இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி 28 – சனிக்கிழமை (14.10.2017)
நட்சத்திரம் : பூசம் காலை 9.59 வரை பின்னர் ஆயில்யம்
திதி : தசமி காலை 4.03 வரை பின்னர் ஏகாதசி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

சனிக்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 7 முதல் 7 1/2, 10 1/2 முதல் 12 வரை, பகல் 12 முதல் 1 வரை, 5 முதல் 6 வரை, இரவு 6 முதல் 7 1/2 வரை, 9 முதல் 10 வரை)
சுபகாரியங்கள் : ஆயுதம் பழக, யாத்திரை போக, வார்படஞ் செய்ய செய்ய, சுபம் பேச சிறந்த நாள்


ராசி குணங்கள்மேஷம்
புதிய கோணத்தில் சிந்தித்து பழைய சிக்கலை தீர்ப்பீர்கள். பயணங்களால் புது அனுபவம் உண்டாகும். தாய்வழி உறவினர்களால் அலைச்சல் ஏற்படும். கலைப் பொருட்கள் வாங்குவீர்கள். பண விஷயத்தில் கறாராக இருங்கள். வியாபாரத்தில் வேலையாட்களின் ஆதரவுக் கிட்டும். உத்யோகத்தில் புதிய சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்

ராசி குணங்கள் ரிஷபம்
தன்னிச்சையாக சில முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் உங்கள் நலனில் அதிக அக்கறைக் காட்டுவார்கள். எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வேற்றுமதத்தவர் அறிமுகமாவார். வியாபாரத்தில் புகழ் பெற்ற நிறுவனங்களுடன் புது ஒப்பந்தம் செய்வீர்கள். உத்யோகத்தில் உங்கள் கருத்துக்கு ஆதரவு பெருகும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

ராசி குணங்கள் மிதுனம்
குடும்பத்தாரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். எதிர்பாராத உதவிகள் கிடைக்கும். தள்ளிப் போன விஷயங்கள் உடனே முடியும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். நட்பு வட்டம் விரியும். விருந்தினர் வருகை உண்டு. வியாபாரத்தில் கூடுதல் லாபம் கிடைக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஒத்துழைப்பார்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்

ராசி குணங்கள் கடகம்
ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் எவ்வளவு பணம் வந்தாலும் எடுத்து வைக்க முடியவில்லையே என்று ஆதங்கப்படுவீர்கள். உறவினர், நண்பர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். சிறுசிறு அவமானம் ஏற்படக்கூடும். உணவில் காரம், வாயு பதார்த்தங்களை தவிர்ப்பது நல்லது. வியாபாரத்தில் எதிர்பார்த்த பணம் தாமதமாக வரும். உத்யோகத்தில் சக ஊழியர்களை உதாசீனப்படுத்த வேண்டாம். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

ராசி குணங்கள் சிம்மம்
கணவன் மனைவிக்குள் விவாதங்கள் வந்துப் போகும். வரவுக்கு மிஞ்சிய செலவுகள் இருக்கும். தாழ்வுமனப்பான்மை வந்து நீங்கும். சகோதர வகையில் செலவுகள் வரும். திடீர் பயணம் உண்டு. வியாபாரத்தில் பாக்கிகளை நயமாகப் பேசி வசூலிக்கப்பாருங்கள். உத்யோகத்தில் பொறுப்புகள் அதிகரிக்கும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்

ராசி குணங்கள் கன்னி
எதிர்பார்ப்புகள் தடையின்றி முடியும். பிள்ளைகளால் மகிழ்ச்சியும், உறவினர்களால் ஆதாயமும் உண்டு. வெளிவட்டாரத்தில் அந்தஸ்து உயரும். பழைய கடனை பைசல் செய்வீர்கள். புது ஏஜென்சி எடுப்பீர்கள். வியாபாரத்தில் வேலையாட்களை தட்டிக் கொடுத்து வேலை வாங்குவீர்கள். உத்யோகத்தில் உங்கள் கை ஓங்கும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே

ராசி குணங்கள் துலாம்
கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றுவீர்கள். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பார்கள். வீடு, வாகனத்தை சீர் செய்வீர்கள். பயணங்கள் திருப்திகரமாக அமையும். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் சக பாராட்டுவார்கள். அதிஷ்ட எண்: 7 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்

ராசி குணங்கள் விருச்சிகம்
கணவன் மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். விருந்தினர்களின் வருகையால் வீட்டில் உற்சாகம் பொங்கும். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். விலகி நின்றவர்கள் விரும்பி வருவார்கள். வாகனப் பழுதை சரி செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரி உங்களை முழுமையாக நம்புவார். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு

ராசி குணங்கள் தனுசு
சந்திராஷ்டமம் நீடிப்பதால் பழைய பிரச்சனைகள் தலைத்தூக்கும். தெளிவான முடிவுகள் எடுக்க முடியாமல் குழம்புவீர்கள். பிள்ளைகள் பிடிவாதமாக இருப்பார்கள். சில விஷயங்களுக்கு அனுபவ அறிவை பயன்படுத்துவது நல்லது. வியாபாரத்தில் வேலையாட்களின் தொந்தரவுகளை விட்டுப் பிடிப்பது நல்லது. உத்யோகத்தில் விமர்சனங்களை ஏற்றுக் கொள்வது நல்லது. அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மயில் நீலம், ப்ரவுன்

ராசி குணங்கள் மகரம்
மறைந்துக் கிடந்த திறமைகளை வெளிப்படுத்துவீர்கள். பிள்ளைகள் உங்கள் அறிவுரையை ஏற்றுக் கொள்வார்கள். கல்யாணப் பேச்சு வார்த்தை சுமூகமாக முடியும். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும். வியாபாரத்தில் வி.ஐ.பிகள் வாடிக்கையாளர்களாவார்கள். உத்யோகத்தில் மேலதிகாரி மதிப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, பச்சை

ராசி குணங்கள் கும்பம்
வர வேண்டிய பணம் கைக்கு வரும். உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்கள் உதவியை நாடுவீர்கள். மனதிற்கு இதமான செய்திகள் வரும். வீடு வாங்க திட்டமிடுவீர்கள். வியாபாரத்தில் சில நுணுக்கங்களைக் கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் உங்களின் புதிய முயற்சிகளை அதிகாரி பாராட்டுவார். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: பிங்க், க்ரீம் வெள்ளை

ராசி குணங்கள் மீனம்
மற்றவர்களை நம்பி எந்த வேலையையும் ஒப்படைக்கக் கூடாது என்று முடிவெடுப்பீர்கள். உறவினர்களில் உண்மையானவர்களை கண்டறிவீர்கள். சிக்கனமாக செலவழித்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களை கவர சலுகைகளை அறிவிப்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுக்கு உதவுவீர்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: பிஸ்தா பச்சை, மஞ்சள்

இதையும் படிக்கலாமே
Bigg Boss இன்ப அதிர்ச்சியில் கணேஷ்
சமந்தாவின் திருமணம்
19 வயது மாணவியை பாலத்தின் அடியில் கட்ட...
கத்ரீனாவை முத்தமிட மறுத்த பிரபலம்..!
இணையத்தில் தனது கற்பை விற்ற இளம் பெண்....
மதிப்பெண் ஆசைக்காட்டி 40 மாணவர்களை உல்...
அட கொடுமையே! இப்படியும் ஒரு மனைவியா? ந...
அதிகமாக பகிருங்கள்: தினமும் 40 லிட்டர்...
பேஸ்புக் பாவனையாளர்களுக்கு காத்திருக்க...
போதை மருந்து கொடுத்து பெண்களை சீரழிக்க...
இன்றைய நாளும் இன்றைய பலனும் .!
இன்றைய நாளும் இன்றைய பலனும் ..!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •