வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த அனுஷ்கா பிரபாஸ்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

தெலுங்கு நடிகர் பிரபாசும், நடிகை அனுஷ்காவும் நீண்ட நாட்களாக நண்பர்களாக இருந்து வருகின்றனர். ‘பாகுபலி-2’ படத்துக்குப் பிறகு பிரபாசும், அனுஷ்காவும் திருமணம் செய்து கொள்ளப்போவதாக செய்திகள் வெளியாகின. இதை இருவரும் மறுத்தனர். நாங்கள் நல்ல நண்பர்கள். திருமணம் செய்து கொள்ளும் எண்ணம் இல்லை என்று அறிவித்தனர்.

அனுஷ்கா தனது திருமண வதந்தியை பரப்புவதாக உதவியாளரை வேலை விட்டு நீக்கினார். வதந்தி பரப்புவோர் மீது போலீசில் புகார் செய்வேன் என்று எச்சரித்தார். அதன்பிறகு அது பற்றி பேச்சு எழவில்லை.இந்த நிலையில் பிரபாஸ் நடிக்கும் புதிய படத்தில் அனுஷ்கா ஜோடி சேருவதாக கூறப்பட்டது. இதனால் இருவரும் திருமணம் செய்து கொள்ளப் போவதாக மீண்டும் செய்தி பரவியது. ஆனால் இந்த படத்தில் இந்தி நடிகை ஒருவர் ஒப்பந்தம் செய்யப்பட்டார். இதனால் அந்த வதந்தியும் நின்றுபோனது.

சமீபத்தில் மும்பையில் இந்தி நடிகை ரவீணாடாண்டன் ஏற்பாடு செய்து இருந்த விருந்தில் பிரபாசும், அனுஷ்காவும் கலந்து கொண்டனர். இதனால் மீண்டும் இருவருக்கும் நெருக்கம் அதிகமாகி விட்டதாக பேசப்பட்டது.    தற்போது பிரபாஸ், அனுஷ்கா குறித்து புதிய தகவல்கள் இணைய தளங்களில் வெளியாகி உள்ளது. அதில் பிரபாஸ், அனுஷ்கா இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்துவிட்டனர்.

இரண்டு பேருடைய பெற்றோரும் சம்மதம் தெரிவித்து விட்டனர். திருமணம் நடைபெற இருக்கிறது. அனுஷ்கா புதிய படங்களை ஒப்புக்கொள்ளவில்லை. பிரபாஸ் நடித்த ‘சாஹோ’ படப்பிடிப்பு முடிந்து விட்டது. எனவே டிசம்பரில் திருமண நிச்சயதார்த்தம் நடத்த திட்டமிட்டுள்ளனர் என்று தகவல்கள் பரவின. அதிகாரப்பூர்வ செய்திகள் வெளியாகவில்லை.

இந்த நிலையில் இணைய தளத்தில் பரவிய தகவல்கள் வதந்தி என்று தெலுங்கு திரைப்பட நடிகர் சங்கம் தெரிவித்துள்ளது. இது குறித்து ஆந்திரா-தெலுங்கானா திரைப்பட நடிகர் சங்க தலைவர் சிவாஜி ராஜா நிருபர்களிடம் கூறியதாவது:-நடிகர்-நடிகைகள் பற்றி இணைய தளங்களில் உண்மைக்கு மாறாக புரளிகள் பரப்பப்படுகின்றன. பிரபாஸ்-அனுஷ்கா திருமணம் மற்றும் பல நடிகைகள் பற்றிய தவறான செய்திகள் வெளியாகி உள்ளன. இதனால் திரை உலகம் மிகவும் பாதிக்கப்படுகிறது.

எனவே, விஜயவாடா போலீஸ் டி.ஜி.பி. சாம்பசிவராவிடம் இது போன்ற வதந்திகளை பரப்புவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுத்து இருக்கிறோம். திரை உலகை பாதிக்கும் வகையில் வதந்திகளை பரப்புவோருக்கு கடும் தண்டனை விதிக்க சட்டத்தில் வழிவகை செய்ய வேண்டும் என்று அரசுக்கும் கோரிக்கை விடுத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி,சாயிஷா,கோகுல் கூட்டனி கல...
சினிமா நடிகை என்றால் உடலை விற்றுத் தான...
நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந...
THE OPPOSITE - ஓரினச் சேர்க்கையும் கேவ...
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
நிர்வாண புகைப்படம் வெளியிட்டு பிரபல பா...
ஆணாக மாறிய இந்திய இளைஞர்களின் கவர்ச்சி...
நடிகர் விக்ரமின் மனிதநேய செயல் . மற்றை...
நடிகை சினேகாவிற்கு கலா மாஸ்டர் செய்த க...
என்னது சந்தானதுக்கு ஜோடி தீபிகா படுகோன...
நடிகர்களை செருப்பால் அடிக்கச் சொன்ன மல...
பிரபல தயாரிப்பாளரின் மகனான பிரபல நடிகர...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share