மணக்க மணக்க மட்டன் 65 மற்றும் ப்ரைட் ரைஸ் செய்யலாம் வாங்க .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஜம்மியான மட்டன் 65 & ப்ரை ரைஸ்.

தேவையான பொருட்கள்: எலும்பில்லாத மட்டன் – 250 கிராம்.கடலை மாவு – 3 டேபிள்ஸ்பூன்.சோள மாவு – 2 டேபிள்ஸ்பூன்.இஞ்சி – பூண்டு விழுது – 3 டீஸ்பூன்.மிளகாய்த்தூள் – 3 டீஸ்பூன்.சீரகத்தூள் – ஒரு டீஸ்பூன்.சோம்புத்தூள் – முக்கால் டீஸ்பூன்மஞ்சள்தூள் – கால்  டீஸ்பூன்.எலுமிச்சைச் சாறு – 2 டீஸ்பூன்  (அல்லது) வினிகர் – ஒரு டீஸ்பூன்.உப்பு – தேவையான அளவு

எண்ணெய் – பொரிக்கத் தேவையான அளவு

செய்முறை :? 1. மட்டன் துண்டுகளை நன்றாகக் கழுவி, குக்கரில் போட்டு உப்பு சேர்த்து 30 நிமிடங்கள் வேகவைத்து இறக்கி, தண்ணீரை வடித்து ஆறவிடவும் (அந்தத் தண்ணீரில் மட்டன் சூப் செய்யலாம் அல்லது குஸ்கா, குழம்பு செய்யும்போது பயன்படுத்திக்கொள்ளலாம்).2. ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, சோள மாவு, இஞ்சி-பூண்டு விழுது, மிளகாய்த்தூள், சீரகத்தூள், சோம்புத்தூள், மஞ்சள்தூள், எலுமிச்சைச் சாறு, உப்பு அனைத்தையும் சேர்த்து சிறிதளவு தண்ணீர் விட்டு கெட்டியான பேஸ்ட் பதத்தில் செய்து கொள்ளவும். (தண்ணீர் குறைவாகவே சேர்க்கவும்).3. ஆறிய மட்டன் துண்டுகளை மசாலா கலவையில் நன்றாக கலந்து 1 மணிநேரம் குளிர்சாதன பெட்டியில் வைக்கவும்.4. அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் சேர்த்து நன்கு சூடானதும், மட்டன் துண்டுகளை போட்டு பொரித்து எடுக்கவும். 5. மேல் மாவு வெந்து மொறுமொறுப்பாகும் வரை பொரித்தால் போதும். சூப்பரான மட்டன் 65 ரெடி.

குறிப்பு :நன்கு காய்ந்த எண்ணெயில் பொரித்தால், மட்டன் 65, நீண்ட நேரம் க்ரிஸ்பியாக இருக்கும். காயாத எண்ணெயில் பொரித்தால் மட்டன் அதிக எண்ணெய் குடிக்கும்.அதிக நேரம் பொரித்தால் மட்டன் ரப்பர் அல்லது கல் போன்றாகிவிடும். மாவு மட்டும்தான் வேக வேண்டும், மட்டன் ஏற்கெனவே வெந்துவிட்டது என்பதை நினைவில் கொள்ளவும்.

“பிரைட் ரைஸ்” தேவையான் பொருட்கள்: (இரண்டு பேருக்கு) பாசுமதி அரிசி : 1 கப் முட்டை கோஸ் : 1/4 கிலோ (பொடியதாக நீளவாக்கில் நறுக்கவும்)கேரட் : 1 (பொடியதாக நறுக்கவும்) வெங்காயத் தாள் : 5 (பொடியதாக நறுக்கவும்)கொடைமிளகாய் : 1 (சிறு சிறு துண்டுகளாக நறுக்கவும்) வெங்காயம் : 1 சிறியது ( நீளவாக்கில் நறுக்கியது) பீன்ஸ் : 10 (பொடியதாக நறுக்கியது) மிளகு தூள் : சிறிதளவு.சோயா சாஸ் : 2 தே. கரண்டி.அஜினமோட்டோ : 1 1/2 தே. கரண்டி.உப்பு தேவையான அளவு .எண்ணை : 1/4 கப்.முட்டை : 2

“”வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ்”” செய்முறை:

பாசுமதி அரிசியை நன்கு களைந்து ஒரு தே. கரண்டி எண்ணையுடன் ஒரு கப் தண்ணீர் சேர்த்து நன்கு வேகவிடவும். வெந்த பின் வாயகன்ற பாத்திரத்தில் கொட்டி நன்றாக ஆற விடவும்.உதிரி உதிரியாக இருக்க வேண்டும். முக்கால் பாகம் வெந்தால் போதும்.(முதல் நாளே செய்து ப்ரிட்ஜிலும் வைத்து விடலாம்) முட்டையில் 2 தே.கரண்டி எண்ணை, உப்பு, மிளகு தூள் சேர்த்து பொரித்து தனியாக வைக்கவும். கனமான பாத்திரத்தில் சிறிது எண்ணை விட்டு வெங்காயம்,முட்டைகோஸ், கேரட், வெங்காயத்தாள்,குடைமிளகாய்,பீன்ஸ் ஆகியவற்றை போட்டு வதக்கி மூடி வைக்கவும். (தண்ணீர் விடக்கூடாது). சிறிது நேரத்திற்கு பின் சோயா சாஸ், அஜினமோட்டோ, உப்பு இவற்றை சேர்த்து கிளறி உடன் சாதத்தையும் போட்டு கிளரி மூடி வைக்கவும். சிறிது நேரத்திற்கு பின் பொரித்த முட்டையை போட்டு கிளரி விடவும்.சுவையான வெஜிடபில்/முட்டை ப்ரைட் ரைஸ் ரெடி.?

 

“சிக்கன் ப்ரைட் ரைஸ் செய்ய”மேற்கண்ட செய்முறையில் பொரித்த முட்டைக்கு பதிலோ அல்லது முட்டையுடனோ சேர்க்கலாம்.1) தேவையான அளவு சிக்கனுடன் தண்ணீரில் உப்பு, மிளகு தூள் சேர்த்து வேகவைத்து உதிர்த்து வைத்துக்கொள்ளவும். கடைசியாக சேர்த்து கிளறி விடவும்.2)சிக்கனை சிறிய துண்டுகளாக்கி அதில் உப்பு,மிளகாய்தூள்,சிறிதளவு எலுமிச்சை சாறு,கேசரிபொடி,சிறிதளவு கடலை மாவு போட்டு பிசறி விடவும். கொஞ்சம் கொஞ்சமாக அதனை எண்ணையில் போட்டு பொரித்து எடுத்து வைத்துக் கொண்டு இறுதியாக சாதத்தில் கிளறிவிடவும்.

குறிப்பு: தேவைப்பட்டால் சில்லி சாஸ் சேர்த்துக்கொள்ளவும் காரத்திற்கு.அஜினமோட்டோ , வெங்காயம் இவை தேவையில்லையென்றால் ஒதுக்கி விடவும்.சூடாக டொமேடோ சாஸுடன் பரிமாறவும்.!

இதையும் படிக்கலாமே
இளஞ்சூடான வெந்நீரை உபயோகிப்பதால் கிடைக...
இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிட...
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
மூளைக்காய்ச்சல்
கூந்தல் பிரச்சனைகளுக்கு தீர்வு தரும் ந...
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி
தலைமுடி வேகமாக வளர திராட்சை விதைகளை எப...
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன...
தொப்பையை மிக விரைவாக குறைக்க உதவும் அற...
இது பொய்யல்ல நிஜம்..! எந்த வேலை செய்தா...
கல்லா கட்டும் காடை வளர்ப்பு. மாதம் 30,...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •