தமிழ் சினிமாவுக்கு பகிரங்க சவால் விடும் தமிழ் ராக்கர்ஸ்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

தமிழ் சினிமாவுக்கு தண்ணி காட்டும், தமிழ் ராக்கர்ஸ் மற்றும் தமிழ்கண் இணையத்தளம். அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

 இன்றளவில் தியேட்டருக்குச் சென்று படம் பார்ப்பவர்களை விட, திருட்டு விசீடியில், அதுவும் இணையத் தளத்தில் திரைப்படம் பார்ப்போரே அதிகமாக உள்ளார்கள். இதனால் திரைப்படங்களை ஆன்லைனில் அப்லோட் செய்வோர் மீது கடும் கோபத்தினை வெளிப்படுத்தி வருகிறார்கள் சினிமா பிரபலங்கள்.

இந்த சினிமா பிரபலங்களுள், இணையத் தளங்களில் படம் அப்லோட் செய்வோர் முதல், திருட்டி வீசிடி பிரிண்ட் போடுவோர் வரை அனைவரையும் கைது செய்யனும், பிடித்து உள்ளே போடனும் என்பதில் குறியாக இருப்பவர் , முன் நிற்பவர் நடிகர் விஷால்,

ஆனால் அண்மையில் தமிழ் ராக்கெர்ஸ், தமிழ் கண் இணையத் தள அட்மின் கைது செய்யப்பட்டு விட்டார் என புரளியை கிளப்பி, நடிகர் விஷால் தனது துப்பறிவாளனுக்கு ஓசி விளம்பரம் தேடிக் கொண்டது மட்டுமன்றி, மூக்குடைபட்டுக் கொண்டார்.அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

உண்மையில் யார் இந்த தமிழ்கண் இணையத்தளத்தினர்?
தமிழ் கண் இணையத்தளத்தினர் விழ விழ எழுவோம் என்பது போல,ஒவ்வோர் புதிய படங்கள் வரும் போது, அந்த இணையத்தின் மீது நிகழ்த்தப்பட்டும் Ddos Attack இனை முறியடித்து மீண்டும் மீண்டும் புதிய டொமைன்களுடன் வந்து கொண்டிருக்கிறார்கள்.

இது எப்படிச் சாத்தியமாகும்? ஆம் நன்கு தொழில்நுட்பம், கணினி அறிவு தெரிந்த, கை வரப் பெற்ற ஒருவரால் தான் இது சாத்தியமாகும், தவிர படங்களை அப்லோட் செய்வதற்கும், ஒவ்வோர் தடவை முடக்கப்படும் இணையத்தளத்தினை மீளவும் கொண்டு வருவதற்கும், அதிவேக இணைய இணைப்பு வேண்டும். இலங்கையிலும், இந்தியாவிலும் கிடைக்கும் 40mbps இற்கு உட்பட்ட இணைய வேகத்தினை வைத்து இதனைச் செய்ய முடியாது.

80-100mbps இற்கு மேற்பட்ட இணைய வேகம் வேண்டும். உள்ளூரில் தியேட்டர் காரர்களுக்கு பணத்தினைச் செலுத்திப் படம் எடுப்பது சாத்தியமா? என்றால், அதுவும் மிகவும் கடினமான விடயமே, பிடிபட்டால், தரும அடி. அது தவிர Copy Rights விவகாரத்தில் சிக்குண்டால், வாழ் நாள் பூரா வெளியே தலை காட்ட முடியாது. அதுவும் உலகாளாவிய ரீதியில் கடுமையான சிறைத் தண்டனை உண்டு.

அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

Dns மூலம் ஐபி அட்ரஸ் மாற்ற வேண்டும், படத்தினை எடுத்து வந்து அப்லோட் செய்வது மட்டுமன்றி, யாருமே இணையத்தள உரிமையாளரைக் கைது செய்ய முடியா வண்ணம் செயற்பட வேண்டும்,

ஆம் தமிழ் கண் இணையம் என்பது ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய பகுதிகளை மையமாக கொண்டு தொழிற்பட்டு வருகின்றது. இலங்கை யாழ்ப்பாணம் சாவகச்சேரிப் பகுதியில் பிறந்து, யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரியில் உயர் கல்லூரியை முடித்தவர்களும், மெல்பேண் Monash University இல் ஐடி முடித்தவர்களும் ஆகிய இரு இளைஞர்கள் இவர்களின் ஒட்டு மொத்த முயற்சியே நாம் இன்று பார்க்கும் இணையத் தளப் புதிய படங்களுக்கான அடிக்கல்லாகும். இதற்கான ஆதாரங்கள் தேவை ஏற்படின் இணைக்கப்படும்,

இவர்களின் கைகளுக்கு எப்படி படங்கள் கிடைக்கின்றது, அதுவும் தியேட்டர்களில் வெளியாக முதலே என்று நீங்கள் கேட்கலாம்…. ஒரு படத்தினை பிரதி செய்ய இவர்கள் வழங்கும் பணம் 2000 -4000 ஆஸ்திரேலிய டாலர்கள். உள்ளூர் மதிப்பில் இந்திய ரூபாயில் 1-2 இலட்சம் , இலங்கைப் பண மதிப்பில், 2-4 லட்சம் ரூபா…
அப்படியாயின் எங்கிருந்து படத்தினைப் பிரதி செய்கிறார்கள் என்று நீங்கள் யோசிக்கலாம்…
இது இந்தியாவில் இருந்து சாத்தியமாகுமா என்றால் இல்லவே இல்லை. தமிழகத்தின் இணைய வேகத்தில் அப்லோட் செய்ய ஆரம்பித்தால் படம் வர தாமதமாகும். இதனால் இவர்கள் ஆஸ்திரேலியா, மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளை மையப்படுத்தி செயற்படுகிறார்கள்.

இலங்கை இந்தியாவிற்கும் அவுஸ்திரேலியாவிற்கும் நான்கரை மணி நேரம் வித்தியாசம். இது இவர்களுக்கு மிகவும் சாதகம், காரணம் படம் முந்திக் கொண்டு ரிலீஸ் ஆவது இங்கே தான். விவேகம் திரைப்படம் மெல்பேணில் உள்ள nareewarran fountain gate village cinema இல் கையடக்க தொலைபேசி மூலம் பதிவு செய்யப்பட்டது. இதற்கான ஆதாரமும் தேவை ஏற்படின் இணைக்கப்படும். மகளிர் மட்டும் படம் மெல்பேண் Knox திரையரங்கில் பிரதி பண்ணப்பட்டுள்ளதை பார்க்கையில் நீங்களே தெரிந்து கொள்ளலாம்.

இந்த தளத்தின் ஒரு மாத வருமானம் என்ன என்று கேட்டால் அடடே என்று மூக்கில் விரல் வைப்பீர்கள்..ஆம் 1-1.5 இலட்சம் ஆஸ்திரேலிய டாலர்கள். உள்ளூர் மதிப்பில் எத்தனை சைபர்கள் வரும், எத்தனை கோடி ரூபா என நீங்களே கணக்கிட்டுக் கொள்ளுங்கள். (ஒரு டாலர் இலங்கை மதிப்பில் 118 ரூபா , இந்திய மதிப்பில் 50 ரூபா)

இன்றும் எத்தனை தடவை தமிழ் சினிமாப் பிரபலங்கள் முயற்சி செய்து தமிழ் கண் இணையம் மீது தாக்குதல் நடத்தினாலும், அத்தனை ஐடி வல்லுனர்களையும் பின் தண்ணி நொடிக்கு நொடி புத்துயிர் பெற்றுக் கொண்டிருக்கிறது தமிழ் கண் இணையம்!!

இன்றளவில் தமிழ் ராக்கர்ஸ், தமிழ்கண் இணையத்தினர் பகிரங்கமாக தமிழ் சினிமா பிரமுகர்களுக்கு பகிரங்க சவால் ஒன்றினை விடுத்துள்ளார்கள். அது தமிழகத்தில் ஒரு பள்ளிக் கூடம் கட்ட தாம் ஒரு கோடி இந்திய ரூபா வழங்கத் தயார். ஆனால் தமிழ் சினிமா பிரபலங்கள் தயாரா? அப்படித் தமிழ் சினிமா பிரபலங்கள் ஒரு கோடி செலவளித்து பொதுச் சேவை புரியத் தயார் எனில் , தாம் புதிய படங்களை அப்லோட் செய்வது, இணையத் தளத்தினை நடாத்துவது முதல் அனைத்து நடவடிக்கையையும் நிறுத்தத் தயார். இந்தச் சவாலுக்கு திரையுலகப் பிரபலங்கள் தயாரா? ஒரு பள்ளிக் கூடமாச்சும் பொது நோக்கில் கட்ட முன் வருவார்களா? அன்பிற்குரியவர்களே புரட்சி வானொலியின், சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

புரட்சி வானொலிக்காக

கமலேஷ்

இதையும் படிக்கலாமே
கொழுப்பை குறைக்க..!
ஒரு மாதத்தில் சர்க்கரை நோயை விரட்ட எளி...
செத்து செத்து விளையாட வைக்கும் Blue Wh...
பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு
பாகற்காய் தக்காளிப் புளிக்கறி
நோய் தீர்க்கும் ஆடாதோடா...!
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
பாலியல் பட நடிகர்களாக எம் பள்ளி மாணவர்...
மனைவி கணவனிடம் இப்படியும் எதிர் பார்க்...
அடச் ...சே... உடலுறவில் ஈடுபடுவது போல்...
ஒருவரின் அகால மரணத்தை அறியப்படுத்தும் ...
கேரளா பெண்கள் இப்படி செய்வதால் தான் அப...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •