இலங்கையில் வித்தியாவிற்காக விழி திறந்த நீதி இந்தியாவில் சிறுமி ஆருஷி வழக்கில் மரணித்தது

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

வித்தியாவிற்காக இலங்கையில் விழிகள் திறந்த நீதி
இந்தியாவில்
ஆருஷி வழக்கில் மரணித்தது .
நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய ஆருஷி கொலை வழக்கில், அவரது பெற்றோரை விடுதலை செய்து, அலகாபாத் உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. டெல்லி அருகே நொய்டாவைச் சேர்ந்த 14 வயது பள்ளி மாணவி ஆருஷி, கடந்த 2008-ம் ஆண்டு, கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் அவரது படுக்கை அறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

மறுநாள், ஆருஷியின் வீட்டு சமையல்காரர் ஹேமராஜின் சடலம், மாடியில் கண்டெடுக்கப்பட்டது. இந்த இரட்டைக் கொலை தொடர்பாக, ஆருஷியின் பெற்றோரும், பல் மருத்துவத் தம்பதியுமான தல்வார் மற்றும் நுபுர் தல்வார் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். நாடுமுழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கை, சிபிஐ விசாரித்து வந்தது.

இஃது, ஆருஷி மற்றும் ஹேமராஜ் இடையே தகாத உறவு இருந்ததாகவும், அதனால், ஆருஷியின் பெற்றோரே, அவர்களை கொலை செய்ததாகவும் கூறப்பட்டது. இதனை விசாரித்த, காசியாபாத் நீதிமன்றம், கடந்த 2013ஆம் ஆண்டு, தல்வார் மற்றும் நுபுல் தல்வாருக்கு ஆயுள் தண்டனை விதித்தது. இதனை எதிர்த்து, தல்வார் தம்பதியினர் அலகாபாத் உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த வழக்கில் இன்று தீர்ப்பளித்த நீதிமன்றம், தல்வார் தம்பதியினரை விடுதலை செய்து உத்தரவிட்டது. இந்த தம்பதியினருக்கு எதிரான குற்றங்கள் நிரூபிக்கப்படவில்லை என்றும், சந்தேகத்தின் அடிப்படையில் தண்டனை வழங்கக்கூடாது எனவும் நீதிபதிகள் தங்களது தீர்ப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதையும் படிக்கலாமே
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
சுவிஸ்லாந்தில் தமிழர் ஒருவருக்கு அடித...
எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் ...
அனைத்துலகத்தில் நடைபெற இருக்கும் மாவீர...
கையெடுத்துக் கும்பிட்டு கெஞ்சும் ஜூலி....
35 ஆண்டுகளுக்கு பிறகு சவுதி அரேபியா மக...
கள்ளக் காதலனுடன் உல்லாசமாய் இருந்த தாய...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!
நள்ளிரவில் தந்தை செய்த கொடூர செயல் ..!...
சைக்கில் ஓட்டுவதால் ஆண்மை பாதிக்கப் ப...
கனடாவில் 17 வயது சிறுவன் கத்தியால் குத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •