தல அஜித்தின் அடுத்த படம் மிக விரைவில்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ஹாலிவுட் தொழில்நுட்பத்திற்கு இணையாக தமிழ்சினிமாவில் எடுக்கப்பட்ட திரைப்படம் ‘விவேகம்’. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான ‘விவேகம்’ ஒரு பக்கம் பாராட்டையும், இன்னொரு பக்கம் நெகட்டிவ்வான விமர்சனத்தையும் எதிர்க்கொண்டது. ஐரோப்பாவில் நடந்த படப்பிடிப்பின்போது அஜித், விவேக் ஓபராய் இடம்பெறும் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?அப்போது அஜித்தை ஓபராய் தாக்குவதுபோல் காட்சி எடுக்கப்பட்டபோது துரதிஷ்டவசமாக அருகில் இருந்த பாறையின்மேல் அஜித் உடல் மோதியது. அப்போது வலியால் துடித்த அஜித்க்கு அங்குள்ள டாக்டர்கள் அளித்த சிகிச்சையால் தற்காலிகமாக அந்த வலியை சமாளித்துக் கொண்டார். சென்னை திரும்பியபிறகு வலிமிகுந்த இடத்தில் ஆபரேஷன் செய்து கொண்டார், அஜித்.

ஆபரேஷன் முடித்து அஜித் நார்மலானவுடன், அவரது அடுத்தப்படத்திற்காக பேச்சு துவங்கி விட்டது. ’வீரம், வேதாளம், விவேகம் படத்தைத் தொடர்ந்து அஜித் – சிவா காம்பினேஷனில் உருவாகும் நான்காவது படத்தை எங்கள் நிறுவனம் தயாரிக்கிறது’ என்கிற செய்தியை ஏ.எம்.ரத்னத்தின் மருமகளும், திரைப்பட பாடகியுமான ஐஸ்வர்யா கிருஷ்ணா வாக்குமூலம் கொடுத்து இருப்பதாக வைரல் செய்தி பரவியது. சோஷியல் மீடியாக்களில் பலரும் போட்டி போட்டுக் கொண்டு அந்தச் செய்தியை உண்மையானது போல் ஊர்ஜிதப்படுத்தினர். அஜித்தின் அடுத்தப்பட தயாரிப்பு குறித்து ஐஸ்வர்யா கிருஷ்ணாவிடம் பேசினோம்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?‘அஜித்சாரோடு அடுத்த படத்திலும் சிவாசார் காம்பினேஷன் தொடரும் என்பதுபோல் செய்திகள் வருகின்றன. அஜித்சார் அழைத்து வாய்ப்பு கொடுத்தால் எங்கள் நிறுவனம் தயாரிக்கும் என்று நான் சொன்னதை அடுத்தப்படத்துக்கு நாங்கள்தான் தயாரிப்பாளர் என்று நான் உறுதியாக சொன்னதாக வந்த செய்திகளில் உண்மை இல்லை, வைரலுக்காக தவறாக வெளியிடப்பட்ட செய்தி’ என்று மறுத்தார்.

அஜித் – சிவாவுக்கு நெருக்கமான நண்பர்கள் சிலரிடம் பேசினோம். ”டைரக்டர் சிவா தனது குடும்பத்தோடு ஐரோப்பாவுக்கு சென்று இருக்கிறார். தீபாவளிக்கு முதல்நாள் சென்னைக்கு திரும்புகிறார். ‘விவேகம்’ குறித்த விமர்சனங்கள் அஜித் – சிவா இருவருக்கும் மனக்காயம் ஏற்பட்டது என்னவோ உண்மை. இன்னொரு படத்தில் இருவரும் இணைந்து வெற்றி படத்தை கொடுத்தே ஆகவேண்டும் என்கிற வெறி அஜித் – சிவா இருவரிடமும் மிகுந்து இருக்கிறது. ஐரோப்பா சென்று ரிலாக்ஸ் செய்தபிறகு அடுத்தப்படத்துக்கான கதை டிஸ்கஷனில் களமிறங்க திட்டமிட்டு இருக்கிறார், சிவா. அஜித்தும் ஆபரேஷனுக்கு பிறகு வீட்டிலேயே தங்கி பூரண ஓய்வு எடுத்து வருகிறார். அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா? அஜித் நடிக்கும் அடுத்தப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரிக்கிறார் என்பதில் எள்முனையளவும் உண்மையில்லை. அஜித் நடிப்பில் சிவா இயக்கும் படத்தை, ‘சத்யஜோதி’ தியாகராஜன் தயாரிக்கிறார். ‘விவேகம்’ படத்தில் இடம்பெற்ற அனைத்து டெக்னீஷியன்களும் அஜித்தின் அடுத்தப்படத்திலும் பணியாற்றுகின்றனர். ‘விவேகம்’ படத்தை தயாரித்து நெகட்டிவ் விமர்சனத்தை எதிர்கொண்ட தயாரிப்பாளர் தியாகராஜன் கையில் அடுத்தப்படத்துக்கான வெற்றிக்கனியை ஒப்படைக்க இருக்கிறார், அஜித்’’ என்பது ஹைபர் ஹைலைட்ஸ் நியூஸ்.

நன்றி விகடன்

இதையும் படிக்கலாமே
Harish Kalyan and Bindhu madhavi Live
பிக் பாஸ் வீட்டின் மதிப்பு எவ்வளவு தெர...
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
தமிழ் தெரியாத இந்த பெண்ணின் தமிழ்பாடல்...
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
தமிழர்களை நாடு கடத்தும் கனடா!
எந்த கடவுளை எப்பொழுது வணங்கினால் என்ன ...
இப்படிபட்டவர்களா ஆண்கள்? என் உடம்பு தா...
முதலிரவில் மனைவியை பிளேடால் வெட்டி கொட...
மூன்று ஆண்களுடன் உல்லாசமாய் இருந்த பெண...
காதலி கேட்ட ஒற்றை வார்தையால் போலீஸாரை ...
இலங்கையில் பிறந்தவுடனேயே வீதியில் தூக்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •