சைவ பிரியர்களுக்கு சந்தோசம் பொங்க வைக்கும் சுவையான சமையல் குறிப்புகள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares

” அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?””

மணத்தக்காளி -அப்பளக் குழம்பு தேவையானவை: மணத்தக்காளி வத்தல் – ஒரு கப், சிறிய உளுந்து அப்பளம் – 2, கடுகு – அரை டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, கடலைப்பருப்பு, உளுத்தம் பருப்பு , சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், வெந்தயம் – அரை டீஸ்பூன், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் – ஒரு ஸ்பூன் அல்லது தேவைகேற்ப , புளி – நெல்லிக்காய் அளவு (சிறிது தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், மஞ்சள், உப்பு – தேவையான அளவு, நல்லெண்ணெய் – ஒரு கப் அல்லது தேவையான அளவு .செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, பெருங்காயம், மஞ்சள், வெந்தயம், சீரகம், கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், உளுத்தம் பருப்பை போட்டு வறுக்கவும். இத்துடன் மணத்தக்காளி வத்தல் மற்றும் சாம்பார் பொடி சேர்த்து புரட்டவும். இதில் புளித் தண்ணீர், உப்பு சேர்த்து நன்றாக கொதிக்க விட்டு இறக்கவும். கறிவேப்பிலை, கொத்த மல்லி வதக்கியோ, பச்சையாகவோ (அவரவர் விருப்பப் படி) சேர்க்கவும். இறுதியில், அப்பளத்தை சிறு துண்டுகளாக வறுத்து குழம்பு கொத்தித்ததும் அதில் போட்டு கலக்கவும். அப்பளத்தை வத்தலோடு வறுத்தும் செய்யலாம். ஆனால் அதை விட , இறுதியில் சேர்ப்பது நன்றாக இருக்கும்.வாய்ப் புண், வயிற்றுப் புண் இருந்தால் இந்த மணத்தக்காளி குழம்பு அவற்றை குணப்படுத்தும் என்பது கிராமத்தாரின் நம்பிக்கை.

முருங்கைக்கீரை பொரித்த குழம்பு தேவையானவை: ஆய்ந்த முருங்கைக்கீரை – இரண்டு கைப்பிடி அளவு, பாசிப்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 1, சீரகம் – ஒரு டீஸ்பூன், தேங்காய் துருவல் – அரை கப், உளுத்தம்பருப்பு, மிளகு – தலா கால் டீஸ்பூன், எண்ணெய் – 2 ஸ்பூன், கடுகு – அரை டீஸ்பூன், மஞ்சள், உப்பு , பெருங்காயம் , கறிவேப்பிலை, கொத்த மல்லி – தேவையான அளவு.செய்முறை: முருங்கைக்கீரையை சிறிது உப்பு சேர்த்து வேக விடவும். பாசிப்பருப்பை சிறிது மஞ்சள் சேர்த்து வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், சீரகம், உளுத்தம்பருப்பு, மிளகு, தேங்காய் துருவல் ஆகியவற்றை எண்ணெய் விட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்தவற்றுடன் வேக வைத்த கீரையையும் சேர்த்துக் கிளறவும். இதில் வெந்த பாசிப்பருப்பு , மஞ்சள் மற்றும் உப்பு சேர்த்து கொதிக்க விட்டு இறக்கவும். கடைசியில் கடுகு , பெருங்காயம் தாளித்துக்கொள்ளுங்கள்.

பருப்பு உருண்டை காரக்குழம்பு தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப், காய்ந்த மிளகாய் – 4, புளி – ஒரு எலுமிச்சை அளவு, தக்காளி-2 , சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் ,உப்பு – தேவையான அளவு, கடுகு, வெந்தயம் – தலா கால் டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு(1 ஸ்பூன் ) , இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ), பச்சை மிளகாய் (3 ) , தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) , உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது , கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவுசெய்முறை: துவரம்பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். கடாயில் எண்ணெய் விட்டு, அரைத்த பருப்புக் கலவையை போட்டுக் கிளறவும். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும்.பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்

கடலை பருப்பு உருளை உருண்டை மசாலாக் குழம்பு தேவையானவை: கடலை பருப்பு – ஒரு கப், உருளைக் கிழங்கு -1 /4 கிலோ , காய்ந்த மிளகாய் – 4, புளி – ஒரு எலுமிச்சை அளவு, தக்காளி-2 , சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள் ,உப்பு – தேவையான அளவு, கடுகு, சீரகம்,சோம்பு,வெந்தயம் – தலா அரை டீஸ்பூன், பெருங்காயத்தூள் – சிறிதளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், சோம்பு(1 ஸ்பூன் ) , இஞ்சி (ஒரு இன்ச் துண்டு ), பச்சை மிளகாய் (3 ) , தேங்காய் (ஒரு டேபிள் ஸ்பூன்) , உடைத்த கடலை(கால் கப்) அரைத்த மசாலா விழுது , கறிவேப்பிலை, கொத்தமல்லி – தேவையான அளவுசெய்முறை: கடலை பருப்பை ஒரு மணி நேரம் ஊற வைத்து, காய்ந்த மிளகாய் , சோம்பு, சிறிது இஞ்சி, பெருங்காயத் தூள், மஞ்சள் எல்லாம் சேர்த்து வடை மாவு பதத்துக்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும். மாவு சற்று நீர்த்துப் போனால், அரிசி மாவை சேர்த்துக் கெட்டிப் படுத்தலாம். இத்துடன் உப்பு சேர்த்துப் பிசைந்து, சிறு உருண்டைகளாக உருட்டவும். இதை இட்லி தட்டில் வைத்து ஆவியில் வேக விடவும். குழம்பில் கரைக்க, இந்த மாவில் சற்று தனியாக எடுத்து வைக்கவும் . உருளைக் கிழங்கையும் மஞ்சள் , சிறிது உப்பு சேர்த்து தோல் நீக்கி, வேக வைக்கவும் .பின்பு அடுப்பில் கடாயை வைத்து, புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து, அதில் நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி, உப்பு சேர்த்து கொதிக்க வைத்து, பிறகு அரைத்த சோம்பு மசாலாவை போட்டு பச்சை வாசனை போக வதக்கவும். பின் வேக வைத்த உருண்டைகள் போக மீந்திருக்கும் வடை மாவை நீரில் கரைத்து இதில் சேர்க்கவும். சற்று நேரத்தில் நன்கு தள தள வென்று கொதித்து கெட்டியாய் குழம்பு போல் ஆகும்.பிறகு வெந்த உருண்டைகளைப் போடவும். கடுகு, வெந்தயம், பெருங்காயத்தூள் தாளித்து இறக்கவும். கறிவேப்பிலை , கொத்தமல்லி தழை தூவி அலங்கரிக்கவும்.வடை மாவு போத வில்லை என்றால் குழம்பில் கரைக்க , பஜ்ஜி போடும் கடலை மாவை பயன் படுத்தலாம்.இதில் குடை மிளகாயையும் வதக்கிச் சேர்க்கலாம். பிரமாதமாய் இருக்கும். சற்று மசித்த வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்த்துக் கொள்ளலாம். சூடான பச்சரிசி சாதத்தில் உருண்டைகளைப் போட்டுப் பிசைந்து, குழம்பு தொட்டு சாப்பிடலாம். . இதற்கு சுட்ட அப்பளம் நன்றாக சேரும் . தோசைக்கும் மிக நன்றாக இருக்கும்.

பாகற்காய் பிட்ளை குழம்பு தேவையானவை: மிதி பாகற்காய் – ஒரு கைப்பிடி (அ) பெரிய பாகற்காய் – 1, தேங்காய் துருவல் – அரை கப், காய்ந்த மிளகாய் – 2, மஞ்சள், உளுத்தம் பருப்பு , மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா – தலா ஒரு டீஸ்பூன், புளித் தண்ணீர் – ஒரு கப், சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், துவரம் பருப்பு – ஒரு கப், கடலை பருப்பு -1/2 கப் , உப்பு – தேவையான அளவு, கறிவேப்பிலை, கடுகு, வெந்தயம், சீரகம், பெருங்காயம் ,எண்ணெய் – தலா ஒரு ஸ்பூன்.செய்முறை: கடலை மற்றும் துவரம் பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். காய்ந்த மிளகாய், மிளகு, சீரகம், பச்சரிசி, தனியா, உ.பருப்பை தனியாக எண்ணெய் விட்டு மஞ்சளுடன் வறுத்துக் கொள்ளவும். இதனுடன் தேங்காய் துருவலை சேர்த்து அரைத்து, வேக வைத்த பருப்புடன் சேர்த்துக் கலந்து கொள்ளவும். பாகற்காயை சிறு துண்டுகளாக நறுக்கி, எண்ணெயில் வதக்கவும். இதில் புளித் தண்ணீரை விட்டு சாம்பார் பொடி, உப்பு சேர்த்துக் கொதிக்க விடவும். இத்துடன் ஏற்கெனவே கலந்து வைத்துள்ள கலவையை சேர்க்கவும். வெந்ததும் கடுகு, சீரகம், பெருங்காயம் ,கறிவேப்பிலை, வெந்தயம் தாளித்துக் கொட்டி இறக்கவும் “தக்காளிக்காய் குழம்பு”

தேவையானவை: தக்காளிக்காய் – 6, துவரம் பருப்பு – அரை கப், பச்சைமிளகாய் – 1, சாம்பார் பொடி – 2 டீஸ்பூன், மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, புளித் தண்ணீர், தேங்காய் துருவல் – தலா அரை கப், உப்பு , பெருங்காயம் – தேவையான அளவு, கடுகு, சீரகம் , எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன், கறிவேப்பிலை – சிறிதளவு.செய்முறை: தக்காளிக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி உப்பு, மஞ்சள்தூள் , சாம்பார் பொடி போட்டு கொதிக்க வைக்கவும். இதில் புளித் தண்ணீரை விடவும். பச்சைமிளகாய், தேங்காய் துருவலை அரைத்து சேர்க்கவும். துவரம் பருப்பை வேக வைத்து இதனுடன் சேர்க்கவும். எல்லாம் சேர்ந்து கொதித்து வந்ததும் , கடுகு , சீரகம் , பெருங்காயம், கறிவேபிழை மற்றும் கொத்து மல்ல தாளித்து கொட்டி இறக்கவும்.புளி சேர்க்காமலும் செய்யலாம்.

கூட்டு வடக குழம்பு தேவையானவை: கூட்டு வடகம் – 100 கிராம், புளித் தண்ணீர் – அரை லிட்டர், சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், கடுகு, வெந்தயம், கடலைப்பருப்பு , பெருங்காயம் , மஞ்சள் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 1, உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 4 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, வெந்தயம் தாளித்து, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியை போட்டு லேசாக வறுத்து, கூட்டு வடகத்தை அப்படியே சேர்க்கவும். வடகம் நன்கு வறுபட்டதும், புளித் தண்ணீரை விட்டு, உப்பு, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்த்துக் கொதிக்க விட்டு இறக்கவும். இதில், வேக வைத்த கருப்பு அல்லது வெள்ளை கொண்டைக்கடலையை சேர்த்தும் செய்யலாம் (வடகத்தை சேர்க்கும்போது சேர்க்கலாம்).

மல்டி கீரை குழம்பு தேவையானவை: பொடியாக நறுக்கிய வெந்தயக்கீரை, முள்ளங்கிக்கீரை, மணத்தக்காளிக்கீரை, முருங்கைக்கீரை, வேக வைத்த துவரம் பருப்பு – தலா ஒரு கப், நெய் – 2 டீஸ்பூன், புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 2 டேபிள்ஸ்பூன், மஞ்சள் – 1 ஸ்பூன் உப்பு – தேவையான அளவு, எண்ணெய், வெந்தயம், கடுகு, சீரகம், பெருங்காயம் – தலா அரை டீஸ்பூன்.செய்முறை: கீரைகளை பொடியாக நறுக்கி, கழுவி, நெய் விட்டு வதக்கவும். புளியை தண்ணீர் விட்டுக் கரைத்து , அதில் மஞ்சள், சாம்பார் பொடி, உப்பு சேர்த்து, நறுக்கிய கீரைகளை சேர்த்து நன்றாகக் கொதிக்க விடவும். இதில் வேக வைத்த துவரம் பருப்பையும் சேர்க்கவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, சீரகம், பெருங்காயம், வெந்தயத்தை தாளித்துக் கொட்டி இறக்கவும்.துவரம்பருப்பிற்கு பதில் பாசி பருப்பையும் உபயோகப் படுத்தலாம்.     “பத்தியக் குழம்பு”

தேவையானவை: புளி – 2 எலுமிச்சை அளவு, சுண்டைக்காய் வத்தல் – 10, காய்ந்த மிளகாய் – 1, சாம்பார் பொடி – 3 டேபிள்ஸ்பூன், கடுகு, சீரகம்,வெந்தயம், துவரம்பருப்பு – தலா அரை டீஸ்பூன், எண்ணெய் – 4 டேபிள்ஸ்பூன், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை, கொத்துமல்லி – சிறிதளவு, உப்பு – தேவையான அளவு.செய்முறை: கடாயில் எண்ணெய் விட்டு கடுகு, சீரகம், வெந்தயம் , துவரம் பருப்பு தாளித்து, சுண்டைக்காய், காய்ந்த மிளகாய், பெருங்காயத்தூள், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும். இதில் சாம்பார் பொடி சேர்த்து வறுத்து, புளியை தண்ணீரில் கரைத்து ஊற்றவும். இத்துடன் உப்பு சேர்த்து, குழம்பு கொதித்ததும் இறக்கவும். குழம்புகாய்ச்சலாய் வந்த வாய்க் கசப்பு, வயிற்றுப் பிரச்னைக்கும் இது நல்லது

“மொச்சை மசாலா குழம்பு”தேவையானவை: மொச்சைப்பருப்பு – ஒரு கப், கரம் மசாலாத்தூள் – ஒரு டீஸ்பூன், சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், தேங்காய்ப் பால் – அரை கப், உப்பு – தேவையான அளவு, புளி – நெல்லிக்காய் அளவு (தண்ணீரில் கரைத்துக் கொள்ளவும்), துவரம் பருப்பு, பாசிப்பருப்பு – தலா அரை கப், கடுகு, வெந்தயம்,சீரகம், பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன். கறிவேப்பிலை , கொத்து மல்லி -தேவையான அளவு.  செய்முறை: புளிக் கரைசலுடன் சாம்பார் பொடி, கரம் மசாலாத்தூள், உப்பு சேர்த்து மொச்சையைப் போட்டு கொதிக்க விடவும். குழம்பு நன்றாக கொதித்ததும், வேக வைத்த துவரம் பருப்பு, பாசிப்பருப்பு சேர்த்து, தேங்காய்ப் பாலை விடவும். குழம்பு வெந்ததும், எண்ணெயில் கடுகு, வெந்தயம் முதலியவற்றி தாளித்துக் கொட்டி கே.வேப்பிலை, கொ.மல்லி தூவி பரிமாறவும்.

பூண்டு-வெங்காயக் குழம்பு தேவையானவை: நாட்டுப் பூண்டு – 4 பல், சாம்பார் வெங்காயம் – 10, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, காய்ந்த மிளகாய் – 1, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம்,பெருங்காயம் – தலா ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை கப், கறிவேப்பிலை ,கொத்தமல்லி – சிறிதளவு, புளித் தண்ணீர் – ஒரு கப்.செய்முறை: பூண்டை தோல் உரித்துக் கொள்ளவும். சாம்பார் வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, கடுகு, மிளகு,சீரகம்,வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை , கொத்தமல்லி தாளித்து, உரித்த பூண்டு, நறுக்கிய வெங்காயத்தைப் போட்டு வதக்கவும். இதில் சாம்பார் பொடியைப் போட்டு வறுத்து, புளித் தண்ணீரை ஊற்றி, உப்பு சேர்த்து, கொதித்ததும் இறக்கவும்.விருப்பப்பட்டால் கொதிக்கும்போது ஒரு சிறு துண்டு வெல்லம் சேர்க்கலாம். தக்காளியும் சேர்க்கலாம். ருசி கூடும். இந்தக் குழம்பு , சளித் தொல்லையால் அவதிப் படும்போது மருந்தாக சாப்பிட ஏதுவானது.

மல்டி வெஜிடபிள் குழம்பு

தேவையானவை: துவரம்பருப்பு – ஒரு கப், குடமிளகாய், கேரட், முருங்கைக் காய், உருளைக் கிழங்கு – தலா 1, பீன்ஸ் – 10, அவரைக்காய் – 6, பரங்கி, பூசணி – தலா ஒரு துண்டு (சிறியது), புளி – எலுமிச்சை அளவு, சாம்பார் பொடி – 4 டீஸ்பூன், மசாலாத் தூள் – அரை டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு, கறி வேப் பிலை, எண்ணெய் – சிறிதளவு, பெருங்காயத்தூள், தேங்காய் துருவல், கடுகு, தனியா, கடலைப்பருப்பு,பச்சரிசி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 2.

செய்முறை: தேங்காய் துருவல், தனியா, கடலைப்பருப்பு, பச்சரிசி, காய்ந்த மிளகாய் ஆகியவற்றை எண்ணெயில் வறுத்து அரைத்துக் கொள்ளவும். துவரம் பருப்பை நன்றாக வேக வைத்துக் கொள்ளவும். குடமிளகாய், கேரட், பீன்ஸ், அவரைக்காய், உருளைக்கிழங்கைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முருங்கைக்காயை விரல் அளவுக்கு நறுக்கவும். பரங்கி, பூசணியை தோல் சீவி நறுக்கவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் நறுக்கி கழுவிய எல்லா காய்களையும் போட்டு வதக்கவும். சிறிது வதங்கியதும், புளியைக் கரைத்து விட்டு, சாம்பார் பொடி, உப்பு மற்றும் மசாலாத்தூள் போட்டு கலக்கி, கொதிக்க விடவும். இதில், வறுத்து அரைத்து வைத்திருக்கும் விழுது மற்றும் வெந்த பருப்பு இரண்டையும் கரைத்து சேர்த்துக் கலக்கவும். குழம்பு நன்கு வெந்ததும், எண்ணெயில் கடுகு, கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் தாளித்துக் கொட்டி இறக்கவும். 

“வேர்க்கடலை குழம்பு” தேவையானவை: பச்சை வேர்க்கடலை – ஒரு கப், பெரிய தக்காளி-1 ,புளி – இரண்டு பெரிய நெல்லிக்காய் அளவு, காய்ந்த மிளகாய், சாம்பார் பொடி – 3 டீஸ்பூன், கடுகு ,பெருங்காயத்தூள் – அரை டீஸ்பூன், கடலைப்பருப்பு, வெந்தயம் – தலா ஒரு டீஸ்பூன், உப்பு – தேவையான அளவு. செய்முறை: வேர்க்கடலையை அரை மணி நேரம் ஊற வைத்து வேக விடவும். வாணலியில் தக்காளியை சிறிது எண்ணெயில் வதக்கி, ஒரு பாத்திரத்தில் புளியைக் கரைத்து ஊற்றவும். இதனுடன் உப்பு, சாம்பார் பொடி சேர்த்து, வேக வைத்த கடலையையும் சேர்த்து கொதிக்க விடவும். கடாயில் எண்ணெய் விட்டு, காய்ந்ததும் கடுகு, கடலைப்பருப்பு, வெந்தயம், கறிவேப்பிலை, பெருங்காயத்தூள் போட்டுத் தாளித்து, குழம்பில் கொட்டி இறக்கவும்.

முருங்கைக்காய் மிளகூட்டல் தேவையானவை: முருங்கைக்காய் – 6, தேங்காய் துருவல் – அரை கப், துவரம்பருப்பு – ஒரு கப், பச்சரிசி, மிளகு, சீரகம் – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, உப்பு – தேவையான அளவு, கடுகு, எண்ணெய் – தலா ஒரு டீஸ்பூன்.

செய்முறை: முருங்கைக்காயை பெரிய துண்டுகளாக நறுக்கி, உப்பு சேர்த்து வேக விடவும். துவரம் பருப்பை தனியாக வேக வைத்து எடுக்கவும். கடாயில் எண்ணெய் ஊற்றி, அரிசி, சீரகம், மிளகு, காய்ந்த மிளகாயை போட்டு வறுத்து, தேங்காய் துருவலை சேர்த்து நன்றாக அரைக்கவும். வேக வைத்த முருங்கைக்காய்களின் நடு சதைப்பகுதியை, ஒரு ஸ்பூனால் சுரண்டி எடுத்து தோலை நீக்கி விடவும். கடாயில் வேக வைத்த பருப்பு, முருங்கைக்காய் விழுது, அரைத்த தேங்காய் விழுதை (தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்த்து கொள்ளலாம்) சேர்த்து, கொதிக்க விட்டு இறக்கவும். எண்ணெயில் கடுகு தாளித்துக் கொட்டவும். முருங்கை மிளகூட்டலுக்கு , கத்திரிக்காய் துகையல் நன்று

“தாளகக் குழம்பு” தேவையானவை: கொத்தவரங்காய், பீன்ஸ் – தலா 10, சிவப்பு பரங்கிக்காய் – ஒரு துண்டு, கேரட், சௌசௌ – 1, வாழைக்காய் – ஒரு சிறிய துண்டு, தக்காளி-2 , புளி – பெரிய நெல்லிக்காய் அளவு, மஞ்சள்தூள் – ஒரு சிட்டிகை, உப்பு – தேவையான அளவு, எள், கடலைப்பருப்பு, அரிசி, உளுத்தம்பருப்பு, தனியா, எண்ணெய், சாம்பார் பொடி – தலா ஒரு டீஸ்பூன், காய்ந்த மிளகாய் – 4, தேங்காய் துருவல் – அரை கப், கடுகு , சீரகம் – ஒரு டீஸ்பூன், பெருங்காயம், உப்பு – தேவையான அளவு.செய்முறை: வெறும் கடாயில் எள்ளைப் போட்டு வறுத்து அரைத்துக் கொள்ளவும். அதே கடாயில் சிறிது எண்ணெய் விட்டு, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய், தனியாவை போட்டு வறுத்துக் கொள்ளவும். தேங்காய் துருவலையும், அரிசி மற்றும் உளுத்தம்பருப்பையும் தனித் தனியே வறுக்கவும். அரிசி, தேங்காய் துருவல் நீங்கலாக, மற்ற எல்லாவற்றையும் தனித்தனியாக அரைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் தக்காளியை வதக்கி, காய்கறிகளைப் பொடியாக நறுக்கி மஞ்சள்தூள், உப்பு சேர்த்து, புளியைக் கரைத்து ஊற்றி கொதிக்க விடவும். இதில் தனியா, கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் வறுத்து அரைத்த பொடியைப் போடவும். பின்னர், எள்ளுப்பொடி சேர்த்து, குழம்பு கொதித்ததும், அரிசி மற்றும் உளுந்தை அரைத்து இதனுடன் சேர்க்கவும். தேங்காய் துருவலை வறுத்துப் போட்டு, பெருங்காயம், கடுகு , சீரகம் தாளித்துக் கொட்டி இறக்கவும்.

மாங்காய் வத்தல் குழம்பு தேவையானவை: மாங்காய் வத்தல் – 10 துண்டுகள், தக்காளி-1 , காய்ந்த மிளகாய் – 4, கடலைப்பருப்பு, துவரம்பருப்பு – ஒரு டீஸ்பூன், கடுகு, பெருங்காயம், உளுத்தம்பருப்பு சிறிதளவு, மஞ்சள்,உப்பு – தேவையான அளவு, எண்ணெய் – 2 டீஸ்பூன், கறிவேப்பிலை, கொத்துமல்லி- சிறிதளவு .

செய்முறை: மாங்காய் வத்தலை சிறிதளவு தண்ணீரில் 20 நிமிடம் ஊற வைக்கவும். கடலைப்பருப்பு, காய்ந்த மிளகாய் மற்றும் துவரம்பருப்பை எண்ணெய் விட்டு வறுக்கவும். இத்துடன் ஊற வைத்த மாங்காய் வத்தலையும் சேர்த்து நன்றாக அரைக்கவும். கடாயில் தக்காளியை வதக்கி, இந்தக் கலவையை சேர்த்து, அத்துடன் உப்பு , மஞ்சள் சேர்த்து கொதிக்க விடவும். குழம்பு நன்கு கொதித்ததும், எண்ணெயில், கடுகு, பெருங்காயம்,உளுத்தம்பருப்பு தாளித்துக் கொட்டி இறக்குமுன் கறிவேப்பிலை, கொத்தமல்லி தூவி மேலும் ஒரு கொத்தி வந்ததும் பரிமாறவும் . புளி சேர்க்காமல் செய்யப்படும் குழம்பு இது. மாங்காய் சீஸனின்போது அதிகமாக வத்தல் போட்டு வைத்துக் கொண்டால்காய்கறி குழம்பு தேவையானவை: கேரட், தக்காளி, கத்தரிக்காய், குடமிளகாய், பச்சைமிளகாய் – தலா 1, சின்ன உருளைக் கிழங்கு , பீன்ஸ் – 6, பாசிப்பருப்பு – ஒரு கப், சாம்பார் பொடி, சோம்பு , போட்டுக் கடலை , தேங்காய் அரைத்த பொடி – 2 டீஸ்பூன், இஞ்சி – ஒரு சிறு துண்டு, புளித் தண்ணீர் – ஒரு கப், உப்பு , மஞ்சள் – தேவையான அளவு, பொடியாக நறுக்கிய கொத்தமல்லி – சிறிதளவு, கடுகு – ஒரு டீஸ்பூன், எண்ணெய் – அரை டீஸ்பூன்.

செய்முறை: காய்கறிகளை பொடியாக நறுக்கிக் கொள்ளவும். பாசிப்பருப்பை வேக வைத்துக் கொள்ளவும். புளித் தண்ணீரை கடாயில் விட்டு, சாம்பார் பொடி, சோம்பு பொடி ,உப்பு, மஞ்சள், நறுக்கிய காய்களைப் போட்டுக் கொதிக்க விடவும். காய் ஓரளவு வெந்ததும், வேக வைத்த பருப்பை இதனுடன் சேர்க்கவும். குழம்பு நன்கு வெந்ததும், கடுகு தாளித்து கொட்டி, கொத்தமல்லி போட்டு இறக்கவும். காய்களை சிறிது எண்ணெயில் வதக்கியும் சேர்க்கலாம். இட்லிக்கு பொருத்தமாக இருக்கும் இந்தக் காய்கறி குழம்பு. தேங்காய் தவிர்த்தும் .சோம்பு மசாலா பொடி தவிர்த்தும் இதை செய்யலாம் “அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?”

இதையும் படிக்கலாமே
Gayathiri Talks about Raiza
டூப்பு ஜிலேபி (தீபாவளி சிறப்பு இனிப்பு...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
சுவையான திக் கிரீம் சாக்லட் கேக் செய்ய...
நினைத்தாலே நாவுறும் செட்டிநாடு நாட்டு ...
இறால் என்றாலே எல்லாருக்கும் பிடிக்கும்...
அதிகமாக பகிருங்கள்: பசியின்மையா? உங்கள...
அதிகமாக பகிருங்கள்: வீட்டிலே எளிதாக தய...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
குழந்தைகளுக்கு பிடித்த கேழ்வரகு உருளைக...
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.3K
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1.3K
  Shares