சுவிஸில் கொல்லப்பட்ட ஈழத்து இளைஞன் – உறவினர்களின் கதறலுடன் நடைபெற்ற இறுதிக்கிரியை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 119
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  119
  Shares

சுவிட்ஸர்லாந்தில் சுட்டுக்கொல்லப்பட்ட ஈழத்து இளைஞனான சுப்ரமணியம் கரனின் இறுதிக்கிரியைகள், இன்று (வெள்ளிக்கிழமை) இடம்பெற்றுள்ளன.கரனின் இறுதிக்கிரியைகளில் கலந்துகொள்வதற்காக சுவிஸ் நாட்டின் உதவியுடன் அவருடைய மனைவி, பிள்ளைகள் மற்றும் சகோதரன் ஆகியோர் அங்கு சென்றுள்ளனர். இலங்கையின் போர்ச் சூழலின் போது புகலிடம் தேடி சென்ற கரனை சடலமாக பார்த்த அவரது உறவினர்கள் கத்திக் கதறியழ, அவரது இறுதிச் சடங்கு இன்று பிற்பகல் இடம்பெற்றுள்ளது.கிளிநொச்சியை சேர்ந்த கரன் (வயது -38) சுவிட்ஸர்லாந்திற்கு புகலிடம் கோரிச் சென்றிருந்த நிலையில், சுவிட்ஸர்லாந்தின் டிசினோ மாகாணத்திலுள்ள அகதிகள் இடைத்தங்கல் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டிருந்தார். அங்கு அகதிகளுக்கு இடையில் அடிக்கடி முறுகல் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.இந்நிலையில், கடந்த 7ஆம் திகதி வேறு இரு அகதிகளுடன் குறித்த முகாமுக்கு டிசினோ மாகாண பொலிஸார் சென்றபோது, கரன் அவர்களை கத்தியால் தாக்க முற்பட்டதாகவும் அதனால் துப்பாக்கிச் சூடு நடத்த வேண்டிய தேவை ஏற்பட்டதாகவும் டிசினோ மாகாண பொலிஸார் கூறியுள்ளனர்.எனினும், கரன் அமைதியான சுபாவம் கொண்டவர் என்றும் அவர் அவ்வாறு செய்திருக்க வாய்ப்பில்லை என்றும் உறவினர்கள் கூறுகின்றனர். ஒருவேளை, பொலிஸார் கூறுவதைப் போல கரன் கத்தியுடன் வந்திருந்தாலும், அவரது உயிரை பறிக்க வேண்டிய தேவை இல்லையென குறிப்பிட்டுள்ள உறவினர்கள், சுவிஸ் அரசாங்கம் இதற்கு நீதியை பெற்றுத்தர வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர்.

நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
ஓவியாவ விட நான் சந்தோசமா இருக்கேன் - ஆ...
சே.. இப்படியும் ஒரு கேவலமான தாம்பத்திய...
கதறி அழும் பிரபல நடிகை! 5 முறை காதலில...
உங்கள் பாராட்டுகள் கிடைக்குமா? முதல் த...
விராட் கோலி-க்கு திடீர் திருமணம் ..! ம...
நடிகர் முரளிக்கு இப்படி ஒரு அழகிய மகளா...
சொந்தங்கள் கண் முன்னே வயிற்று வலியால் ...
இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை ..! ...
அழிவு நெருங்கி விட்டது...! வரலாற்றியல்...
திருமண சடங்கு நடந்துகொண்டிருக்கும் போத...
இலங்கையில் வன்முறை தீவிரம். வாட்சப் மற...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 119
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  119
  Shares