விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

துரு துரு துருவ் .?

தனது கடுமையான உழைப்பால் தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகர் விக்ரம்.படத்திற்குப் படம் ஏதாவது மாற்றம் தேவை என்பதால் உடல் எடையும் குறைப்பது, கூட்டுவது  வித்தியாசமான வேடங்கள் என்று வித்தியாசம் காட்டும் விக்கிரமுக்கு நிகர் விக்ரம் தான் .இந்த நிலையில் அவரது ரசிகர்களுக்கு இன்னொரு மகிழ்ச்சி. வாரிசு நடிகர்கள் வரிசையில் அடுத்து வருபவர் துருவ்.

விக்ரம் மகனான துருவ்  தற்போது அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைகழகம் ஒன்றில் படித்து வருகிறார். அவரது படிப்பை முடித்த பிறகு விரைவில் படங்களில் நடிக்க இருப்பதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி வந்தன.

அதற்கேற்றாற் போல் துருவ்வும் அவரது டப்மாஷ் வீடியோக்களை சமூக வலைதளங்களில் வெளியிட்டு டிரெண்டாகி வந்தார். இந்நிலையில், துருவ்வின் சினிமா அறிமுகம் குறித்த அறிவிப்பை விக்ரம் அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

அதில் விக்ரம் கூறியிருப்பதாவது, சமீபத்தில் தெலுங்கில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்ற அர்ஜுன் ரெட்டி’ படத்தின் தமிழ் ரீமேக்கில் துருவ் நடிக்க இருப்பதாக விக்ரம் அறிவித்துள்ளார்.

அர்ஜுன் ரெட்டி’ படத்தை இ4 என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தமிழில் தயாரிக்க இருக்கிறது. இதுகுறித்த மற்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இனி விக்ரம் ரசிகர்களுக்கு இரட்டை கொண்டாட்டமாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.துரு துரு துருவிற்கு நாமும் வாழ்த்துகிறோம்.

இதையும் படிக்கலாமே
vijay
ஓவியாவின் புது படம்
'மீண்டும் சென்சார் செய்யச் சொல்ல யாருக...
மெர்சல் சர்ச்சை விடயத்தில் ரஜினி டுவீட...
தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை
அத்துமீறி நடந்துகொண்ட விஜய்.! அசிங்க...
சிவகுமாரை அவமானப்படுத்திய ஜோதிகா. குடு...
நடிகர் பிரபு தேவாவின் அடுத்த காதல் காத...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
தமிழகத்தின் பெரும்புள்ளியை கலாய்த்து எ...
புகைப்படத்தில் இருப்பவர் யார் என்று தெ...
இறந்துபோன நடிகை சௌந்தர்யா குறித்து மறை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •