ஆண்களின் அழகான முகத்திற்கு அழகு சேர்க்க ஐந்து அழகு டிப்ஸ்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  299
  Shares

ஆணுக்கு எதுக்கு அழகு, ஆணாக இருப்பதே அழகு என்று சொல்லும் காலம் மலையேறி, பெண்களுக்கு போட்டியாக தங்களை அழகுப் படுத்திக் கொள்வதில் ஆண்களும் களம் இறங்கிவிட்டார்கள் என்பதே உண்மை. ப்ளீச்சிங், ஃபேஷியல், புதுவிதமான ஹேர்ஹட், ட்ரெஸ்ஸிங் என்று ஆண்கள் தங்கள் தோற்றப் பொலிவை மேம்படுத்திக் கொள்ளவே விரும்புகிறார்கள். சருமப் பராமரிப்பில் சிறிது கவனம் செலுத்தினால் தன்னம்பிக்கை அதிகரிப்பதுடன் முகம் பொலிவடையும்.அவர்களுக்கு சில டிப்ஸ்
“சருமம்”
ஆண்களின் சருமம் கடினமானதாக இருக்கும் அதனை சற்று மென்மையாக்க சந்தனப் பொடியுடன் சிறிது பாதாம் எண்ணெய் சேர்த்து முகத்தில் பூசிக் கொள்ளலாம். சுத்தமான தெளிவான சருமமே ஆரோக்கியமான சருமம். முகம் வறட்சியாக இருந்தால் ஆலிவ் எண்ணெயுடன் எலுமிச்சைச்சாறு கலந்து, முகத்தில் தடவி வர சரும வறட்சி நீங்கும்.
வெயிலில் முகம் வாட்டமடையாமல் இருக்க, சருமத்தை உரிய வகையில் பாதுகாக்க வேண்டும். முகம் கைகள் கழுத்துப் பகுதிகளில் தரமான சன் ஸ்க்ரீன் லோஷன்களை பயன்படுத்த வேண்டும். வெயிலில் செல்லும்போது மறக்காமல் சன் ஸ்கிரீன் அடங்கியஃபேர்னெஸ் க்ரீம் பயன்படுத்துங்கள். சூரியக் கதிர் தாக்கத்திலிருந்து கண்களைப் பாதுகாக்க சன் க்ளாஸ் அணிந்து கொள்ளுங்கள்.கண்ணுக்கு கீழ் கருவளையம் இருந்தால் அதற்கு ஸ்பெஷல் பராமரிப்பு அளிக்க வேண்டும். தேவைப்பட்டால் பார்லருக்குச் சென்று ஐமசாஜ் எடுத்துக் கொள்ளுங்கள்.
இரவில் நீண்ட நேரம் விழித்திருக்காமல் சீக்கிரம் தூங்கி காலையில் சீக்கிரம் எழுந்திருந்தால் உடல் நலத்துக்கும் மன நலத்துக்கும் மிகவும் நல்லது. மனம் ஆரோக்கியமாக இருந்தால் அது முகத்தில் பிரதிபலிக்கும். சிலருக்கு முகப்பரு பிரச்னை இருக்கலாம். அதற்கான தீர்வு வீட்டிலேயே உள்ளது. சந்தனம், சாதிக்காய், மிளகு இவை மூன்றையும் சேர்த்தரைத்த விழுதை பருக்களின் மீது தடவிவரவும்.
“சுத்தம்”
தினமும் படுக்கச் செல்லும் முன் முகத்தை நன்றாக கழுவ வேண்டும். அன்றைய தினத்தின் அலைச்சலாம் முகத்தில் சேர்ந்திருக்கும் அழுக்குகள் மாசுக்கள் நீக்க வேண்டும். சருமத்தின் இன்ஃபெக்‌ஷன் ஏற்படாமல் போதிய கவனத்துடன் இருக்க வேண்டும். சருமத்தில் நீர்ச்சத்து சமமாக இருக்க அடிக்கடி ஜூஸ், இளநீர் குடிக்கலாம். தண்ணீர் போதிய அளவுக்குக் குடிப்பது முக்கியம்.
“முகப் பராமரிப்புக்கு உதவும் பப்பாளி”
பப்பாளியைப் போல சரும அழகுக்கு நிகரான ஒரு பழம் இருக்க முடியாது. சருமத்தின் நிறமும், ஆரோக்கியமும் அழகும் பப்பாளி பயன்படுத்தினால் அதிகரிக்கும். இது பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களுக்கும் கை மேல் பலன் தரும். வீட்டிலேயே பப்பாளி ஃபேஷியல் செய்து கொள்ளலாம். ஒரு பப்பாளியை எடுத்து இரண்டு பாதியாக நறுக்கிக் கொள்ளுங்கள். தினமும் இரவு தூங்குவதற்கு முன் முகத்தில் அதைப் பூசி சிறிது நேரம் ஊற வைத்தபின் நன்றாக முகத்தை கழுவிவிட்டு தூங்கச் செல்லுங்கள். காலை எழுந்தவுடன் உங்கள் முகப் பொலிவைப் பார்த்து நீங்களே ஆச்சரியப்படுவீர்கள்.
“நகப் பராமரிப்பு”
கை மற்றும் கால்களில் நகங்களை ஒட்ட வெட்டி சீராக வைத்திருக்க வேண்டும். நகங்களில் அழுக்கும் கறையும் படிந்து உடைந்திருந்தால் அது தோல் பிரச்னைகளுக்கு வழிவகுக்கும். விருப்பம் உள்ளவர்கள் நெயில் ஆர்ட் செய்து கொள்ளலாம்.
“தலைமுடிப் பராமரிப்பு”
ஸ்ட்ரெஸ் காரணமாக தலைமுடி அதிகமாக உதிரக் கூடும். தினமும் தேங்காய் எண்ணெய், விளக்கெண்ணைய் மற்றும் நல்லெண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவில் கலந்து உபயோகப்படுத்தினால் முடி உதிர்வது குறையும். உடலும் குளிர்ச்சியாக இருக்கும்.
“உடைத் தேர்வு”
ஸ்டைலிஷாக ட்ரெஸ் போடுவது முக்கியம் தான் ஆனால் அதைவிட உங்களுக்கு ஏற்ற ஆடைகளைத் தேர்வு செய்து அணிய வேண்டும். ஆண்களுக்கு பெரும்பாலும் அடர் நீலம், கறுப்பு, க்ரே, வெள்ளை, வெளிர் நீலம், பிரவுன், போன்ற நிறங்கள் பொருத்தமாக இருக்கும். உடைக்குப் பொருத்தமாக ஷூ அல்லது சப்பல் அணிவது மெருகை அதிகரிக்கும்.

நீங்கள் எல்லாவிதத்திலும் அழகா இருக்க வேண்டுமானால் முகத்தில் எப்போதும் புன்னகையுடன் இருங்கள். அழகு என்பது அகத்தின் பிரதிபலிப்பு என்று அறிந்து நல்ல மனத்துடன் இருக்கப் பழகினால் மேற்சொன்ன எவ்வித பராமரிப்பும் உங்களுக்குத் தேவையே இருக்காது. சரிதானே?
“அன்புக்குரியவர்களே எமது புரட்சி வானொலியின் சேவை தொடர இந்த பதிவின் இடையில் இருக்கும் விளம்பரத்தை கிளிக் செய்து உதவ முடியுமா.?”

இதையும் படிக்கலாமே
பளிச்சென்று மாற நீங்கள் செய்ய வேண்டிய ...
தொல்லை தரும் தொப்பைக்கு தீர்வு இரண்டே ...
காலையில் நேரத்திற்கு எழ முடியலையா? இதோ...
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ...
காதலில் சொதப்பாமல் இருப்பது எப்படி
தமிழ் பெண்கள் எப்படி இருந்தாலும் அழகு ...
20 வயதை கடந்தவரா நீங்கள். ? அப்படியான...
எலுமிச்சை ( தேசிக்காய் ) பற்றி இதுவரை ...
கருப்பட்டி தீர்க்கும் கணக்கில்லா நோய்க...
இது 108 ஆம்புலன்ஸ் சேவை இல்லை 515 இலவச...
பேஸ் புக் பாவித்த படியே ஆபாச படம் பார்...
யாழ்ப்பாணத்தில் பெண்கள் குளிப்பதை படம்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 299
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  299
  Shares