மலட்டுத் தன்மை – குழந்தையின்மைக்கான காரணம் – வீடியோ இணைப்பு

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 64
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  64
  Shares

கர்ப்பப்பையில் நீர்க்கட்டிகள் ஏற்படுவதால் மாதவிடாய் கோளாறுகள் ஏற்படும், அதனால் குழந்தையின்மை பிரச்சனைகள் உண்டாகலாம். அதிக மன அழுத்தத்தினால் சினைப்பை அடைப்பு மற்றும் வெள்ளைப்படுதல் போன்ற காரணத்தினால் பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படலாம்.

 கரு முட்டையானது சினைப் பையிலிருந்து கருப்பைக்கு வர தாமதிப்பது, ஹார்மோன் குறைபாடுகள் ஆகியவை பெண்களின் குழந்தையின்மைக்கு முக்கியக் காரணமாக உள்ளது.

பொதுவான காரணிகள்: திருமண வயதை தள்ளிப்போடுவது அல்லது முதல் குழந்தையை தள்ளிப்போடுவது, நிரந்தரமான வேலையைத் தேடுவது, சமூக சூழ்நிலை மாற்றங்கள் போன்ற பல காரணங்கள் இருக்கின்றன. இத்துடன் புகைப்பிடித்தல், மது அருந்துதல், மன அழுத்தம் போன்றவையினால் ஆண்களுக்கு தாம்பத்திய உறவினில் உயிரணு உற்பத்தி தடைபடுவதும் காரணமாக இருக்கிறது. இதுமட்டுமல்லாமல் சர்க்கரை நோய், உடல் பருமன், உணவுப் பழக்கவழக்க மாற்றங்கள் போன்றவையும் அதிகரித்து வருவதும் காரணங்களாகும்.

மரபியல் காரணிகள்: ஆண் மற்றும் பெண் மலட்டுத்தன்மைக்கு மரபியல் காரணங்களும் முக்கியப் பங்கு வகிக்கிறது. அதனால்தான் மரபணு சோதனைகள் குழந்தையின்மை சிகிச்சையில் மிக முக்கிய பரிசோதனையாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கர்ப்பம் அடைந்த பிறகும் சராசரியாக 85% கருச்சிதைவுக்குக் காரணமாகும் அளவு மரபியல் காரணங்கள் முக்கியமானவையாக இருக்கிறது.

ஆண் மலட்டுத்தன்மை: ஆண் மலட்டுத்தன்மைக்கு முக்கிய காரணம் க்லைன்ஃபெல்டர் சிண்ட்ரோம்(Klinefelter syndrome). பொதுவாக, மனிதனின் மரபணுவில் 46 XY குரோமோசோம்கள் உள்ளன. ஆனால், க்லைன்ஃபெல்டர் உள்ள ஆண்களுக்கு ஒரு ‘X’ குரோமோசோம் கூடுதலாக இருக்கும். இதனால் இவர்களின் குரோமோசோம் 47XXY என இருக்கும். இது ஆயிரத்தில் ஒருவருக்கு ஏற்படுகிறது. இந்த நோயின் அறிகுறியை ஆண் பருவம் அடையும் முன் கண்டறிய முடியாது.

இதனால் 10 மில்லியன் உயிரணு எண்ணிக்கை உள்ள ஆண்களுக்கும், அதற்கு கீழே உள்ளவர்களுக்கும் ‘துணை செய்’ கருத்தரிப்பு இனப்பெருக்கம் மூலம் பிரச்னையை சரி செய்யலாம். 10 மில்லியன் உயிரணு எண்ணிக்கைக்கு மேலே உள்ளவர்களுக்கு கருப்பையில் உயிரணுவை உட்செலுத்துதல் மூலம்(IUI) சரி செய்ய முடியும். விறைப்பு, செயலின்மை, தாம்பத்திய உறவில் குறைபாடு, உயிரணுக்களின் குறை
பாடும் இவற்றில் முக்கிய காரணியாகக் கருதப்படுகிறது. இந்தப் பிரச்னைகளை IUI, IVF மூலம் சரி செய்யலாம்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
ஊதிப் பருத்த உடம்பை குறைக்க ஐடியா
கத்தரிக்காயில் இருக்கும் மருத்துவ குணங...
உங்களில் எத்தனை பேருக்கு பழைய சோறின் ம...
எப்போதும் இளமையாக தினமும் இதை சாப்பிடு...
அனைவரும் படிக்கவும்: இளைஞர்களை குறிவை...
அதிகமாக பகிருங்கள்.தைராய்டு பிரச்சனைக்...
படுக்கை அறையில் வெங்காயத்தை பாதியாக வெ...
தொந்தி, தொப்பையை குறைக்க 10 ரூபாய் செல...
பப்பாளி விதைகளை தூக்கிப்போட்டு விடுகிற...
அதிகமாக பகிருங்கள்: மலட்டு தன்மையை போக...
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் ...
பேய் விரட்டியின் பெரும் பயன்கள் ...! அ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 64
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  64
  Shares