தர்காவில் நடிகை நயன்தாரா பிரார்த்தனை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 174
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  174
  Shares

நடிகை நயன்தாரா தமிழ், தெலுங்கு பட உலகில் ‘நம்பர்-1’ கதாநாயகியாக இருக்கிறார். சம்பளமாக ரூ.3 கோடி வாங்குகிறார். தெலுங்கில் சிரஞ்சீவி ஜோடியாக புதிய படமொன்றில் நடிக்க ரூ.4 கோடி சம்பளம் கேட்டதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அறம், வேலைக்காரன், இமைக்கா நொடிகள், கொலையுதிர் காலம், கோலமாவு கோகிலா ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.


அறம் படத்தில் ஏழைகளுக்கு உதவும் புரட்சிகர சிந்தனையுள்ள கலெக்டராக வருகிறார். இந்த படம் விரைவில் திரைக்கு வர உள்ளது. வேலைக்காரன் பட வேலைகள் இறுதி கட்டத்தில் உள்ளன. மோகன்ராஜா இயக்கத்தில் தயாராகும் இந்த படத்தில் சிவகார்த்திகேயன் ஜோடியாக நடிக்கிறார்.


காதல்
தன்னை வைத்து ‘நானும் ரவுடிதான்’ படத்தை இயக்கிய டைரக்டர் விக்னேஷ் சிவனுடன் நயன்தாராவுக்கு காதல் மலர்ந்துள்ளது. இருவரும் ஜோடியாக வெளிநாடுகளில் சுற்றிய படங்கள் சமீபத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தின. தற்போது வேலைக்காரன் படத்தின் இறுதி கட்ட படப்பிடிப்பில் பங்கேற்று நடித்து வருகிறார்.
இதன் படப்பிடிப்பு ராஜஸ்தான் மாநிலத்தில் பல்வேறு இடங்களில் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படப்பிடிப்பு இடைவேளையில் நயன்தாரா அங்குள்ள அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தார். அப்போது அவர் முஸ்லிம் பெண்களைப்போல் பர்தா அணிந்து தலையில் முக்காடு போட்டிருந்தார்.


சிவகார்த்திகேயன்
நயன்தாராவுடன் சிவகார்த்திகேயன் உள்ளிட்ட படக்குழுவினரும் அஜ்மீர் தர்காவுக்கு சென்று பிரார்த்தனை செய்தனர். நயன்தாரா கிறிஸ்தவ மதத்தை சேர்ந்தவர். பின்னர் அவர் இந்து மதத்துக்கு மாறினார். ஆனாலும் அனைத்து மத கோவில்களுக்கும் சென்று வழிபடுவதை வழக்கமாக வைத்து இருக்கிறார்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
விஜய் சேதுபதி -கோகுல் கூட்டணியில் பிரம...
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
ஆவணக்கொலைகளை துகிலுரிக்கும் "களிற...
பிக் பாஸ் வீட்டில் ஜட்டி ப்ராவை கழுவ ச...
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
விஜய் 62 இது தான் கதையாம் .விஜய்க்கு இ...
இலகுவாய் கிடைக்கும் பழங்களும் அதன் மரு...
அது உண்மை தான்,ஆனால் என் தனிப்பட்ட விர...
ஒரே ஒரு கவர்ச்சிப் போட்டோவால் ஒட்டுமொத...
காவல் துறையிடம் அடங்க மறுக்கும் பிரபல ...
நயன்தாராவை போன் காலில் கலாய்த்து தள்ளி...
விக்னேஷ் சிவனுக்கு கீர்த்தி சுரேஷ் இப்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 174
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  174
  Shares