவில்லை. இதைக் கடந்து வாருங்கள். சோகமாக இருக்க வேண்டிய அவசியமில்லை.

ஜனனி ஐயர்: நீ அந்த மொத்த சூழலையும் மிகச்சரியாக கையாண்டாய். வலிமையாய் இரு.

பிரசன்னா: நீங்கள் செய்தது சரி. நல்ல பாங்கில் கண்ணியத்துடன் உங்களுக்காக நீங்கள் பேசினீர்கள். உங்கள் கடின உழைப்புதான் இன்றைக்கு உங்கள் நிலைமைக்குக் காரணம். தலை நிமிர்ந்திருங்கள்.

அஞ்சனா: சூழலை சரியாகக் கையாண்டீர்கள். நீங்கள் வலிமையான பெண். உங்களுக்கான மரியாதை அனைத்து மூலைகளிலிருந்தும் வந்துகொண்டிருக்கிறது. அதுவே அனைத்தையும் விளக்கிவிடும்.

ஆர்.ஜே.பாலாஜி: இப்போதுதான் டி.ஆர் அவர்களின் பேச்சைப் பார்த்தேன். உங்கள் மீதி மரியாதை இருக்கிறது சார். ஆனால் நீங்கள் செய்தது ஆணவம் நிறைந்த, ஆண் ஆதிக்கத்தை வெளிப்படுத்தும் அவமரியாதையான செயல். என் பார்வையில், நீங்கள் மரியாதையைக் கேட்டுப் பெற முடியாது. சம்பாதிக்க வேண்டும்.

லட்சுமி ராமகிருஷ்ணன்: தன்ஷிகாவுக்கு என் அளவுகடந்த அன்பு. நீ வலிமையான, அற்புதமான பெண். நாங்கள் அனைவரும் உன்னோடு இருக்கிறோம்.

ப்ரியா ஆனந்த்: மிகக் கண்ணியத்துடன் நடந்து கொண்டீர்கள். நீங்கள் செய்தது சரி.

சாந்தனு: நீங்கள் அற்புதமானவர். பக்குவமாக சூழலைக் கையாண்டீர்கள். வாழ்த்துகள். தைரியமாக இருங்கள். உங்களுக்கு நடந்தது சரியல்ல என்பது அனைவருக்கும் தெரியும்.

பிரியதர்சினி : நீ கலங்காதிரு நாம் என்றும் உன் பக்கம் 

காமராஜ்: ஒரு பட விளம்பர நிகழ்ச்சியில் தன்ஷிகா அவர்கள் கண்ணீர் விடுவதைப் பார்த்ததிலிருந்து கலக்கத்திலிருக்கிறேன். இதுவும் கடந்து போகும். தைரியமாக இருங்கள்.

இயக்குநர் கெளரவ்: நீங்கள் எந்தத் தவறும் செய்யவில்லை. கவனம் சிதறாமல் தைரியமாக இருங்கள். உங்கள் கண்ணீர் விலைமதிக்கமுடியாதது. அதை தகுதியானவர்களுக்காக மட்டுமே சிந்த வேண்டும்.

டி.டி : உன் கண்ணீர் பெறுமதி மிக்கது அதை இது போன்ற விடயங்களுக்காக வீணாக்காதே .

இதையும் படிக்கலாமே
BIGG BOSS GRAND FINALE - LAST PROMO
வஞ்சப்புகழ்ச்சியில் கமலை பாராட்டிய ரஜி...
திக் திக் உண்மை பேய்களுடன் வருகிறாள் &...
தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்...
தாயத்தில் ஒளிந்திருக்கும் மருத்துவம்
நடிகை கத்ரீனா கைப்புக்கு முத்தம் கொடுக...
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பா...
இலங்கையில் சுனாமி அறிகுறி..? பீதியில் ...
முகம் சுழிக்கும் பயனர்கள்: வாட்ஸ்அப் இ...
பலிக்கிறதா பஞ்சாங்கம்? 4 நாட்களும் சொன...
இந்த பிரபல நடிகையின் தலையை வெட்டிக்கொண...
கணவன் மனைவி சண்டைக்கு முதல் காரணம் &qu...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •