குறும்பு பொண்ணு ஓவியாவிடம் சில கேள்வியும் ஓவியாவின் பதிலும்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இவர் பிக் பாஸ் வீட்டில் இருந்தது வெறும் 40 நாள்கள்தான். இவர் வீட்டில் இருந்து வெளியேறிய அன்று ஒளிபரப்பான குறும்படத்தைப்பார்த்து பலர் கண் கலங்கினர். இவர் வீட்டில் இருந்தபோதே சமூக வலைதளங்களில் உருவான ‘ஓவியா ஆர்மி’ மற்ற போட்டியாளர்களை கலாய் காமெடிகளில் வச்சு செய்தனர். ஓவியா வெளியேறிய பிறகு அவர்கள் இன்னும் உக்கிரமாகி ஆன்லைனையே தனதாக்கிக்கொண்டு ஜூலி, காயத்ரி… என்று சகலரையும் தங்கள் கலாய் மீம்ஸ்களால் சவட்டி எடுத்தனர்.

ஏன் பிக் பாஸுக்கு திரும்பி போகல்ல நீங்க.? எனக்கு போகணும்னு தோணலை. அதேபோல என் பாட்டியும் ரொம்ப பயந்துட்டாங்க. அவங்க இந்தநாள்வரை என்கூட உட்கார்ந்து  கஷ்டம் பற்றியெல்லாம் பேசினதா எனக்கு நினைவில்லை. அவங்களும் பயந்திருக்காங்க என்ற விஷயத்தை நான் ஃபீல் பண்ண முடிஞ்சது. அதனால்தான் நான் போகலை. ஆனால் நான் மறுபடியும் அந்த வீட்டுக்குள்ள போகணும்னு நினைச்ச ரசிகர்கள்கிட்ட நான் மன்னிப்பு கேட்டுக்குறேன்” என்றவர் தன்னை மீறி வழிந்த கண்ணீரை துடைத்தபடி சிரிக்கிறார். ஓவியா ஆர்மி பற்றி…” என்று கேள்வியை முடிக்கும் முன்பே, “ரொம்ப ஸ்வீட் அவங்க. எனக்காக வீடியோஸ் எல்லாம் போடுறாங்க. என் மேல உயிரா இருக்காங்க. எனக்கு ரொம்ப ஆச்சரர்யமா இருக்கு. என்ன பண்ணப்போறேன்னே தெரியலை…கண்களை மீறி கண்ணீர் வர கதையை மாற்றினோம் “

பிக் பாஸ் வீட்டில் இருந்தவர்களை ஆர்டர்படுத்தி நம்பர் கொடுக்க வேண்டுமென்றால், என்ன நம்பர் கொடுப்பீர்கள்?’ என்றேன். “எனக்குச் சின்ன வயசிலிருந்தே வரிசைப்படுத்துவது பிடிக்காது. இப்போ பாருங்கள் என் வலது கையில் ஐந்து விரல் இருக்கா, எல்லாம் தனித்தனியா வித்தியாசமா இருக்குல்ல. அது அப்படியிருந்தாதானே நல்லாயிருக்கும். அப்போதுதான் பயன்படும். அதுமாதிரிதான் அவங்க எல்லோரும். டிரைவரா இருந்தாலும் சரி, அம்பானியா இருந்தாலும் சரி இருவரையும் ஒண்ணாத்தான் பார்ப்பேன்” என்கிறார்.அடுத்து ஆரவ் பற்றிய கேள்விகளை கேட்கத் தொடங்கினேன். ‘ஆரவ் ரொம்ப…’ என்று ஓவியா சொல்ல வாய் திறந்தபோது, ”ஓவியா ப்ளீஸ், ஆரவ் பற்றின கேள்விகள் வேண்டாமே’ என்றார் அவரின் உதவியாளர். ”யொ நாட்’, என்று ஓவியா கேட்க, உதவியாளர் சில காரணங்களை சொல்ல, ‘சரி ஓகே’ என்ற ஓவியா, தன் கண்களாலேயே நம்மிடம் மன்னிப்பு கோருகிறார்.

“பிக் பாஸ் வீட்ல இருந்து ஏன் பாதியில் வெளியேறினோம்னு என்னைக்காவது ஃபீல் பண்ணினது உண்டா?” என்றதும் கொஞ்சம் யோசித்தவர் தொடர்கிறார். “எனக்கு பிக்பாஸ் அனுபவம் ரொம்ப பிடிச்சிருந்தது. அதுக்கு முன் லைஃப்ல ஏதாவது வித்தாயசமா, புது அனுபவம், புதுஅறிவு வேணும்னு நினைச்சேன். அதுக்கு புதிய மனிதர்கள்கூட பழகணும். இப்படி எனக்கு நிறைய ஆசைகள். அந்த ஆசைகள் ஒவ்வொன்றா நிறைவேற்றிக்கிட்டே வர்றேன்.

“பிக் பாஸ் வீட்ல இருந்து வெளியே வந்தப்பிறகு உங்ககிட்ட எந்தெந்தப்பிரபலங்கள் போன் பண்ணி பேசினாங்க?” என்றதும் உற்சாகமாகிறார். “பிக் பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்ததும் போன் நம்பரை மாத்திட்டேன். அதனால் ஆரம்பத்தில் எனக்கு யாரும் போன் பண்ணமுடியவில்லை” என்றவர்  கொஞ்சம் யோசித்துவிட்டுத் தொடர்கிறார். “சிவாகார்த்திகேயன் கூப்பிட்டுப் பேசினார். ‘பிக் பாஸ் நிகழ்ச்சி டெய்லி பார்ப்பேன். மிஸ் பண்ண மாட்டேன்’னு சொன்னவர், ‘ரொம்ப ஹேப்பியா இருக்கு’னு சொன்னார். இன்னைக்கு அவர் முக்கியமான நடிகர். இவ்வளவு உயரம் தொட்டு இருக்கார். ஆனாலும் அதே ப்ரியம், மரியாதைனு அன்னைக்கு ‘மெரினா’ ஷூட்டிங் ஸ்பாட்டில் பார்த்த அதே சிவாவாகவே இருப்பதுதான் அவரின் பலம். இந்த உயரத்துக்கு அவர் தகுதியான மனிதர். 

அடுத்து கீர்த்தி சுரேஷ் என்னை சென்னையில் வீட்டில் வந்தே பார்த்தார். என்னை கட்டிப்பிடிச்சுகிட்டார். இதற்கு முன் நான் கீர்த்தியைப் பார்த்துப் பேசினதே இல்லை. அப்புறம் சிம்பு, சினிமா அனுபவத்தில் அவரைவிட நான் ஜூனியர். ஆனால் என்னை மனதாரப் பாராட்டியிருக்கார். இப்படி ஏகப்பட்ட பிரபலங்கள், ரசிகர்கள்… இப்படி என்னை சப்போர்ட் பண்ணின, பண்ணாத எல்லாருக்கும் என் பெரிய பெரிய நன்றிகள்.”

“பிக் பாஸிலிருந்து வெளியே வந்ததுக்குப் பிறகு ஜூலி பேசுனாங்களா?” என்றதும், “ஆமாம். ஒரு முறை போன் பண்ணாங்க. ரொம்ப வருத்தப்பட்டு அழுது பேசி, ஸாரி எல்லாம் சொன்னாங்க. ”பரவாயில்லை, ஸாரி எல்லாம்  சொல்ல வேண்டாம். எல்லாம் முடிஞ்சுருச்சு. இதையெல்லாம் மறந்துருங்க, லைஃப்ல போயிட்டே இருங்க”னு சொன்னேன். தப்பு பண்ணதாவங்கனு யாருமே கிடையாது. தவிர அங்க இருந்த சூழ்நிலை அப்படி. மன்னிக்க முடியாத அளவுக்கெல்லாம் அங்க யாரும் தப்பு பண்ணலை. அவங்களை நாம எதுக்கு வெறுக்கணும். நான் அவங்களை மட்டும் சொல்லலை, ஜூலி, காயத்ரினு எந்த ஹவுஸ் மேட்டையும் நான் வெறுக்கலை” என்று அன்பு வார்த்தைகளால் அனைவரையும் அரவணைக்கிறார். 

இதையும் படிக்கலாமே
mersal movie
அடுத்தடுத்து தன்னுடைய வித்யாசமான படைப்...
தெலுங்கில் வெளியாகும் 'இந்தியன் 2' டைட...
மர்மம்,த்ரில்லர்,அதிரடியாய் வரலக்ஸ்மி ...
அய்யய்யோ இந்த போட்டோவெல்லாம் ஐஸ்வர்யா ...
காதலுக்கு மதம் தடையல்ல நிரூபித்த காதல்...
ரோஸ் நடிகையையும் பாலியல் பலாத்காரம் செ...
Mersal - மெர்சல் படம் பார்க்கலாமா? - இ...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
பெண் வேடம் போட்ட பிரபல நடிகர் .! இவரா ...
அம்மாடீயோ நடிகர் அர்ஜூனுக்கு இவ்வளவு அ...
பல நடிகை விகாரத்திற்கு இந்த பிரபல நடிக...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •