மணக்க மணக்க புளியோதரை செய்யலாமா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

புளியோதரை

“தேவையானவை” மிளகாய் வற்றல் – 25
அரிசி – அரை படி
வேர்க்கடலை – அரை கப்
வெள்ளை உளுத்தம் பருப்பு – ஒரு மேசைக்கரண்டி
கடுகு – ஒரு தேக்கரண்டி
பெருங்காயம் – அர நெல்லிக்காய் அளவு
கடலை பருப்பு – ஒரு மேசைக்கரண்டி+ஒரு தேக்கரண்டி
புளி – ஆரஞ்சு பழ அளவு
கல் உப்பு – ஒன்றரை மேசைக்கரண்டி
கறிவேப்பிலை – 2 கொத்து
வெந்தயம் – அரை மேசைக்கரண்டி
எண்ணெய் – 100 மில்லி
மஞ்சள் தூள் – ஒரு தேக்கராண்டி
சீனி – 3 தேக்கரண்டி
வேர்க்கடலையை தோல் நீக்கி சுத்தம் செய்து எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி புளியை போட்டு அதனுடன் உப்பு போட்டு 10 நிமிடம் ஊற வைக்கவும். புளியுடன் தண்ணீர் ஊற்றி கரைத்து 3 1/2 கப் புளித் தண்ணீர் எடுத்துக் கொள்ளவும்.
வெறும் வாணலியில் வெந்தயத்தை போட்டு மிதமான தீயில் வைத்து வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
அதே வாணலியில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பெருங்காயத்தை பிய்த்து போட்டு பொரித்து எடுக்கவும். பிறகு மிளகாயை போட்டு தீயை குறைந்து வைத்து வதக்கவும்.
அதில் கடுகு, கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு ஒரு முறை கிளறி விட்டு புளித் தண்ணீரை ஊற்றி மஞ்சள் தூள், சீனி போட்டு கொதிக்க விடவும். புளித் தண்ணீரை ஊற்றியதும் தீயை அதிகமாக வைத்து செய்யவும்.
பெருங்காயத்தையும் வெந்தயத்தையும் பொடி செய்து எடுத்துக் கொள்ளவும்.
15 நிமிடம் கொதித்ததும் கிளறி விடவும். 8 நிமிடம் கழித்து பெருங்காயப் பொடி, வெந்தயப் பொடி போட்டு கிளறி கொண்டே இருக்கவும்.
ஆறியதும் எடுத்து ஒரு பாத்திரத்தில் போட்டு வைத்துக் கொள்ளவும். கைப்படாமல் இருந்தால் 6 மாதங்கள் வரை கெடாமல் இருக்கும்.
சாதத்தை பொலபொலவென்று வடித்து 2 மேசைக்கரண்டி எண்ணெய் ஊற்றி, எண்ணெய் ஊற்றுவதால் சாதம் ஒன்றுடன் ஒன்று ஒட்டாமல் இருக்கும் அதன் மேல் வேர்க்கடலை மற்றும் கறிவேப்பிலை போட்டு அதில் தேவையான அளவு புளிக்காய்ச்சல் போட்டு நன்கு கலந்து விடவும்.
சுவையான புளியோதரை தயார்.
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
தூக்கம் தொலைத்த இரவுகள் !!!
வாழைப்பூ உருண்டை பிரியாணி
மணக்க மணக்க மட்டன் 65 மற்றும் ப்ரைட் ...
வீட்டுப் பெண்களே! உங்களைதான்! படியுங்க...
மீன் வாங்க போகும் முன் இதை கொஞ்சம் படி...
உஷார் மக்களே உஷார்! மீண்டும் சூடேற்றி...
அதிர்ச்சியூட்டும் ஓர் ஆய்வு - புரோய்லர...
இறைச்சியுடன் (கறி) இவற்றை சேர்த்து சாப...
"ஹலால்" எங்கோ கேள்வி பட்டது ...
இளமையில் இதை சாப்பிடுங்கள் முதுமையிலு...
ஒட்டுமொத்த சமையலறை குறிப்புகளும் ஒரே ப...
500 ரூபாய்க்கு 20 வகை அசைவ உணவுகளை கொட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •