கொழுப்பைக் குறைக்கும் கொத்தவரைக்காய்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

கொத்தவரை செடியின் வேர் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
அதனால் இது விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளது.
சத்துக்கள் நிறைந்த கொத்தவரங்காய் உணவுகள் கொத்தவரை செடி வகையை சேர்ந்தது.


மூன்று முதல் நான்கு அடி உயரம் வரை வளரக்கூடியது.
இது சீனி அவரைக்காய் என்றும் அழைக்கப்படுகிறது.
இது சர்க்கரை நோயாளிகளுக்கு ஏற்றது.
கொத்தவரங்காயில் புரதம் நிறைந்துள்ளது.
நீரில் கரையும் நார்ச்சத்தும், நீரில் கரையாத நார்ச்சத்தும் இதில் உள்ளது.
நீரில் கரையும் நார்ச்சத்து ஜீரணத்திற்கு உதவுகிறது.
நீரில் கரையாத நார்ச்சத்து உடலில் இருக்கும் கழிவுகளை வெளியேற்றுவதற்கு உதவுகிறது.
நாம் கொத்தவரங்காய் உணவுகளை சாப்பிடும்போது அதில் இருக்கும் சர்க்கரை மெதுவாகவே ஜீரணமாகும்.
அதனால் இன்சுலின் ஹார்மோன் சற்று குறைவாகவே சுரந்தாலும் சர்க்கரையின் அளவு ரத்தத்தில் அதிகரிப்பதில்லை.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

 

மிக குறைந்த கிளைசிமிக் உணவு பட்டியலில் கொத்தவரங்காய் இடம் பிடித்துள்ளது.
இதில் இருக்கும் நார்ச்சத்து ரத்தத்தில் உள்ள கொழுப்பின் அளவை குறைக்க உதவும்.
கொத்தவரங்காயில் போலிக் அமிலம் உள்ளதால் கர்ப்பிணி பெண்கள் இதனை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளலாம்.
அதில் இருக்கும் கால்சியம் சத்து எலும்புகளின் வளர்ச்சிக்கு துணைபுரிகிறது.
இரும்பு சத்து, ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரித்து ரத்த ஓட்டத்தை சீர்செய்கிறது.
கொத்தவரங்காய் சற்று கசப்பு சுவை உடையது.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

கொத்தவரங்காய் சாப்பிட்டால் வாதம் அதிகரிக்கும் என்றும் கை, கால் வலி உண்டாகும் என்றும் சிலர் கருதுகிறார்கள்.
அத்துடன் தேங்காய் துருவல், மிளகு, சீரகம் போன்ற பொருட்களை சேர்த்து சமைப்பதால் அதில் இருக்கும் வாததன்மை சமநிலையடைந்து விடும்.
கொத்தவரங்காய் விதை (குவார்கம்) மிகுந்த மருத்துவ குணம் வாய்ந்தது.
அதை பொடி செய்து மருந்து தயாரிக்கிறார்கள்.
இந்த பொடி சர்க்கரைநோயை கட்டுப்படுத்த உதவுகிறது. உடல் எடையையும், உடல் கொழுப்பையும் குறைக்கும்.
மலச்சிக்கலையும் போக்கும்.


கொத்தவரங்காய் விதை பொடியில் புரதமும், நார்ச்சத்தும் இருக்கிறது.
நீரில் கரையக்கூடிய நார்ச்சத்தாக இருப்பதால் மலச்சிக்கலை எளிதாக போக்குகிறது.
மேலும் ஜீரணப் பாதை ஆரோக்கியமாக இயங்கவும் உதவுகிறது.
அடிக்கடி மலம் கழிக்கும் உணவுர்வினை உண்டாக்கக்கூடிய பெருங்குடல் அழற்சி நோய்க்கு இந்த விதை பொடி சிறந்த மருந்தாகும்.அன்பிற்குரியவர்களே, எமது சேவை தொடர , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்து உதவ முடியுமா?

இந்த பொடியை ஒரு தேக்கரண்டி அளவு எடுத்து, 200 மி.லி நீரில் கலந்து சாப்பிடுவதற்கு அரைமணி நேரத்திற்கு முன்பாக குடித்து விட வேண்டும்.
அவ்வாறு செய்தால் அதிகம் பசிக்காது.
சாப்பிடும் உணவின் அளவு குறையும்.
உடல் எடை அதிகம் கொண்டவர்கள் இந்த முறையை பின்பற்றலாம்.
ராஜஸ்தான் மாநிலத்தில் கொத்தவரை விதை பொடி அதிக அளவு உற்பத்தி செய்யப்பட்டு, வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
கொத்தவரை செடியின் வேர் மண்ணில் நைட்ரஜன் சத்தை அதிகரிக்க செய்து மண்ணின் வளத்தை பெருக்குகிறது.
அதனால் இது விவசாயிகளின் விருப்பப் பயிராகவும் உள்ளது.

இதையும் படிக்கலாமே
பற்களில் இருக்கும் மஞ்சள் கரையை போக்க ...
புற்று நோயை குணமாக்கும் துளசி நீர்
கண்களை சுற்றியுள்ள கருவளையங்களை போக்கு...
சர்க்கரை நோயா? இனி கவலை வேண்டாம்! தினம...
அதிகமாக பகிருங்கள். மகத்துவமும் மருத்த...
உடலில் காயத்தின் தழும்புகளா? உடனடியாக...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
அதிகமாக பகிருங்கள்: ஆண்மை அதிகரிக்க 10...
இத்தனை நோய்களும் பயந்து ஓடும், இந்த மீ...
கிட்னியில் கற்களா .? வலி உயிர் போகிறதா...
பப்பாளி விதைகளை தூக்கிப்போட்டு விடுகிற...
அதிகமாக பகிருங்கள்: இருசக்கர வாகனம் ஓட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •