30 குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்ற அமலாபால்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

பிரபு சாலமன் இயக்கத்தில் வெளியான ‘மைனா’ படம் மூலம் தமிழில் பிரபலமானவர் நடிகை அமலாபால். இந்தப் படத்தில் நடித்ததற்காக, தமிழக அரசின் விருதையும் சிறந்த நடிகைக்கான பல விருதுகளையும் அள்ளினார். அதற்குப் பிறகு ‘தெய்வத் திருமகள், ‘வேட்டை’ என நல்ல படங்களாகத் தேர்ந்தெடுத்து நடிக்கத் தொடங்கினார். ‘தலைவா’ படத்தில் விஜய், ‘வேலையில்லா பட்டதாரி’ படத்தில் தனுஷ் என பெரிய ஹீரோக்களோடு சேர்ந்து நடித்தார்.

யதார்த்தமான வேடங்களில் நடித்து ரசிகர்களின் அபிமானத்தைப் பெற்ற அமலாபால், பின்னர் கமர்ஷியல் படங்களிலும் தனது நடிப்பால் முத்திரை பதித்தார். திருமணத்திற்குப் பிறகு கொஞ்சம் கேப் விட்டவர், இப்போது அடுத்த ரவுண்டுக்கு ரெடியாகி இருக்கிறார். தமிழ், மலையாளம் என இப்போதும் அமலாபாலிடம் பல படங்கள் கைவசம் இருக்கின்றன.

இவர் ‘திருட்டு பயலே 2’, ‘பாஸ்கர் ஒரு ராஸ்கல்’ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார். அடுத்து, தமிழில் ‘சின்ட்ரெல்லா’ படத்திலும், மலையாளத்தில் நிவின் பாலி நடிக்கும் ‘காயங்குளம் கொச்சுண்ணி’ படத்திலும் நடித்து வருகிறார்.

இவர் தனது பிறந்தநாளை நேற்று கொண்டாடி இருக்கிறார். இந்த பிறந்தநாளை வித்தியாசமாக பிறந்த ஊரான எர்னாகுளம் பகுதியில் உள்ள பள்ளியில், குழந்தைகளுடன் கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும், 30 ஏழை  குழந்தைகளின் படிப்பு செலவை ஏற்றிருக்கிறார்.

 நன்றி மாலை மலர்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss இல் ஏன் எல்லோரும் தேம்பி தேம...
Bigg Boss சுஜா இவ்வளவு கேவலமானவரா?
Leaked video of Oviya in ad
T. Rajendar Comedy & The Most ...
ஜுலி இந்த விளம்பரம் உனக்கு தேவையா
ஜூலிக்கு சமுத்திரக்கனியின் Advise
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
விபச்சாரத்தில் ஈடுபட்ட பிரபல பிக் பாஸ...
அம்மாவை போல மாற ஆபரேஷன் செய்யும் பிரபல...
ரக்பி விளையாட்டு பயிற்சிக்காக பிரான்ஸ்...
பிராமண சமூகத்தில் பிறந்து காதலுக்கா த...
சடலமாக மிதந்த தந்தையும் 2 குழந்தைகளும்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •