இறப்புக்குப் பின் என்னவாகிறோம்?சொர்க்கமா? நரகமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 39
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  39
  Shares

வாழ்க்கையில் பல கேள்விகள் பதிலற்றவை. அவற்றில் மிக முக்கியமான ஒன்று… மரணம். இத்தனை விஞ்ஞான வளர்ச்சிக்குப் பின்னும், ‘மரணத்துக்குப் பிறகு நாம் என்னவாகிறோம்’ என்பது மில்லியன் டாலர் கேள்வியாகவே இருக்கிறது.இறப்புக்குப் பின் என்னவாகும்? சொர்க்கமா? நரகமா? உண்மையில் அவை இருக்கிறதா? எம கிங்கரர்கள் வந்து நம்மை அழைத்துப் போவார்களா, எமதர்மன் நம்மை இண்டர்வியூ பண்ணுவாரா போன்ற குழப்பங்கள் இன்னும் தீரவில்லை. ‘இந்த ரணகளத்திலும் ஒரு கிளுகிளுப்பா’ என்று வடிவேல் கேட்கிற மாதிரி இன்னொரு முக்கிய கவலையும் உண்டு. சொர்க்கத்தில் ரதி, ரம்பை, திலோத்தமை எல்லாம் உண்டா?

இவைகளுக்கு எல்லாம் நேரடியான பதில் இல்லையென்றாலும், மரணம் தொடர்பாக நடந்த பல ஆராய்ச்சிகள் பற்றியும், இறப்புக்கு அருகில் சென்று வந்த சில மனிதர்களின் அனுபவங்கள் பற்றியும் இந்த எபிசோடில் விவாதிப்போம்.வெளிப்படையாகச் சொன்னால் நாம் அனைவரும் இறப்புக்கு பயந்தவர்களே ! ‘சாவைப் பார்த்து எனக்கு பயம் இல்லை… என்னைப் பார்த்து அந்த சாவுதான் பயப்படணும்’ என்பதெல்லாம் உடான்ஸ் சினிமா வசனம். உளவியல்ரீதியாக உள்ளுக்குள் எல்லோருக்கும் சாவைப் பற்றிய பயம் உண்டு. இதுதான் மருத்துவப் பார்வை.அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

மிக மூத்த மதமான இந்து மதம் மரணம் பற்றிய பல கருத்துகளைச் சொல்லியிருக்கிறது. ஒருவர் சாகும்போது, ‘தம்பி, இன்னிக்கு செத்தா, நாளைக்கு பால்… அப்புறம் நாங்க எங்க வேலையைப் பார்க்க போயிடுவோம்’ என்று உண்மையை சொல்லாமல், ‘சந்தோஷமா சாவு தாத்தா, நாளைக்கு என் வயித்துல நீதான் புள்ளையா பொறப்ப’ என அவரை கொஞ்சம் நம்பிக்கையுடன் சந்தோஷமாக சாக வைக்கிறது.

ஐயோ மண்டையை போடுகிறோமே என்று விரக்தியில் சாகாமல், அடுத்த ஜென்மத்தில் நாம் அம்பானியாக பிறப்போமா, ஆண்ட்ரியாவாக பிறப்போமா என்று ஜொள்ளு விட்டுக்கொண்டே ஜாலியாக சாக வைக்கிறது இந்து மதம். அதனால்தான் இறப்பை சங்கு ஊதி, ஆட்டம் பாட்டத்துடன் அவர்கள் கொண்டாடு கிறார்கள்.‘செத்த அப்புறம் ஒண்ணும் கிடையாது.

சூனியம்தான்’ என்கிறது மற்ற மதங்கள். சரி… இதைப்பற்றி யாரிடம் கேட்டால் சொல்வார்கள்? யாரிடம் கேட்டாலும் சொல்லத் தெரியாது என்பதுதான் நிஜம். பிரச்னை என்னவென்றால் ஒருவர் இறந்த பின் அவர் திரும்பி வந்து, ‘யப்பா… செமையா இருக்கு’ என சொல்ல முடியாது. செத்து செத்து விளையாடிய ஆள் இங்கு யார் இருக்கிறார்கள்? அதானே… யார் இருக்கிறார்கள் என்று எதிர்கேள்வி கேட்கிறீர்களா? ஆமாம்… சிலர் இருக்கிறார்கள்.

கடந்த 2011ம் ஆண்டில், இங்கிலாந்தில் ஒரு பேஷன்டை ஐ.சி.யுக்குக் கொண்டு போனார்கள். பேஷன்டை பார்த்துக் கொண்டு இருக்கும் போதே அவருக்கு ஹார்ட் அட்டாக் வந்துவிட்டது. ஒருவழியாகக் காப்பாற்றிவிட்டார்கள். பிழைத்த பின் அவர் சொன்னார். ‘என் உடலில் இருந்து நான் வெளியே வந்தேன். ரூமில் ஓரமாக நின்று என்ன செய்கிறார்கள் என வேடிக்கை பார்த்தேன்.

ஒரு வழுக்கைத்தலை டாக்டரும், ஒரு நர்சும் எனக்கு ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்துக் கொண்டிருந்தார்கள்’ என ஞாபகம் வந்த பின் அங்கு நடந்த அனைத்தையும் படத்தில் பார்த்தது போல கூறினார். இதுவரை அவர்களை இவர் நேரில் பார்த்ததில்லை. இதில் கூத்து என்னவென்றால் அவர் அரை மணி நேரத்துக்கு முன்னரே வீட்டில் இருக்கும்போதே சுயநினைவை இழந்து விட்டிருந்தார். இன்னும் கொஞ்சம் பின்னோக்கிப் போவோம்.அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

1977ம் ஆண்டில் அமெரிக்காவில் நடந்த ஒரு சம்பவம். ஒரு பெண்ணுக்கு மாரடைப்பு வந்தது. இறந்தவரை உயிர்ப்பிக்கும் முயற்சியில் டாக்டர்கள் இருந்தபோது, என்ன நடந்தது என அவர் சொல்கிறார், ‘நான் அப்படியே அலாக்கா என் உடம்பிலேந்து மேலே போயிகினே இருந்தனா, பாத்தா ஹாஸ்பிடல் மாடி தாண்டி மேலே போயிகினு இருக்கேன். மூணாவது மாடி ஜன்னல் தாவாரத்துல, ஒரு டென்னிஸ் ஷூ கெடக்கு’ என்றார். போய்ப் பார்த்தால் அவர் சொன்ன பொசிஷனில் அதே இடத்தில் அந்த ஷூ கிடந்தது.

இப்போது 1991ல் நடந்த ஒரு சம்பவம். ரெனால்ட்ஸ் என்பவருக்கு மூளையில் அறுவை சிகிச்சை நடந்தது. மருந்துகள் கொடுத்து மூளையை முற்றிலும் இறப்பு நிலைக்கு தள்ளினர். போதாக்குறைக்கு, காதில் ஒன்றும் கேட்காமல் இருக்க ‘டிக் டிக் டிக்’ என சத்தம் போடும் ஒரு ஹெட்செட்டையும் மாட்டிவிட்டார்கள்.

இதுவும் போதாது என அவர் மூளையில் நடப்பதை ஈ.ஈ.ஜி மூலம் கண்காணித்தனர். முற்றிலும் மூளை இறந்ததை ஈ.ஈ.ஜி உறுதி செய்தது. ஆபரேஷன் முடிந்து, அவர் கண் விழித்த பின் அவர் பல அதிர்ச்சி யான விஷயங்களைச் சொன்னார். டாக்டர் நர்சிடம் என்ன பேசிக்கொண்டு சிரித்தார் எனவும், ஆபரேஷன் தியேட்டரில் ஒலித்துக் கொண்டிருந்த பாட்டின் பெயரையும், அவரின் மண்டை ஓட்டை பிளக்க பயன்படுத்திய ரம்பத்தின்
உருவத்தையும் அட்சர சுத்தமாக விவரித்தார். கேட்டால், ‘ஆபரேஷன் ஆரம்பித்த பின், நான் என் உடலில் இருந்து வெளியேறி, ஓரமாக நின்று கொண்டு நீங்கள் செய்வதைப் பார்த்தேன்’ என கூலாகக் கூறினார்.

இதுபோன்ற எத்தனையோ சம்பவங்கள் பல ஆராய்ச்சிக் கட்டுரைகளில் விரிவாக அலசப்பட்டுள்ளது. இது எங்கோ தனித்து நடந்த சம்பவம் அல்ல. நியூயார்க்கில் மாரடைப்பு வந்து செத்துப் பிழைத்த 101 நோயாளிகளிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தப் பட்டது. மாரடைப்பு வரும் நேரத்தில், இதயம் கொஞ்ச நேரம் துடிக்காமல் பின்னர் இயங்க ஆரம்பிக்கும். அதாவது பேஷன்டுகள், சில மணித்துளிகள் இறந்து பிழைப்பர். இறந்து பிழைத்த பாதிப்பேருக்கு அந்த நேரத்தில் ஏதோ ஓர் அனுபவம் கிடைத்தது. ஏழு வகையான அனுபவங்களில் ஏதோ ஒன்று இவர்களுக்கு
கிடைத்திருக்கிறது.அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

அவை : 1. பயம், 2. விலங்குகள் அல்லது செடிகொடிகளை பார்த்தல், 3.பிரகாசமான வெளிச்சம், 4. வன்முறை மற்றும் தண்டனைகள், 5. அவர்கள் வாழ்க்கையில் நடந்த ஒரு சம்பவம் மறுபடி நடத்தல், 6. குடும்பத்தினரைப் பார்த்தல், 7. மேலே சொன்ன நண்பருக்கு நடந்தது போல் இறந்த பின் ரூமில் என்ன நடந்தது என்பதை ஓரமாக நின்று பார்த்தல். பாக்கிப் பேருக்கு எதுவும் நடக்காமலும் இருக்கலாம், அல்லது நடந்தது எதுவும் நினைவில் இல்லாமல் இருக்கலாம்.

பலரும் பலவிதமாக கூறினர், ‘ஒரு ஃபங்கஷனுக்கு போயிருந்தேன். அது எல்லாரையும் எரிக்கும் ஒரு விழாவாகும்’ எனவும், ‘என்னுடன் நாலு பேரு வந்தாங்க, அதுல எவன் பொய் சொல்றானோ, அவன் செத்துடுவான்’ என்றும் , ‘என்னை யாரோ தண்ணிக்குள்ள அடில இழுத்துக்கிட்டே போறாங்க’ என பல மாதிரியான அனுபவங்கள். இறந்தபின் ஏதோ ஒரு வகையான அனுபவம் கிடைப்பது உறுதி. அது என்ன மாதிரியானது என்பது அவர்கள் கலாசாரம், கடவுள் நம்பிக்கை, மனத் திருப்தி அளவு, அவர்கள் வாழ்வுமுறையைக் கொண்டே வகைப்படும்.

இதைப்போல், ‘இறப்புக்கு அருகிலான அனுபவங்கள்’ கிடைத்த பலரின் வாழ்வை அது மாற்றியமைக்கிறது. ஒரே நாளில் நல்லவர்கள் ஆகி விடுகிறார்கள். முன்பின் தெரியாத நபர்களிடம் பாசத்தை பொழிவது, எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் அன்புகாட்டுவது, பலருக்கும் பண உதவி செய்வது என அவர்கள் குணங்கள் மேம்படுகின்றன.

டாக்டர்களிடம், ‘டாக்டர், நான் ஐ.சி.யுவில் படுத்து கிடக்கறப்போ, ஒரு தேவதை வந்து ஜூஸ் குடுத்துது. அதை குடிச்சவுடன் ராமரும் லக்ஷ்மணரும் வந்து வாழ்த்தினாங்க’ என்று கூறினால், டாக்டர் சிரித்துக்கொண்டே சைக்கியாட்டிரிஸ்ட்டுக்குப் போன் பண்ணுவார். ‘‘டாக்டர், உங்களுக்கு ஒரு பேஷன்ட் அனுப்புறேன். அவங்க சொல்றத கேளுங்க… செம ஜாலியா இருக்கும்’’ என கழட்டி விட்டுவிடுவார்.அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இறப்புக்கு அருகிலான அனுபவங்கள் என்பது இதுவரை ஒரு அறிவியல் சமாச்சாரமாக யாரும் ஏற்றுக் கொண்டதில்லை. கற்றது கைமண் என்ற அளவில்தான் நாம் இருக்கிறோம். நமக்குத் தெரியாவிட்டால், இப்படி ஒரு மேட்டரே கிடையாது எனவும், இது பூட்ட கேஸ் பா எனவும், அது உங்க கற்பனை எனவும், இவரு சூப்பர் டாக்டர், இவருகிட்ட போங்க எனவும் மழுப்பி விடுகிறோம்.

1975ல் மூடி எனும் சைக்கியாட்ரிஸ்ட் எழுதிய புத்தகத்தில், ‘ஆத்மா என்றும், மனம் என்றும் நாம் அழைப்பது திட வடிவில் இல்லாமல் மூளைக்கு அருகில் இயங்குவது ஆகும். அதற்கான ஆதாரம் இந்த இறப்புக்கு அருகேயான அனுபவங்களை பெற்றவர்களே ஆகும்’
என்கிறார்.இதை மேற்கொண்டு எப்படி ஆராய்வது எனத் தெரியவில்லை.

உலகில் எல்லோருக்கும் கண்டிப்பாக வருவது இறப்புதான். புற்றுநோய், டி.பி, மாரடைப்பு என சிலருக்கு வரும் நோய்களுக்கு செய்யப்படும் அளவு ஆராய்ச்சிகள், அனைவருக்கும் வரும் இறப்பைப் பற்றி செய்யப்படுவதில்லை என்பது இறப்பைவிட கவலைக்குரிய விஷயம்.

சொர்க்கம், நரகம் இருக்கிறதா? பரலோகமா அல்லது எமலோகமா? ரம்பை டான்ஸ் உண்டா? செய்த பாவங்களுக்கு தண்டனை உண்டா? இந்த ஜென்மத்தை உருப்படியாக வாழாமல் போனால் அதை சரி செய்ய மறு ஜென்மம் உண்டா என்ற கேள்விகளுக்கு ரொம்ப பின்னர் பதில் கிடைக்கலாம். செத்தால் ஆவியாமோ, காத்து கருப்பு நெசமா, பாடிகாட் முனீஸ்வரரைப் பார்க்க முடியுமா என்ற கேள்விகளுக்கும் யாராவது பதில் கண்டுபிடித்தால் தேவலை. அதுவரை ‘ஆவிகளுடன் பேசலாம் வாருங்கள்’ ஆசாமிகளை நம்புவதைத் தவிர நமக்கு வேறு வழியில்லை.அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

நியூயார்க்கில் மாரடைப்பு வந்து பிழைத்த 101 நோயாளி களிடம் ஓர் ஆராய்ச்சி நடத்தியிருக்கிறார்கள். இவர்கள் கிட்டத்தட்ட மரணத்துக்கு அருகில் சென்று வந்தவர்கள். இவர்களில் பாதிப்பேருக்கு ‘அந்த’ நேரத்தில் ஏழு வகையான அனுபவங்களில் ஒன்று கிடைத்திருக்கிறது.புற்றுநோய், டி.பி, மாரடைப்பு என சிலருக்கு வரும் நோய்களுக்கு செய்யப்படும் அளவு ஆராய்ச்சிகள், அனைவருக்கும் வரும் இறப்பைப் பற்றி செய்யப்படுவதில்லை என்பது இறப்பைவிட கவலைக்குரிய விஷயம்.

இதையும் படிக்கலாமே
வாழைத்தண்டு
பொடுகை விரட்டும் வெங்காயச்சாறு
மருந்தாகும் எளிய பொருட்கள் !
முட்டையின் மகத்தான பயன்கள்
நோய் தீர்க்கும் ஆடாதோடா...!
வன்னிக்குள் தலைவர் பிரபாகரன் காட்டிய இ...
மகனை கொன்றவனை, மன்னித்து கட்டியணைத்த அ...
கோழியை கற்பழித்து கொன்ற சிறுவன்..!
தெரிந்துகொள்வோம் - சுவைமிகு சமையலுக்கு...
உலக நாடுகள் செய்ய நினைப்பதை செய்து முட...
விமானத்துக்கே போட்டியா? சிறப்பு அதிவேக...
சிவப்பான பெண்களை கண்டு ஆண்கள் மயங்குவத...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 39
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  39
  Shares