சவரத் தொழிலாளியை காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் இது தான் டிஜிடல் இந்தியாவா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 189
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  189
  Shares

வீட்டுக்குள் அனுமதி பெறாமல் சென்ற சவரத் தொழிலாளியைக் காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வைத்த கொடூரம் பீகாரில் நாலந்தா அருகே அரங்கேறியிருக்கிறது.
பீகார் ஷெரிப் மாவட்டத்தில் உள்ள நாலந்தா அருகேயுள்ள அஜேபூர் பஞ்சாயத்தின் தலைவராக இருப்பவர் சுரேந்திர யாதவ். இதே கிராமத்தில் சவரத் தொழில் செய்து வரும் மகேஷ் தாக்கூர் என்பவர் அஜய் யாதவின் வீட்டுக்குச் சென்றுள்ளார். இந்தக் கிராமத்தின் வழக்கப்படி, ஆண்கள் இல்லாத சமயங்களில் பிற ஆண்கள் வீட்டுக்குள் போகக் கூடாதாம். மகேஷ் தாக்கூர் சென்ற சமயத்தில் சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லை. இதையடுத்து, கிராம பஞ்சாயத்துக் கூட்டப்பட்டது. பஞ்சாயத்தில் மகேஷ் தாக்கூருக்கு காலணிகளை வாயால் சுத்தப்படுத்த வேண்டுமென விநோதத் தண்டனை வழங்கப்பட்டது. ‘சுரேந்திர யாதவ் வீட்டில் இல்லாதது தனக்குத் தெரியாது’ என்று மகேஷ் விளக்கமளித்தும் பலன் இல்லை. பஞ்சாயத்தார் விளக்கத்தை ஏற்கவில்லை. கொடுத்த தண்டனையை நிறைவேற்றினர். மேலும், சில பெண்கள் அவரை செருப்பாலும் அடித்தனர். இது குறித்து நாலந்தா போலீஸில் புகார் அளிக்கப்பட்டது. பஞ்சாயத்துத் தலைவர் உள்பட 8 பேரை போலீஸார் தேடி வருகின்றனர். நாலந்தா டி.எஸ்.பி சுதிர் குமார் போடிகா கூறுகையில், ”குற்றவாளிகள் யாரும் தப்பிக்க முடியாது. நாகரிகமடைந்த சமூகத்தில் இது போன்ற சம்பவங்களை ஏற்றுக்கொள்ள முடியாது” எனக் கூறியுள்ளார்.
நாலந்தாவில்தான் இந்தியாவின் முதல் பல்கலைக்கழகம் உருவானது. ஆனால், பீகார் இன்னும் கற்காலத்தில் இருந்து மீளவில்லை என்றே தோன்றுகிறது!
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
வஞ்சப்புகழ்ச்சியில் கமலை பாராட்டிய ரஜி...
ஷ்ரத்தா ஸ்ரீநாத் யார் தெரியுமா
லண்டன் வாழ் ஈழ தமிழ் மக்களுக்கு மாவீரர...
குழந்தை தங்காமல் போவதற்கு இதெல்லாம் தா...
நல்ல கணவனை கொன்று எரித்துவிட்டு காதலனை...
என்னது அதர்வாவின் அக்கா விஜய் சேதுபதிய...
உடுமலை சங்கர் கவுரவ கொலை வழக்கில் 6 பே...
பேரூந்து கட்டணத்தை அரசு உயர்த்தினால் எ...
ராகவா லாரன்ஸ் மகளை பார்த்திருக்கிறீர்க...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
21 வயது பெண் மற்றும் தாய் கொடூரமாக கற்...
கணித பாடத்தை நொடி பொழுதில் கற்க உதவும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 189
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  189
  Shares