ஆஸ்கார் நாயகன் ஹிரோவானார்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

ரசூல் பூக்குட்டி, சவுண்ட் டிசைனர். கேரளாவைச் சேர்ந்த இவர், 2004ல் ‘முசாஃபிர்’ என்ற இந்திப் படத்தின் மூலம் சவுண்ட் டிசைனராக அறிமுகமானார். அதைத்தொடர்ந்து பல இந்திப்படங்களில் பணியாற்றியவர், 2009ல் வெளியான ‘ஸ்லம் டாக் மில்லினியர்’ படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகமானார். அந்தப்படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், ரசூல் பூக்குட்டி ஆகிய இருவரும் ஆஸ்கர் விருதைப் பெற்று இந்தியாவுக்குப் பெருமை சேர்த்தனர். இதைத்தொடர்ந்து ரசூல் பூக்குட்டிக்கும் ‘ஒலிப்பதிவு’ என்ற கலைக்கும் இந்திய சினிமாவில் மிகப்பெரிய மரியாதை ஏற்பட்டது.
மேலும், அந்த ஆஸ்கர் விருதுக்குப் பிறகு உயர் தொழில்நுட்ப ரீதியில் எடுக்கப்படும் படங்களுக்கு ரசூலைத் தேட ஆரம்பித்தனர். அப்படித்தான் ‘பழசிராஜா’, ‘எந்திரன்’, ‘ரா ஒன்’, ‘நண்பன்’, ‘கோச்சடையான்’ உள்ளிட்ட படங்கள் இவரைத் தேடி வந்தன. தற்போது ‘2.0’வில் பணிபுரிந்துகொண்டிருப்பவர், ‘சங்கமித்ராவிலும் கமிட் ஆகி உள்ளார். இப்படிப் பரபரப்பாகப் பணியாற்றி வரும் ரசூல், தற்போது கதாநாயகனாக அறிமுகமாகிறார். அந்தப் படத்தின் பெயர், ‘ஒரு கதை சொல்லட்டுமா’.


இயக்குநர் பிரசாத் பிரபாகரன் இயக்கும் இந்தப் படத்தில் ரசூல், ஒரு சவுண்ட் டிசைனர் கேரக்டரிலேயே நடிக்கிறார். திருச்சூரில் வருடாவருடம் நடைபெறும் உலகப் புகழ்பெற்ற பூரம் திருவிழாவின் எல்லா ஒலிகளையும் பதிவுசெய்ய விரும்பும் சவுண்ட் டிசைனர் கேரக்டர். ராஜிவ் பனகல் தயாரிக்கிறார். இந்தப்படம் குறித்து இயக்குநர் பிரசாத் பிரபாகரன் பேசுகையில், “இந்தப் படம் இதுவரை யாரும் செய்யாத முயற்சி. கேரளா திருச்சூரின் உலகப் புகழ் பெற்ற பூரம் திருவிழா லட்சக்கணக்கான மக்கள் கலந்து கொள்ளும் திருவிழா. ஏழு நாள்கள் நடைபெறும் இந்தத் திருவிழாவில் ஆயிரக்கணக்கான இசைக் கலைஞர்கள் நூற்றுக்கணக்கான இசைக் கருவிகளை வாசிக்கும் அந்த நிகழ்வே அருமையாக இருக்கும்.


இந்த எல்லா ஒலிகளையும் ரெகார்டு செய்ய ஆசைப்படும் ஒரு சவுண்ட் டிசைனராக ரஸூல் பூக்குட்டி நடித்துள்ளார். அவரது நிஜ வாழ்விலும் இது ஒரு நீண்ட நாள் ஆசை என்பது குறிப்பிடத்தக்கது. ‘ஒரு கதை சொல்லட்டுமா’ என்று இந்தப்படத்துக்குத் தலைப்பு வைத்துள்ளோம். முழு பூரம் திருவிழாவையும் நேரில் சென்று படமாக்குவது என்பது எளிதான காரியம் அல்ல. எனது அணி பெரும் பாடுபட்டு இந்த அசுர காரியத்தை வெற்றிகரமாக முடித்துள்ளது.


ஹாலிவுட் மற்றும் பாலிவுட்டைச் சேர்ந்த 80க்கும் மேற்பட்ட தொழில்நுட்பக் கலைஞர்கள் இந்தப் படத்துக்காகப் பூரம் திருவிழா ஒலிகளை ரெக்கார்டு செய்வதில் பணிபுரிந்தனர். 22 கேமாராக்களைக் கொண்டு அந்த விழாவில் வாசித்த 300க்கும் மேற்பட்ட இசைக் கலைஞர்களைப் படமாக்கினோம். ராகுல் ராஜ் இசைக்கு வைரமுத்து பாடல்கள் எழுதியுள்ளார். மலையாளம், தமிழ், தெலுங்கு மற்றும் ஹிந்தி என நான்கு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. இந்தப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலரை ஆண்டனி எடிட் செய்துள்ளார்” என்றார்.


நன்றி விகடன்

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு
[youtube https://www.youtube.com/watch?v=8TActG_7Nao]

இதையும் படிக்கலாமே
பிக் பாஸ்ஸில் நுழைந்த அந்த பிரபலம் இவர...
ஓவியாவிற்கு இப்படி ஒரு நோயா உண்மையை சொ...
ஜூலியை கேள்விகளால் கிழித்த திருநெல்வேல...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
இன்று முதல் 233 பொருட்களுக்கான ஜி.எஸ்....
முகம் சுழிக்கும் பயனர்கள்: வாட்ஸ்அப் இ...
13 வயதிலிருந்து பிரான்ஸில் உடலுறவு செய...
பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளினி மர்மமான ம...
முதலிரவில் கன்னித்தன்மை பரிசோதனையால் ப...
கொடுமை தாங்க முடியாது 20 வயது பெண் மரண...
சிங்கப்பூரில் கவர்ச்சிகரமான சம்பளத்துட...
மூன்று பேரை துடிக்க துடிக்க கொலை செய்த...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •