இன்றைய பலனும் இன்றைய நாளும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹேவிளம்பி ஆண்டு – புரட்டாசி 31 – செவ்வாய்க்கிழமை (17.10.2017)
நட்சத்திரம் : பூரம் காலை 7.44 வரை பின்னர் உத்திரம்
திதி : திரயோதசி அதிகாலை 0.39 வரை பின்னர் சதுர்த்தசி
யோகம் : சித்த – அமிர்த யோகம்
நல்லநேரம் : காலை 7.45 – 8.45 / மாலை 4.45 – 5.45

செவ்வாய்க்கிழமை – சுப ஓரை விவரங்கள்
(காலை 10.30 முதல் 11 வரை, பகல் 12 முதல் 1 வரை 4.30 முதல் 6 வரை, இரவு 7 முதல் 8 வரை)
சுபகாரியங்கள் : சிகிச்சை செய்ய, ஆயுதஞ் செய்ய, யந்திரம் ஸ்தாபிக்க சிறந்த நாள்

மேஷம்
குடும்பத்தின் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவீர்கள். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள். உறவினர்களால் ஆதாயம் உண்டு. அக்கம்-வீட்டாரின் அன்புத் தொல்லை குறையும். வியாபாரம் செழிக்கும். உத்யோகத்தில் சக ஊழியர்கள் மதிப்பார்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, மயில் நீலம்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

ரிஷபம்
பிரியமானவர்களின் சந்திப்பு நிகழும். தாய்வழி உறவினர்களுடன் மனஸ்தாபம் வந்து நீங்கும். வெளிவட்டாரத்தில் புது அனுபவம் உண்டாகும். நவீன சாதனங்கள் வாங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் ஒத்துழைப்பார்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: ப்ரவுன், மஞ்சள்

மிதுனம்
குடும்பத்தில் உள்ளவர்களின் உணர்வுகளைப் புரிந்துக் கொண்டு அதற்கேற்ப உங்களை மாற்றிக் கொள்வீர்கள். அரசால் ஆதாயம் உண்டு. விருந்தினர் வருகை அதிகரிக்கும். நாடி வந்தவர்களுக்கு உதவி செய்வீர்கள். வியாபாரத்தில் பற்று வரவு உயரும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், ப்ரவுன்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கடகம்
கணவன்-மனைவிக்குள் நெருக்கம் உண்டாகும். முகப்பொலிவுக் கூடும். உறவினர்கள் வீடு தேடி வருவார்கள். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். ஆடை, ஆபரணம் சேரும். வியாபாரத்தில் புது ஒப்பந்தம் கையெழுத்தாகும். உத்யோகத்தில் பணிகளை விரைந்து முடிப்பீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: வைலெட், இளஞ்சிவப்பு

சிம்மம்
மதியம் 1.43 மணி வரை ராசிக்குள் சந்திரன் நீடிப்பதால் உங்களை அறியாமலேயே தாழ்வு மனப்பான்மை தலைத் தூக்கும். மற்றவர்களுடன் உங்களை ஒப்பிட்டுக் கொண்டிருக்க வேண்டாம். உங்களின் அணுகு முறையை மாற்றுங்கள். வியாபாரத்தில் பணியாட்களால் டென்ஷன் ஏற்படும். உத்யோகத்தில் சக ஊழியர்களை பகைத்துக் கொள்ளாதீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கன்னி
குடும்ப ரகசியங்களை வெளியிட வேண்டாம். பணப்பற்றாக்குறை நீடிக்கும். யாரிடமும் உணர்ச்சி வசப்பட்டு பேசாதீர்கள். உடல் நலம் பாதிக்கும். வியாபாரத்தில் போட்டிகளையும் தாண்டி ஓரளவு லாபம் வரும். உத்யோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். மதியம் 1.43 மணி முதல் ராசிக்குள் சந்திரன் நுழைவதால் கவனமுடன் செயல்பட வேண்டும். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்

துலாம்
குடும்பத்தினருடன் மனம் விட்டு பேசி மகிழ்வீர்கள். பிரபலங்கள் அறிமுகமாவார்கள். உங்களால் மற்றவர்கள் ஆதாயமடைவார்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் புது வேலையாட்கள் அமைவார்கள். உத்யோகத்தில் உங்களின் நிர்வாகத்திறமை வெளிப்படும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

விருச்சிகம்
எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை வரும். உடன்பிறந்தவர்கள் பாசமழைப் பொழிவார்கள். நம்பிக்கைக்குறியவர்களை ஆலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். புதுத் தொழில் தொடங்குவீர்கள். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை

தனுசு
குடும்பத்தில் சந்தோஷம் நிலைக்கும். கடனாக கொடுத்த பணத்தை வசூலிப்பீர்கள். புதியவர்கள் நண்பர்களாவார்கள். வெளிவட்டாரத்தில் மதிக்கப்படுவீர்கள். வியாபாரத்தில் சில தந்திரங்களை கற்றுக் கொள்வீர்கள். உத்யோகத்தில் தலைமையின் நம்பிக்கையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மகரம்
மதியம் 1.43 மணி வரை சந்திராஷ்டமம் இருப்பதால் சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும், அத்தியாவசிய செலவுகள் அதிகரிக்கும். உடல் நலம் பாதிக்கும். வாகனம் தொந்தரவு தரும். வியாபாரத்தில் போராடி லாபம் ஈட்டுவீர்கள். உத்யோகத்தில் வேலைச்சுமையால் சோர்வு வந்து விலகும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு

கும்பம்
பிள்ளைகளால் மதிப்புக் கூடும். கல்யாணப் பேச்சு வார்த்தை சாதகமாக அமையும். மனைவிவழியில் ஒத்துழைப்பு அதிகரிக்கும். வேற்றுமதத்தவர் உதவுவார். வியாபாரத்தில் லாபம் வரும். உத்யோகத்தில் புது சலுகைகள் கிடைக்கும். மதியம் 1.43 மணி முதல் சந்திராஷ்டமம் தொடங்குவதால் தடைகளை தாண்டி முன்னேறுவீர்கள். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

மீனம்
குடும்பத்தினர் உங்கள் ஆலோசனையை ஏற்பார். வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அரசால் அனுகூலம் உண்டு. எதிர்பார்த்த இடத்திலிருந்து நல்ல செய்தி வரும். வியாபாரத்தில் பழைய வேலையாட்களை மாற்றுவீர்கள். உத்யோகத்தில் அதிகாரிகளுக்கு நெருக்கமாவீர்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா

இதையும் படிக்கலாமே
பேய்கள் உங்களை பின் தொடர்கிறதா? எப்படி...
பிரபல நடிகையை பின் தொடரும் மர்ம சக்தி ...
ஜூலிக்கே love Proposal அடபாவிகளா?
இன்றைய நாளும் இன்றைய பலனும்
பெண்களை எளிதில் மடக்குவது எப்படி?
பெண்களால் அடக்கிக் கொள்ள முடியாத ஆசைகள...
இன்றைய நாளுக்கான பலன்கள்!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பெண்களின் மூளைக்குள் என்ன இருக்கிறது. ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
பட்டப் பகலில் நடு ரோட்டில் வைத்து சுட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •