இன்றைய நாளும் இன்றைய பலனும்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  

ஹேவிளம்பி ஆண்டு – ஐப்பசி 15 – புதன்கிழமை (1.11.2017)
நட்சத்திரம் : உத்திரட்டாதி காலை 5.45 வரை பின்னர் ரேவதி
திதி : துவாதசி மதியம் 3.28 வரை பின்னர் திரியோதசி
யோகம் : சித்த – மரண யோகம்
நல்லநேரம் : காலை 9.15 – 10.15 / மாலை 5.15 – 6
புதன்கிழமை சுப ஓரை விவரங்கள்
(காலை 9 முதல் 10 வரை, பகல் 1.30 – 3.00 வரை, 4 முதல் 5 வரை, இரவு 9 முதல் 10 வரை, 11 முதல் 12 வரை)
சுபகாரியங்கள் : கலை பயில, புது கணக்கு எழுத, பொன் வாங்க சிறந்த நாள்


மேஷம்
விடாப்பிடியாக செயல்பட்டு சில வேலைகளை முடிப்பீர்கள். திட்டமிடாத செலவுகளை போராடி சமாளிப்பீர்கள். எதிர்பாராத பயணங்களால் அலைச்சல் அதிகரிக்கும். வாகனம் பழுதாகும். வியாபாரத்தில் பாக்கிகள் வசூலாவதில் தாமதம் ஏற்படும். உத்யோகத்தில் மறைமுக தொந்தரவு வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: க்ரீம் வெள்ளை, ப்ரவுன்


ரிஷபம்
தவறு செய்பவர்களை தட்டிக் கேட்பீர்கள். பெற்றோரின் ஆதரவுக் கிட்டும். பழைய கடன் பிரச்சனை கட்டுக்குள் வரும். சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். வியாபாரத்தில் புது வாடிக்கையாளர்கள் அறிமுகமாவார்கள். உத்யோகத்தில் உங்களின் திறமைகள் வெளிப்படும். அதிஷ்ட எண்: 4 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், பிங்க்


மிதுனம்
எதிர்பார்புகள் நிறைவேறும். பழைய உறவினர், நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். சிலர் உங்களை நம்பி பெரிய பொறுப்புகளை ஒப்படைப்பார்கள். வியாபாரத்தில் புது ஒப்பந்தங்களால் லாபம் பெருகும். உத்யோகத்தில் மூத்த அதிகாரிகள் முக்கிய அறிவுரைகள் தருவார்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: சில்வர் கிரே, ப்ரவுன்


கடகம்
கடந்த இரண்டு நாட்களாக தடைப்பட்ட வேலைகளை விரைந்து முடிப்பீர்கள். குடும்பத்தில் நிம்மதி உண்டு. ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். உறவினர்கள் உங்களைப் புரிந்துக் கொள்வார்கள். வியாபாரத்தில் இழந்ததை மீட்பீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்கள் ஆதரிப்பார்கள். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, பச்சை


சிம்மம்
சந்திராஷ்டமம் நீடிப்பதால் அநாவசியப் பேச்சை தவிர்ப்பது நல்லது. குடும்பத்தாரின் விருப்பங்களை நிறைவேற்ற போராட வேண்டியிருக்கும். விமர்சனங்களைக் கண்டு அஞ்சாதீர்கள். எதிர்பார்த்த உதவிகள் தாமதமாகும். வியாபாரத்தில் வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை குறையும். உத்யோகத்தில் மறதியால் பிரச்சனைகள் வரக்கூடும். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ப்ரவுன்


கன்னி
சவாலான விஷயங்களையும் சாதரணமாக முடிப்பீர்கள். சகோதரங்கள் சாதகமாக இருப்பார்கள். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். வியாபாரத்தில் எதிர்பாராத தன லாபம் உண்டு. உத்யோகத்தில் அதிகாரிகள் வலிய வந்து உதவுவார்கள். அதிஷ்ட எண்: 8 அதிஷ்ட நிறங்கள்: மெரூண், ஆரஞ்சு


துலாம்
குடும்பத்தினருடன் சுப நிகழ்ச்சிகளில் கலந்துக் கொள்வீர்கள். அரசால் அனுகூலம் உண்டு. அதிகாரப் பதவியில் இருப்பவர்கள் அறிமுகமாவார்கள். வியாபாரத்தில் சில மாற்றங்கள் செய்வீர்கள். உத்யோகத்தில் உயரதிகாரிகள் அதிசயிக்கும் படி நடந்துக் கொள்வீர்கள். அதிஷ்ட எண்: 6 அதிஷ்ட நிறங்கள்: கிரே, மஞ்சள்


விருச்சிகம்
புதிய திட்டங்கள் நிறைவேறும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்யோகம் குறித்து யோசிப்பீர்கள். ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து சேமிக்கத் தொடங்குவீர்கள். வியாபாரத்தில் வேலையாட்கள் பொறுப்பாக நடந்துக் கொள்வார்கள். உத்யோகத்தில் எதிர்பார்த்த சலுகைகள் கிடைக்கும். அதிஷ்ட எண்: 2 அதிஷ்ட நிறங்கள்: ஆரஞ்சு, ஊதா


தனுசு
முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள். தாயாரின் உடல் நலத்தில் கவனம் தேவை. வெளிவட்டாரத் தொடர்புகள் அதிகரிக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். வியாபாரத்தில் புது பங்குதாரரை சேர்ப்பீர்கள். உத்யோகத்தில் இழந்த உரிமையை பெறுவீர்கள். அதிஷ்ட எண்: 5 அதிஷ்ட நிறங்கள்: மஞ்சள், கருநீலம்


மகரம்
தைரியமாக சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். உடன்பிறந்தவர்கள் பக்கபலமாக இருப்பார்கள். விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வாகனத்தை சீர் செய்வீர்கள். வியாபாரத்தில் பழைய சரக்குகள் விற்கும். உத்யோகத்தில் உங்களின் உழைப்பிற்கு பாராட்டு கிடைக்கும். அதிஷ்ட எண்: 1 அதிஷ்ட நிறங்கள்: ரோஸ், கிரே


கும்பம்
கடந்த இரண்டு நாட்களாக இருந்த சோம்பல் நீங்கி துடிப்புடன் செயல்படத் தொடங்குவீர்கள். கணவன்-மனைவிக்குள் இருந்த மனப்போர் நீங்கும். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். எதிர்பார்த்த பணம் வரும். வியாபாரத்தில் போட்டிகள் குறையும் உத்யோகத்தில் மேலதிகாரி ஒத்துழைப்பார். அதிஷ்ட எண்: 9 அதிஷ்ட நிறங்கள்: வெள்ளை, மஞ்சள்


மீனம்
ராசிக்குள் சந்திரன் தொடர்வதால் புதிய முயற்சிகள் தள்ளிப் போய் முடியும். குடும்பத்தாருடன் ஈகோ பிரச்னை வந்து நீங்கும். உத்திரட்டாதி நட்சத்திரக்காரர்களுக்கு அலைச்சல் அதிகரிக்கும். சந்தேகப் புத்தியால் நல்லவர்களை இழக்க வேண்டி வரும். வியாபாரத்தில் வேலையாட்களால் பிரச்னைகள் வரும். உத்யோகத்தில் அதிகாரிகளுடன் பனிப்போர் வந்து நீங்கும். அதிஷ்ட எண்: 3 அதிஷ்ட நிறங்கள்: ஊதா, இளஞ்சிவப்பு
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
Bigg boss இல் ரைசா இன்று வெளியேறுவாரா?
RK சுரேஷின் திருமணம் | மெர்சல் கு YOUT...
நாகரீகம் இல்லையா உனக்கு? மேடையிலேயே தன...
சந்தானம் மருத்துவமனையில் அனுமதி
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
மது அருந்திவிட்டு தாம்பத்தியத்தில் ஈடு...
சுவிஸ்ட்சர்லாந்து பெண்ணின் கலைந்த கல்ய...
முதல்ல இதை படிங்க!முத்தமிடும் போது கண்...
அரசியலில் தனிக்கட்சி ஆரம்பிக்கும் கமலு...
திருமணத்தில் தாலி கட்டுவது எதற்காக தெர...
“படுக்கைக்கு” வராததால் படத்தில் நடிக்...
ஆண் குழந்தைகளிடம் இந்த வார்த்தைகளை மட்...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •  
  •