பேஸ்புக் – மொபைலில் ஆபாச உரையாடலா – இணையத்தில் வெகு விரைவில் வர வாய்ப்புண்டு?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 257
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  257
  Shares

தொலைபேசி என்பது இன்று எல்லோர் வாழ்வோடும் இணைந்து விட்ட ஒரு இன்றியமையாத தொடர்பாடல் சாதனமாகும். விலை வாசி உயர்வான ஊரில் வாழ்ந்தாலும் அலை பேசி இன்றி வாழ மாட்டோம் எனும் நிலைக்கமைவாக நம் மக்களில் பலரும் கையில் ஓர் தொலைபேசியுடன் செல்லுகின்றார்கள். சிலரோ கொஞ்சம் வித்தியாசமாக இரண்டு அல்லது மூன்று அலை பேசிகளை வைத்துப் பொது இடங்களில் தாம் ஏதோ ஹீரோ எனும் நினைப்பு வரப் பெற்றவர்களாக ஸ்டைல் காட்டுவார்கள். பட்டணத்தில் உள்ளோர் தொடக்கம், பாமர மக்கள் வரை இன்று அனைவரும் அலைபேசிப் பாவனையாளர்களாக மாறி விட்டார்கள். அலைபேசி பாவிப்போரில் ஒரு சிலருக்கு அலைபேசியினூடாக அழைப்புக்கள் வரா விட்டாலும் பிறருக்கு ஸ்டைல் காட்டுவதற்காகவும் அலைபேசியினை பாவிக்கின்றார்கள். புரட்சி வானொலியின் செய்தி பிடித்தால் , நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்யுங்கள்.

இந்த அலைபேசி வருகை எம் நாடுகளில் இடம் பெறுவதற்கு முன்பதாக எம்மிடையே நெருக்கமான ஒன்றாக இருந்த தொலை பேசிச் சேவை தான் பப்ளிக் பூத் தொடர்பாடல் சேவை. (Public Booth Telephone) நம்மில் பெரும்பாலானோர் பப்பிளிக் பூத்தில் கண்டிப்பாக உரையாடியிருப்போம். தெருவோரத்திலும், பொது இடங்களுக்கு அண்மையாகவும் இந்த பொதுத் தொலைபேசிச் சேவை மையம் காணப்படும். 50 பைசா முதற் கொண்டு ஒரு ரூபா, இரண்டு ரூபா நாணயக் குற்றிகளையும் பொதுத் தொடர்பிற்காக நாம் பயன்படுத்துவோம். கால மாற்றத்தில் எம்முடனான நெருக்கத்தினை இந்தப் பப்ளிக் பூத் சேவை இழந்து விட்டாலும்; கைத் தொலைபேசி இல்லாத காலத்தில் எம்மிடையே மிகவும் நெருக்கமாக இருந்த இந்தச் சேவையின் மூலம் கிடைத்த பயன்களை இலகுவில் மறக்க முடியாது.

உள்ளூரிலிருந்து வெளியூருக்குப் போகின்ற போதும்,எம் அவசரத் தேவைகளுக்காகவும் நாம் எமக்கு வேண்டியவர்களைத் தொடர்பு கொள்வதற்கு பயன்படுத்துவது பப்ளிக் பூத்தினைத் தான். இந்தச் சேவை இலங்கை – இந்திய நாடுகளில் அறிமுகப்படுத்தப்பட்ட ஆரம்ப காலங்களில் பப்ளிக் பூத்திலிருந்து அழைப்பு மேற் கொண்டால் அவ் அழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் நபருக்கு எங்கிருந்து அழைப்பு வருகின்றது எனும் விபரம் தெரியாதிருக்கும். இந்தச் சேவைக்கான Number Display முறை என்பது பப்ளிக் பூத்திலிருந்து தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டால் அவ் அழைப்பினை Receive பண்ணும் நபருக்கு கிடைக்காது.

பொதுவாக கைத் தொலைபேசியிலிருந்து அல்லது தொலைத் தொடர்பு நிலையங்களிலிருந்து அழைப்பினை மேற்கொள்ளும் போது நாம் எங்கிருந்து அழைப்பினை மேற் கொள்கின்றோம் எனும் விபரங்கள் கிடைக்கும் என்பதால் நம்மவர்களுள் ரிஸ்க் எடுத்து ரஸ்க் சாப்பிட நினைக்கும் குறும்பர்கள் நாடுவதும் இந்த பப்ளிக் பூத்தினைத் தான். “யாராவது சொந்தச் செலவில் சூனியம் வைக்க விரும்புவார்களா?”தெருவிற்கு வந்தால் ஒவ்வோர் சந்திக்கும் ஒவ்வோர் பப்ளிக் பூத்திருக்கும். அப்படி இருக்கையில் தன் பெயரில் ரியிஸ்டர் பண்ணப்பட்ட டெலிபோனிலிருந்து யாராச்சும் வம்பினை விலை கொடுத்து வாங்கும் விடயங்களினை மேற் கொள்வார்களா? ஹி…ஹி…

எம்மில் அநேகம் பேர் நிச்சயமாக எம் வாழ்வில் என்றோ ஒரு நாள் இந்த டெலிபோன் பூத்தினூடாக ரகளைகளையும், குறும்புகளையும் செய்திருப்போம். எமக்கு விரோதமானவர்களுக்கோ அல்லது எமக்கு நெருங்கிய நட்புக்களுக்கோ கலாய்க்கும் நோக்குடன் பொதுத் தொலைபேசியினைப் பயன்படுத்தியிருப்போம்.பத்திரிகைகளில் வரும் விளம்பரங்களினை குறித்து வைத்து அந்த விளம்பரத்தினைப் பிரசுரித்த நபருக்குத் தொலை பேசி அழைப்பினை மேற்கொண்டு கேள்வி கேட்டு தொல்லை செய்வது முதல், மண மகன் தேவை – மணமகள் தேவை விளம்பரங்களுக்கும் தொடர்பு கொண்டு டீலிங் பேசுவது வரை நாம் செய்யாத லீலைகள் ஏதும் உண்டா?

யாழ்ப்பாணத்தில் நாம் உயர்தரம் படித்த காலப் பகுதியில் தான் இந்த பப்ளிக் பூத் சேவையினை அறிமுகப்படுத்தியிருந்தார்கள.கமியூனிக்கேசன் நிலையத்திலிருந்து வம்பிழுத்தால், அழைப்பினைப் பெற்றுக் கொள்ளும் நபர் காவல் துறையின் உதவியினை நாடினால்; போலீஸ் வந்து ஒரே அமுக்கா அமுக்கி விடுவார்கள் எனும் நினைப்பினால் என் தலமையில் ஒரு சிறிய குழுவும் வம்பிழுக்கும் நோக்கில் இந்த பப்ளிக் பூத்தினை நாடியது. நாம எல்லோரும் செய்த நல்ல செயல் என்ன தெரியுமா? யாழில் வெளியாகும் உதயன் பத்திரிகையில் வரும் சின்னஞ் சிறு விளம்பரங்கள் பகுதியில் தொலைபேசி இலக்கங்களுடன் பிரசுரிக்கப்பட்டிருந்த விளம்பரதாரர் ஒருவரைத் தொடர்பு கொண்டோம்.

“நல்ல நிலையில் உள்ள கோழிக் குஞ்சுகள் விற்பனைக்குண்டு” என பெண் ஒருவர் விளம்பரம் செய்திருந்தார். இந்த விளம்பரத்தின் கீழே அவரது வீட்டுத் தொலைபேசி எண்ணும் குறிப்பிடப்பட்டிருந்தது.ஸோ நாம என்ன பண்ணினோம், ஐந்து ரூபா குற்றியினை பப்ளிக் பூத்தில் போட்டு அவங்க நம்பருக்கு கோல் பண்ணினோம். மச்சான் ரிங் பண்ணுதடா டெலிபோன் என்று சொல்லியதும் தான் தாமதம், யார் கதைக்கிறது? நானா நீயா என்று அங்கு நின்ற மூன்று நண்பர்களுக்குள் சண்டை வேறு! பின்னர் தொலைபேசியில் உரையாடும் பாக்கியம் அடியேனுக்கு கிடைத்தது.இதன் பின்னர் எப்படி எல்லாம் பேசியிருப்போம் என்பது இங்கே தணிக்கைக்கு உட்படுத்தப்படுகின்றது. $#%%***£€¥

கட்! கட்! கட்!………!
இவ்ளோ விடயமும் கேட்ட பின்னர் நாம என்ன கோழிக் குஞ்சா வாங்கப் போயிருப்போம்.டெலிபோனைக் கட் பண்ணிட்டு அடுத்த பப்ளிக் பூத்தினையல்லவா நாடியிருப்போம் ஹே…ஹே! நம்மளுக்கு எதிரிங்க யாராச்சும் இருந்தாலே போதும் – நம்மில் சிலர் பப்ளிக் பூத்தில் நாணயக் குற்றிகளைப் போட்டு மிஸ்ட் கோல் மேல மிஸ்ட் கோல் பண்ணி நைட் எல்லாம் தூங்க விடாம டெலிபோன் மூலமாகவே கொலை செய்திடுவாங்க. இன்னும் சிலர் பொண்ணுங்க நம்பர் தானா இது என்று டெஸ்ட் பண்ணிப் பார்ப்பதற்கும் இந்த பப்ளிக் பூத்தினைத் தான் நாடுவாங்க. மிஸ்ட் கோல் பண்றவங்களை விட, தவறான விடயங்களைப் பேசி அழைப்பினை எடுப்போருக்கு அலுப்பு கொடுக்கும் வகையில் தான் நம்மில் பலர் இந்த பப்ளிக் பூத்தினை நாடுகின்றோம்.கேளுங்க புரட்சி வானொலி puradsifm.com

இன்று தொழில்நுட்ப விருத்தியின் விளைவால் ஆளுக்கொரு அலைபேசியுடன் நாம் அனைவரும் நடமாடுவதால், தெருவோரங்களில் கவனிப்பாரற்று அலறுகின்றன பப்ளிக் பூத்கள். இப்போதெல்லாம் பொது இடங்களில் பொண்ணுங்களுக்கு பிலிம் காட்டும் நோக்கில் (பந்தா காட்டுதல்) நம்ம பசங்களில் அநேகமானோர் தமது போனுக்கு தாமே அலராம் செட் பண்ணி வைத்து, அலாரம் அடிக்கும் டைம்மில் தமக்கு யாரோ போன் பண்றாங்கள் என பாசாங்கு பண்ணிப் பேசத் தொடங்கி விட்டார்கள். பொண்ணுங்களும், பசங்களும் கண்ணை மூடிக் கொண்டு பத்து நம்பரை டயல் செய்து பார்க்கிறாங்க. அதிஷ்டவசமாக ஏதோ ஒரு இலக்கத்தினூடாக மேற் கொள்ளப்பட்ட அழைப்பில் பொண்ணுங்க பேசினாலோ அல்லது பையன் பேசினாலோ அழைப்பினை மேற்கொண்ட நபருக்கு ஜாலி என்றெண்ணி கடலை போட ஆரம்பிக்கிறாங்க!

இன்றளவில் ரெலிபோனில் காதல் என்பது ஆபாச பேச்சாகி பின்னர் இணையம் முழுக்க விசமத் தனமாக அப்லோட் செய்யப்படுகின்றது. ஆகவே நாம் ஒரு வார்த்தை பேசும் முன் பலமுறை யோசிப்பது நலமே! புரட்சி வானொலிக்காக கமலேஷ்

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
பொடுகுத் தொல்லைக்கு புளித்தத் தயிர்
கொழுப்பை குறைக்க..!
ஹேர் டை இல்லாம வீட்டிலேயே முடியை எப்பட...
வயிற்றுப்புண், மலச்சிக்கல் போக்கும் தி...
உடலில் வறட்சி நீங்கி அழகாக்கும் ஆவாரம்...
இதை முழுவதும் படியுங்கள். உங்கள் வருங்...
உடலுறவுக்கு முன் இதை செய்யுங்கள் தாம்ப...
ஆறே மாதத்தில்... 69 ஆயிரம்... அசத்தல் ...
அதிகமாக பகிருங்கள் .வீட்டில் நிறைவான ச...
திருமணமான இரண்டே நாளில் வைத்தியசாலை செ...
தமிழ் பெண் கொலை, கணவர் கைது! டொரோண்டோவ...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 257
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  257
  Shares