இந்த நாட்டின் பாஸ்போர்ட் வைத்திருந்தால் 173 நாடுகளுக்கு செல்ல விசா தேவையில்லையாம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 259
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  259
  Shares

உலகின் பவர்ஃபுல்லான பாஸ்போர்ட் கொண்ட நாடுகள் பட்டியலில் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. நிதி ஆலோசனை நிறுவனமான ஆர்டன் கேப்பிடல் உலக அளவில் ’பாஸ்போர்ட் பவர் ரேங்க்’ என்ற பெயரில் பாஸ்போர்ட்டுகள் குறித்த தர மதிப்பீட்டுப் பட்டியலை வெளியிட்டு வருகிறது. அதன்படி நடப்பாண்டுக்கான பட்டியலை அந்த நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், 159 புள்ளிகளுடன் சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் பாஸ்போர்ட் வைத்திருப்பவர்கள் உலக அளவில் 173 நாடுகளுக்கு விசா இல்லாமல் செல்ல முடியும். ஐரோப்பிய நாடான ஜெர்மனி இந்தப் பட்டியலில் 2-ம் இடம் பிடித்துள்ளது. பொதுவாக ஐரோப்பிய நாடுகள் ஆதிக்கம் செலுத்தும் இந்தப் பட்டியலில் முதல்முறையாக ஆசிய நாடான சிங்கப்பூர் முதலிடம் பிடித்துள்ளது. சிங்கப்பூர் குடிமக்களுக்கான விசா கட்டுப்பாடுகளை பாராகுவே தளர்த்தியதை அடுத்து அந்த நாடு முதலிடத்துக்கு முன்னேறியுள்ளதாக ஆர்டன் கேப்பிடல் நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்தப் பட்டியலில் கடந்தாண்டு 78-ம் இடம்பிடித்திருந்த இந்தியா, தற்போது 51 புள்ளிகளுடன் 75 வது இடத்துக்கு முன்னேறியுள்ளது. இந்தப் பட்டியலில் 22 புள்ளிகளுடன் கடைசி இடமான 94 வது இடத்தில் ஆஃப்கானிஸ்தான் இருக்கிறது. அதேபோல், 26 புள்ளிகளுடன் பாகிஸ்தான் மற்றும் ஈராக் ஆகிய நாடுகள் 93 வது இடத்தையும், சிரியா 92வது இடத்தையும் பிடித்துள்ளன.

Eliminate ஆன வையாபுரி செய்த காரியம்?
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
கலக்கவரும் விஜயின் மகன் சஞ்சய்.கைகொடுத...
சதியால் என்னை வீழ்த்திய உங்களுக்கு என்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
ஆபாசமாக பேசி பல பேரை ஏமாற்றிய 3 தில்லா...
ஆஸ்திரேலியா மெல்பேர்ண் பகுதியில் இலங்...
உங்களுக்கு பிடித்த உணவு உங்கள் மரணத்தி...
ஒட்டுமொத்த திரையுலகமும் கலந்துகொண்ட ஸ்...
இலங்கையில் பேஸ்புக்,வாட்சப், வைபர்,டுவ...
இளைஞனின் காலை வெட்டி அவருக்கே தலையணையா...
கூகுள் மற்றும் ஆப்பிள் மீது பிரான்ஸ் அ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 259
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  259
  Shares