நயன்தாரா விக்னேஷ் சிவன் திருமணம் உறுதியானதா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

நடிகை நயன்தாரா, இயக்குனர் விக்னேஷ் சிவன் இருவரும் ரகசிய திருமணம் செய்து கொண்டுவிட்டதாக ஒரு தகவலும், விரைவில் திருமணம் செய்து கொள்ள உள்ளார்கள் என மற்றொரு தகவலும் கடந்த சில நாட்களாக வலம் வந்து கொண்டிருக்கின்றன. தெலுங்கு, மலையாள ஊடகங்களிலும் இது பற்றிய செய்திகள் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.
தமிழ்த் திரையுலகத்தில் நயன்தாரா, விக்னேஷ் சிவன் இருவருக்கும் நெருக்கமானவர்களிடம் கேட்டால் அவர்கள் ஏற்கெனவே ‘லிவிங் டு கெதர்’ ஆக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்றும் சொல்வார்கள். இருவரும் சில வருடங்களாகவே ஒரே பிளாட்டில்தான் வசித்து வருகிறார்கள்.
கடந்த இரண்டு வருடங்களாக இருவரது பிறந்த நாளின் போதும், மாலத் தீவுகள், அமெரிக்காவில் அவர்கள் சுற்றுப் பயணம் சென்ற புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளார்கள். இருவரும் அவர்களது நெருக்கத்தைப் பற்றி இதுவரை மறைத்ததில்லை. இருந்தாலும் நயன்தாரா தற்போது திருமணம் செய்து கொண்டிருக்க வாய்ப்பில்லை என்றே கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள். அவர் தற்போது தமிழில் ‘வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோ கோ’ ஆகிய படங்களில் நடித்து வருகீறார்.
 தெலுங்கில் ‘சை ரா, பாலகிருஷ்ணாவின் அடுத்த படம்’ ஆகியவற்றில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். இவ்வளவு படங்களை கையில் இருக்கும் போது அவர் எப்படி திருமணம் செய்து கொள்வார் என்கிறார்கள். ஒரு நடிகைக்கு திருமணம் நடந்த பின் அவருக்கான ‘இமேஜ்’ குறைந்துவிடும் என்பது நயன்தாராவுக்குத் தெரியாதா என்றும் கேள்வி கேட்கிறார்கள். பொதுவாக காதல் வதந்திகள்தான் அதிகம் வரும், இப்போது கல்யாண வதந்திகள் அதிகம் வருகிறது.
நன்றி: தினமலர்
இதையும் படிக்கலாமே
ரெக்கார்ட் டான்ஸ் பார்ட்டிகளும் ரெட்லை...
American Pie Reunion - அடல்ஸ் ஒன்லி - ...
மெர்சல் திரைபடதிற்கு தொடரும் சோதனை.அதி...
தமிழ் ராக்கர்ஸ்க்கு ஆப்பு வைத்த ரஜினிய...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
எங்களை மீறி மெர்சல் திரைப்படத்தை தொடு ...
மீண்டும் சிவாவுடன் இணையும் அஜித்
மறுபடியும் பொய் சொல்லி மாட்டிய ஜூலி கட...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
நடிகை நயன்தாராவின் புதிய 5வது காதலன்.....
பாகுபலி நடிகரின் பாலியல் தொல்லை. 2 முற...
விஜய்யின் `மெர்சல்' படைத்த புதிய சாதனை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •