மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான தீர்வும் .

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share

மாதவிடாய் பிரச்சனைகளும் அதற்கான மருந்துகளும்–“”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?””ஆயுர்வேத மருத்துவத்தின் அற்புதங்கள்,பெண்களுக்கு வரும் பிரச்சனைகளில் உடல் அளவிலும், மனதளவிலும் பெரும் பாதிப்பை  ஏற்படுத்துவது மாதவிடாய் கோளாறுகள்தான். இப்பிரச்சனைகளுக்கு மருத்துவரை சந்தித்து ஆலோசனைகளுக்கு பெறுதற்கும், சிகிச்சைச் செய்து கொள்வதற்கும் பெரும்பாலான பெண்கள் வெட்கத்தின் காரணமாகவும், கூச்ச சுபாவத்தாலும் வெளியில் சொல்ல முடியாமல் பல வேதனைகளை அனுபவித்து வருகின்றனர்.   கருப்பை, யோனி, சினைப் பைகள், கடிதமம், நிதம்பம், உதடு, மூத்திரத்தாரை, பூ நரம்பு,  யோனித்துவாரம் முதலியவற்றைதான் பெண்களின் ஜன இந்திரியங்கள் என்று அழைக்கின்றோம்.

கருப்பையில் இருந்து வெளியே வரும் குழாய்க்கு யோனி என்று பெயர் வெளிப்பாகத்தில் யோனித்துவாரம் காணப்படும். யோனியில் இருக்கின்ற தசைகள் நீளவும், சுருங்கவும் திறன் படைத்தவை. யோனியின் உள் நீளம் சுமார்3 அங்குலமும், வெளி நீளம் 6 அங்குலமும் இருக்கும். நீர் தாரையின் மேல் முளைப்போன்று உறுப்பு இருக்கிறது. அதற்கு பூ நரம்பு (க்ளிடோரியஸ்) என்று அழைக்கப்படுகிறது.கருப்பையின் மேல் பாகத்தில் பெல்லோபின் குழாய்க் போகின்றன. ஓவரிஸ் என்று சொல்லப்படும் சினைப் பை பெல்லோபின் குழாயின் முனையில் இருக்கிறது. பூ நரம்பு, யோனித்துவாரம், நீர்ப்பை, நீர்த்துவாரம் முதலிய இடங்களில் மிருதுவான மியூகஸ்மெம்ரேன்கள் என்ற தோல் உண்டு. இத்தோலுக்கு சிறு உதடுகள் என்று பெயர். இது அநேகமாக வெளியே தெரியாது. ஏனெனில் இதன் மேல் பெரிய உதடுகள் மூடிக்கொண்டிருக்கிறது. உரோமங்கள் உள்ள மேலான பாகத்திற்கு கடிதமம் எனப்பெயர்.ஒரு பெண் ஒன்பது வயது முதல் பதினைந்து வயத்திற்குள்ளாக பருவம் அடையும் வாய்ப்பு உண்டாகிறது. கட்கத்திலும் பெண் குறியிலும் ரோமம் முளைக்கிறது. ஸ்தானங்கள் முளைத்து பருக்கின்றன. உடம்பு கிடு, கிடுவென்று வளர்கின்றது. மாதவிடாய் வந்து விடுகிறது. இதைத்தான் பூப்பு என்று சொல்கின்றோம். ஒரு சில, பெண்களுக்கு 17 வயது வரை கூட மாத போக்கு ஏற்படாமல் இருப்பதுண்டு. உடல் ஆரோக்கியமாக இருக்கும் பட்சத்தில் கவலைப்பட தேவையில்லை. பெரும்பாலும் தாய் எந்த வயதில் பூப்பு அடைந்தாளோ அதே வயதில் அவருக்கு பிறந்த பெண் குழந்தைகளும் பருவம் அடைகிறார்கள் என்பதை நடைமுறையில் பார்க்க முடிகிறது. இதில் ஒரு சிலர் விதி விலக்காகவும் இருக்கிறார்கள் என்பதை மறுப்பதில்லை.

கருப்பையும், சூற்பைகளும் சரியாக வளராத காரணத்தாலும், யோனி அடைக்கப் பட்டிருந்தாலும் மாதப்போக்கு ஏற்படாமல் இருக்க வாய்ப்பு உண்டு.மாதவிடாய் சாதாரணமாக இருபதெட்டு தினங்களுக்கு ஒரு முறை உண்டாகி 3 நாளைக்கு இருக்கும். மாதவிடாய் காலங்களில் கருப்பையின் உட்சவ்வில் கொஞ்சம் உரிந்து போய் வெளிவரும். மாதவிடாய்ப்போக்கில் ரத்தமும், பிசின் போன்ற நாற்றமுள்ள கோழைப் பொருளும் வெளியேற்றப்படுகிறது. இது இயற்கையாகவே ஒவ்வொரு வயது வந்த பெண்ணுக்கும் உண்டாகிறது. இதைத்தான் மாதவிடாய் அல்லது மாத்திரம் என்றும் கிராமப்புற பெண்கள் மத்தியில் தீட்டு என்று சொல்லும் வழக்கமும் இருந்து வருகிறது.மாதவிடாயின் போது முரட்டு காகிதத்தையோ, அழுக்கு துணிகளையோ வைத்து கட்டிக் கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் யோனித்து வாரத்திற்கு அருகில் அரிப்பு, சிவந்து போகுதல், வீக்கம் போன்றவை ஏற்பட்டு வேதனை கொடுக்கும். பொதுவாக பெண்கள் வெளி ஜனை உறுப்புகளை அடிக்கடி கழுவ வேண்டும். பெண் குறியின் உதட்டில் உள்ள மடிப்புகளை கழுவிச்சுத்தம் செய்வதில் தனி கவனம் செலுத்த வேண்டும்.

மாதவிலக்கு ஆகத் தொடங்கிய பின்னர் சீதோஷ்ண மாற்றம் காரணமாகவும், டைய்பாய்டு, ஷயரோகம், ஜலதோசம்  போன்ற நோயுள்ள காலங்களில் மாதப்போக்கு நின்று விடக்கூடும். இதற்காக அச்சப்படவோ, கவலைப்படவோ தேவையில்லை.உடல் ஆரோக்கியம் கிடைத்தவுடன் பின்னர் உரிய காலத்தில் மாதப்போக்கு ஏற்பட்டுவிடும்.மணமான பெண்களுக்கு மாதப்போக்கு நின்று விட்டால் கருத்தரிக்க கூடும் என்பதை மறக்காமல் கவனத்தில் கொள்ள வேண்டும்.வழக்கமாக மாதவிடாய் ஆகும் போது கொஞ்சம் சங்கடம் இருப்பது இயல்புதான். ஆனால் பல பெண்களுக்கு கடுமையான வயிற்று வலி, ரத்த போக்கு, தலைசுற்ற்ல், வாந்தி, நாவறட்சி, உஷ்ணம், முதுகு மற்றும் விலாப் புறங்களில் கடுமையான வலி, அடிவயிற்றில் அழுத்துவது போன்ற உணர்வு கருப்பையில் குத்தல் வலி, புலம்பல், சோர்வு ஏற்பட்டு உடம்பு வெளிறுதல் போன்ற தொந்தரவுகள் இருக்கும். இதுபோன்ற அறிகுறிகளை ஆயர்வேத மருத்துவத்தில் “அஸ்லுக்தரம்” அல்லது “ரத்தப்பிரதரம்” என்று அழைக்கிறோம்.ஒரு சில பெண்களுக்கு உடல் சம்மந்தமான நிலைமைகள, வலிமிக்க மாதவிடாய் ஏற்படுவதற்கு காரணமாகிறது. கருப்பையின் கழுத்து சிறிதாய் உள்ள பெண்களுக்கு ரத்தத்தை வெளியே தள்ளுவதற்கு வேகம் வேண்டியிருக்கும். இதனால் சிரமம் ஏற்பட்டு வலி உண்டாகும் பிரச்சினைகள் இருக்கும் குழந்தை பிறக்கும்போது கருப்பையின் கழுத்து பெரிதாகிவிடுவதால் பின்னர் தொந்தரவுகள் இருக்காது.மற்றும் சில பெண்களுக்கு மாதவிடாய் முன் நரம்பிலும், ரத்த ஓட்டத்திலும் குழப்பம் (மோலிமென்) ஏற்படுவதால் நரம்பு முறுக்கேறி, கணவனிடத்திலும், குழந்தைகளிடத்திலும், குடும்பத்தில் உள்ளவர்களிடமும் கண்டதை சொல்லி கண்டதை செய்து குழப்பத்தை விளைவித்துபிரச்சினையை ஏற்படுத்தி விடுவார்கள்.

பெண்கள் செய்யும் குற்றங்களில் பெரும்பாலானவை இந்த காலக் கட்டத்தில்தான் செய்யப்படுகின்றன. இதனால் மனைவியின் தவறான நடவடிக்கைக்கு அவளது கெட்ட குணம்தான் காரணம்  என்று கணவன் நினைத்து விடுவதால் ஒருவருக்கொருவர் கருத்து வேறுபாடும், சண்டை சச்சரவுகளும் உருவாகிவிடுகிறது. இதுபோன்று ஏற்படும் பெண்களுக்கு நரம்பு கோளாறு, சிடுசிடுப்பு, இவற்றோடு மார்பகங்களும் புண்ணாகி விடுவதோடு, வயிறு உப்பிக்கொண்டு வயிற்றில் உள்ள வாய்வு வெளியே போகாமல் சங்கடம் உண்டாகிறது.ஒரு சில பெண்களுக்கு யோனியிலிருந்து தெரிந்தோ, விட்டு, விட்டோ வெள்ளைப்போக்கு (லிகோரியா) ஏற்படுகிறது. இதற்கு வெட்டையைத்தவிர வேறு சில காரணங்களும் இருக்கின்றன. உடல் உஷ்ணம், பலகீனம், சிதைவுற்ற (அல்லது) நோய் தொற்றுள்ள கருப்பையின் கழுத்து, கருப்பையின் உள்ள கழுத்தில் சவ்வு போய் தொடர்ந்து வெள்ளை ஒழுக்கு ஏற்படுதல். இந்த ஒழுக்கு சாதாரணமாக தெளிந்து பாகுபோல் இருக்கும். இதனால் பெண்கள் மிகவும் வேதனை அடைகின்றனர்.மேலும் மாதவிடாய் 45 வயது வாக்கில் நின்று விடுகிறது. அதனை சூதக ஓய்வு என்று சொல்கின்றோம். மாதவிடாய் நிற்கும் தருவாயில் எரிச்சலும், உஷ்ணமான ரத்தப்போக்கும் ஏற்படும். உடல் அளவிலும், மனதளவிலும் பெண்கள் பல வித பாதிப்புகளுக்கு உள்ளாகின்றனர்.சூதக ஓய்வுக்குப்பின் ரத்த போக்கு ஏற்பட்டாலும, சூதக காலத்துடன் தொடர்பின்றி சில நாட்களுக்கு அவ்வப் போது விட்டு, விட்டு ரத்த போக்கு ஏற்பட்டாலும், கடுமையான ரத்தபோக்கு தொடர்ந்து வெளிப்பட்டாலும் இது புற்று நோயின் அறிகுறியாகக்கூட இருக்கலாம் என்பதை பெண்கள் மிகவும் கவனத்தில் கொள்ள வேண்டும். மாதவிடாய் பிரச்சனைகளுக்கு ஆயுர்வேத மருந்துகள்.

வலியுடன் கூடிய மாதவிடாய், வயிற்றுவலி, இடுப்புவலி, யோனி, சூலம், பெரும்பாடு, வெள்ளைப்படுதல், நீர் சுருக்கு ரத்த பித்தம், கருப்பாயசத்தில் ஏற்படும் கோளாறுகளுக்கு,அசோகக்ருதம் காலை 10 கிராம், இரவு 10 கிராம், சதாவரிக்ருதம் காலை 10 கிராம், இரவு 10 கிராம் சூடான பாலில் சாப்பிடவும்.ருது ஆகுவதற்க்கு நெய்சட்டீவேர் 2 காசிடை,    அம்மன்பச்சரிவேர் 2 காசிடை இவற்றைக் கொண்டு வந்து வெந்நீர் விட்டு நன்றாக அரைத்து 7 நாட்களுக்கு கொடுக்கவும்.ஆண் பனையின் குருத்தோலையை சுட்டு கரியாக்கி, பாலுடன் சேர்த்து அருந்தினால் அன்றே தீட்டு வெளிப்படும்.மாதவிடாயின் போது ஏற்படும் வயிற்று வலிக்கு தோல் நீக்கிய உள்ளி பூண்டு 1 பல்லு, மிளகு10, நுணாக்கொழந்து ஒரு சிறிய எலுமிச்சைங்காய் பிரமாணம் இவற்றை தண்ணீர் விட்டு நன்றாக அரைத்து மாதவிடாய் ஆன 3-வது நாளில் குளித்து தலை துவட்டுவதற்கு முன் சாப்பிட்டால் வயிற்றுவலி தீரும்.

பத்தியம்: மருந்து சாப்பிடும் தினத்தன்று உப்பு, புளி ஆகாரத்தில் சேர்கக் கூடாது.மேற்காணும் மருந்துகள் அனைத்தும் பொதுவான மருந்துகளே. எனவே இன்னும் ஏராளமான மருந்துகள் இருக்கின்றன. ஆயுர்வேத மருத்துவரை நேரில் சந்தித்து ஆலோசனை பெற்றால் பூரண சுகம் பெறலாம்.மெனோபாஸ் எம்பது மாதவிடாய் நிறுத்தம் என பொருள்படும், பெண்ணாகப் பிறந்த ஒவ்வொருவருக்கும்; வயதுக்கு வரும்போதும் (பூப்பெய்துதல்),  திருமணத்தின் போதும், பிரசவதின் போதும் உடல் உள், வெளி உறுப்புகளில் பல மாற்றங்கள்  ஏற்படுகின்றன. இது போன்ற ஒரு பருவ உடல் மாற்றம் மெனோபாஸ் பருவ காலத்திலும் நிகழ்கின்றது. மெனோபாஸ் ஏற்படும் போது அவர்கள் பல உடல், மன வாதைகளுக்கு உள்படுகின்றார்கள்.வயதிற்கு வரும் ஒரு பெண்ணில் (பூப்பெய்தும் போது) இனப்பெருக்க உறுப்புகள் விருத்தியடைவதோடு, அதற்கான ஹோமோன் சுரப்புகளும் உற்பத்தியாகின்றன, ஆனால் மெனோபாஸ் நிகழும் போது இனபெருக்க உறுப்புகள் செயல்லிழக்கப்படுவதோடு அதனோடு தொடர்புடைய ஹோமோன் சுரப்புகளும் நிறுத்தப் பெறுகின்றன. ஒரு பெண் வயதிற்கு வரும்போது மாதவிடாய் ஆரம்பிக்கின்றது. மெனோபாஸின்போது மாதாவிடாய் நிறுத்தம் பெறுகின்றது. பூப்பெய்திய காலம் முதல் மெனோபாஸ் ஆகும் வரையும் உள்ள காலமே பெண்களின் பொற்காலம் என்றும் கூறலாம்.பெண்களின் மெனோபாஸ் நாட்கள் நம்மில் பல பெண்களுக்கு, ‘மெனோபாஸ்’ என்றால் ‘மாதவிடாய் நின்றுவிடும்’ என்றுதான் மேலோட்டமாகத் தெரியுமே தவிர, அந்த வயதில் தங்களுடைய உடலில் என்னென்ன மாறுதல்கள் நடக்கிறது…. ஏன் மாதவிடாய் நிற்கிறது… அதனால் எந்தெந்த விஜயங்களில் கவனமாக இருக்க வேண்டும் என்ற விவரங்கள் பெரும்பாலும் தெரிவதில்லை. அதே போல ‘மெனோபாஸ்’ என்றாலே, வியாதிகள் வரும் நேரம் என்றும் சிலர் பயந்து போவதுண்டு. இந்த பயங்களும் தேவையில்லை.மெனோபாஸ் என்றால் என்ன? நாற்பத்தைந்து வயதுக்கு மேல், பெண்ணின் ஓவரியின் (சூலகத்தின்) செயல்பாடு குறைந்து, பீரியட்ஸ் முறையற்றதாகி, கடைசியாக சுமார் ஐம்பது வயதில் பீரியட்ஸ் சுத்தமாக நின்று விடுவதற்குப் பெயர்தான் மெனோபாஸ். அதாவது மாதவிடாய் நின்று விடும் நிலைக்குப் பெயர்தான் மெனோபாஸ்!மெனோபாஸ் ஏற்பட்டதற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியுமா?மெனோபாஸிற்குப் பிறகு பெண்களால் கருத்தரிக்க முடியாது. ஏனென்றால் கருத்தரிக்கத் தேவையான கரு முட்டையின் உற்பத்தி குன்றிவிடும்.எனவே மெனோபாஸ் என்பது பூப்பெய்தல் போன்ற ஆனால், எதிர்மாறான ஒரு பருவ மாற்றம்மட்டும்தான். இதை எதிர் கொள்ள பயபட வேண்டியதில்லை. இது எல்லாப் பெண்களின் வாழ்க்கையிலும் கட்டாயம் ஏற்படக் கூடியது.  இந்தச் சமயங்களில் எதிலெதில் நாம் கவனமாக இருக்க வேண்டும் .?”அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?””

எந்த வயதில் மெனோபாஸ் வரலாம்?சாதாரணமாக ஐம்பது வயதைக் கடந்தாலே மெனோபாஸ் வந்துவிடும். சிலருக்கு முப்பத்தைந்து வயதுக்கு முன்னாலும்கூட மெனோபாஸ் வரலாம். அதற்கு ப்ரீமெச்சூர் மெனோபாஸ் (Premature Meno Pause) என்று பெயர்.என்னென்ன காரணங்களால் ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வருகிறது?ஓவரியில்  (சூலகத்தின்) ஏதேனும் கட்டி இருந்து, ஓவரியை ரிமூவ் பண்ணியிருந்தாலோ, கீமோ தெரபி, ரேடியோ தெரபி போன்ற ட்ரீட்மென்ட் எடுத்தாலோ,  இல்லையென்றால் வைரஸ் இன்ஃபெக்ஷனாலோ, ப்ரீமெச்சூர் மெனோபாஸ் வரலாம்.

ஒரு பெண் மெனோபாஸ் ஸ்டேஜை நோக்கிப் போகும்போது அவளுக்கு என்னென்ன அசௌகர்யங்கள் ஏற்படும்?அதிக வியர்வை (ஹாட் ஃப்ளஷ்):ஏ.ஸி.யில் இருக்கும்போதும் நடுத்தர வயதுப் பெண்களுக்கு வேர்த்துக் கொட்டும். இதை ஹாட் ஃப்ளஷ் என்போம்! மெனோபாஸ் அவர்களை நெருங்கிக் கொண்டிருக்கிறது என்பதன் அறிகுறியே இந்த வியர்வை எல்லாம்… நம் பாட்டி காலத்திலேயே நாற்பதைக் கடந்த பெண்களுக்கும் கூட இப்படித்தான் வியர்த்துக் கொட்டியிருக்கும்… இதில் சங்கடப்பட என்ன இருக்கிறது என்கிறீர்களா!

பாட்டி காலத்தில், பெண்கள் வீட்டு வேலைகளை முடித்து விட்டு, காற்றோட்டமாகத் திண்ணையில் அமர்வார்கள். அவர்களுக்கு, இது ஒரு பெரிய விஷயமாக இருக்காது! ஆனால் நாற்பதைக் கடந்த இன்றைய பல பெண்கள், அலுவலகத்தில் உயர்ந்த பதவியில் இருக்கிறார்கள். அவர்களுக்கு வியர்த்துக் கொட்டினால் அத்தனை நன்றாக இருக்காது. ஆனால் இது போன்ற அசௌகர்யங்களே, மனதளவில் அவர்களுக்குப் பாதிப்பையும் ஏற்படுத்துகிறது. அதனால் அதிக வியர்வையால் பாதிக்கப்படும் பெண்கள் சிகிச்சைகூட எடுத்துக் கொள்ளலாம்.இரவு நேர படபடப்பு (நைட் ஸ்வெட்ஸ்):இரவில் திடீரென வியர்த்துக் கொட்டும். மிகவும் படபடப்போடு காணப் படுவார்கள். இதனால் அமைதியான தூக்கம் போய், ஒரு வித சோர்வுக்கு ஆளாவார்கள்.அடிக்கடி மாறும் மூட் (மூட் ஸ்விங்ஸ்):அடிக்கடி கோபம், எரிச்சல், அழுகை, விரக்தி என்று எல்லா உணர்ச்சிகளும் மாறி மாறி வரும்.

வெஜைனா (பெண் உறுப்பு) உலர்ந்து போதல்:ஈஸ்ட்ரஜன் ஹார்மோன் குறைவால், வெஜைனாவின் பாதையை வழுவழுப்பாக வைத்திருக்கும் சுரப்புகள் குறைய ஆரம்பிக்கும். அதனால் (பெண் உறுப்பு)  உலர்ந்து போய், தாம்பத்திய உறவின் போது அசௌகர்யமும், வலியும் உண்டாகலாம். தவிர, வெஜைனா பாதையில் வழுவழுப்பு ஏற்படுத்தும் இந்த திரவம்தான், அந்தப் பகுதியின் மென்மையான திசுக்களில், இன்ஃபெக்ஷன் ஏற்படாமல் தடுக்கிறது. ஈஸ்ட்ரஜன் குறைவால் இந்த சுரப்பும் குறையும் போது அங்கே இன்ஃபெக்ஷன் ஏற்பட ஏதுவாகிறது.

மெனோபாஸிற்குப் பிறகு வரும் நீண்ட கால விளைவுகள் என்னென்ன?பல பெண்களுக்கு எலும்புகள் தேய்ந்து போகலாம்.. இதற்கு, ‘போஸ்ட் மெனோபாசுவல் ஆஸ்டியோ போரோஸிஸ்’ என்று பெயர்.உங்களுக்கு ஒன்று தெரியுமா? மெனோபாஸிற்குப் பிறகு, பெண்களின் எலும்புகள் தேய்மானமடைந்து விடுவதால், லேசாக அவர்கள் தடுக்கி விழுந்தாலோ அல்லது குண்டுங் குழியுமான இடங்களில் ஆட்டோவில் சென்றாலோ கூட, எலும்புகள் உடைந்து ஃப்ராக்சர் ஏற்படும் அபாயம் இருக்கிறது.

அதனால் எலும்புத் தேய்மானத்திற்கு அவர்கள் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொண்டால், இத்தகைய பிரச்னைகளைத் தவிர்க்கலாம். (எலும்புகள் தேய்மானம் அடைவதற்கு முன்பே, டாக்டரின் ஆலோசனைப்படி கால்சியம் மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டால், இந்தப் பிரச்னைகளைத் தவிர்த்து விட முடியும்!…)பெண்களின் பிரத்யேக ஹார்மோனான ஈஸ்ட்ரஜன், இருதய பிரச்னைகள் ஏற்படாமல் தடுக்க ஒரு பாதுகாப்புக் கவசம் போல் செயல்பட்டு வந்தது. மெனோபாசுக்குப் பிறகு ஈஸ்ட்ரஜன் சுரப்பு நின்று விடுவதால், இதயம் மற்றும் இரத்தக் குழாய்களில் பிரச்னைகள் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மெனோபாஸ் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்னைகளும் ஏற்படலாம். கவனம் எடுத்துக் கொள்ள வேண்டும்!மெனோபாஸ்  மாதவிடாய் மறையும் காலம்

பெண்களுக்கு பொதுவாக 45 லிருந்து 55 வயதுக்குள் ஒவ்வொரு மாதமும் ஏற்படும் முட்டை உற்பத்தி குறைந்து மாதவிடாய் வருவது நின்று விடுகிறது. இதனையே மெனோபாஸ்  எனவும் இறுதி மாதவிடாய் நிறுத்தம் எனவும் கூறுகின்றோம். இது பெரும்பாலான பெண்களுக்கு இயல்பாக தெரியாமலேயே எந்த தொந்தரவும் இல்லாமல் ஏற்படுகின்றது. மாதவிடாய் நிரந்தரமாக நின்ற பிறகு பெண்களுக்கு குழந்தை இனி பிறக்காது.

மாதவிடாய் நிரந்தரமாக நிற்பதை பல பெண்மணிகள் அதுவும் வேலைக்கு செல்பவர்கள் விரும்பி வரவேற்பார்கள். இந்தநிலையால் மாதாந்திர விலக்கு தொல்லை மற்றும் எதிர்பாராமல் கர்ப்பம் ஏற்படும் பயத்திலிருந்து விடுதலை கிடைக்கிறது. சில பெண்களுக்கு நமக்கு வயதாகி விட்டதே என்ற உணர்வு வரலாம்.சுமார் 30 சதவிகித பெண்களுக்கு பல தொல்லைகளை தரலாம். மருத்துவம் மிகவும் முன்னேறிய இந்த காலத்தில் பெண்கள் விமீஸீஷீ-றிணீusமீ பற்றி தெரிந்து வைத்திருப்பது நல்லது.

மெனோபாஸ் தரும் தொல்லைகள் திடீரென சூடாக உணர்வதுதிடீரென இரவில் வியர்ப்பதுயோனி உலர்ந்து காணப்படுவது தேவையற்ற ரோமங்கள் வளர்வது (குறிப்பாக முகத்தில்)சருமம் உலர்ந்து காணப்படுவதுபின்னர் எலும்புகள் வலுவிழந்து எளிதாக உடையும் தன்மையை அடைவது

இரத்த நாளங்கள் குறுகி விடுவது.இத்தகைய பாதிப்புகள் வராமல் தவிர்ப்பதற்கும் வந்த பிரச்சனைகள் குறைவாக ஆகுவதற்கும் அதிக பால் அருந்துவது மிக மிக அவசியம் பாலில் அதிக கால்ஷியம் மற்றும் வைட்டமின் ஏ சத்து உள்ளதால் மாதவிடாய் இறுதியாக நிற்கும் சமையத்தில் ஏற்படக்கூடிய கால்ஷியம் இழப்பை ஈடு செய்கின்றது.உடற்பயிற்சி மேற்கொள்வது நிலைமை மேலும் மோசமடைவதை தவிர்க்கும். மெல்லோட்டம், நடைப்பயிற்சி, நீச்சல் பயிற்சி, சைக்கிள் பயிற்சி, போன்றவை நல்ல பலன் தரும்.

நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
ஒரு ஸ்பூன் தேன் மட்டுமே போதுமாம்..! தா...
காலையில் எழுந்தவுடன் இதில் ஒன்றையேனும்...
டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்கும் மருந...
புற்றுநோயின் வளர்ச்சியை தடுக்கும் காடை...
இரவில் தூக்கம் வராமல் அவதிப்படுகிறீர்க...
பிரபல நடிகர் இயக்குனர் சசிக்குமாரின் ம...
அதிகமாக பகிருங்கள்: அதிகமாக முகத்திற்க...
பல்வலி உயிர்போகிறதா.? எதுவும் வேண்டாம்...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
அடிக்கடி குமட்டல் வருகிறதா.? அலட்சியம்...
எல்லோருக்கும் பிடித்த கருவாட்டை எதனுடன...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  1
  Share