அதிகமாக பகிருங்கள்: புகைபிடித்தலை நிறுத்த இதோ எளிமையான வழி!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 108
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  108
  Shares

கடலை மிட்டாய் போதும் தம் அடிப்பதை நிறுத்த….. எப்படிப்பா இந்த சிகரெட் ‘குடிக்கும்’ பழக்கத்தை நிறுத்துவது…
உலகம் முழுவதும் இதே பிரச்சினைதான்.
எத்தனையோ உபாயங்களை பலரும் சொல்கிறார்கள், என்னென்னவோ பண்ணிப் பார்க்கச் சொல்கிறார்கள்.
ஆனால் புகை பிடிப்பதை அடியோடு நிறுத்த அல்லது வெகுவாக குறைக்க ஒரு ஈசியான வழி உள்ளது.

புகை பிடிக்கும் பழக்கம் எல்லோருக்கும் கூடப் பிறந்தது அல்ல, இடையில் வந்ததுதான்.எனவே அதை நிறுத்துவது என்பது மலையை சாய்க்கும் காரியம் அல்ல, சற்றே மனது வைத்தால் போதும்.
மனக் கட்டுப்பாட்டை சற்றே உறுதியோடு கடைப்பிடித்தாலே போதும் இதை எளிதில் சமாளிக்கலாம்.
சரி மேட்டருக்கு வருவோம்…

சிகரெட் பிடிப்பதை நிறுத்த மிக மிக ஈசியான வழி ஒன்று உள்ளது.
அதுகுறித்துத்தான் இந்த கட்டுரையே…
முதலில் நீங்கள் புகை பிடிப்பதில் ‘செயின்’ ஜெயபாலா அல்லது ‘அக்கேஷனல்’ ஆரோக்கியசாமியா, இல்லை ‘மிடில்கிளாஸ்’ மாதவனாக இருக்கலாம்.
ஆனாலும் நீங்கள் எப்படியாப்பட்ட ‘கிங்ஸாக’ இருந்தாலும் இந்த உபாயத்தைப் பயன்படுத்திப் பார்க்கலாம் – நம்பிக்கையோடு.
– நீங்கள் ஒரு நாளைக்கு எத்தனை சிகரெட் பிடிப்பவராக இருந்தாலும் பரவாயில்லை, சிகரெட்டை நிறுத்த வேண்டும் என்று முதலில் மனதளவில் தீர்மானியுங்கள்.
முதலில் கஷ்டமாகத்தான் இருக்கும்.
ஆனாலும் கண்ணை மூடிக் கொண்டு முதலில் முடிவை எடுத்து விடுங்கள்.சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.


– முடிவெடுத்து விட்டாயிற்றா, அதை எந்த நாளிலிருந்து அமல் படுத்துவது என்பதையும் தீர்மானியுங்கள்.
இப்போது முதலே நிறுத்துகிறேன் என்று சவடாலாக முடிவெடுக்க வேண்டாம்.
அது சாத்தியமில்லாதது.
எனவே நாளையிலிருந்து அல்லது அடுத்த வாரத்திலிருந்து என்று ஒரு தேதி குறிப்பிடுங்கள்.
– முடிவு செய்த தேதிக்கு வந்துருச்சா, நீங்கள் தம் அடிக்கும் நேரம் வந்து விட்டதா..
உடனே கடைக்குப் போங்கள்.
ஒரு சிகரெட்டை வாங்குங்கள்.
ஆனால் பற்ற வைக்காதீர்கள்.
அதை வெறுமனே வாயில் வைத்துக் கொண்டு சிறிது நேரம் தம் அடிப்பது போல உணர மட்டும் செய்யுங்கள்.
ஒரு சிகரெட்டை நீங்கள் எப்படியெல்லாம் அனுபவித்து பிடிப்பீர்களோ, அந்த உணர்வு வருவது போல வாயில் வைத்து எடுங்கள்.


படு கஷ்டமாகத்தான் இருக்கும்.
இருந்தாலும் மனதைக் கட்டுப்படுத்துங்கள்.
– வாங்கிய சிகரெட்டை அப்படியே வைத்துக் கொண்டு இதே போல முதல் நாள் முழுவதும் செய்து பாருங்கள்.
சற்று கட்டுப்படுவது போலத் தோன்றும்.
ஆனால் பெரும் கஷ்டமாகவும் இருக்கும்.
இருந்தாலும் மனம் தளர்ந்து பற்ற வைத்து விடாதீர்கள்.
– அடுத்த நாள்தான் ‘சத்திய சோதனை’யே ஆரம்பம்.
2வது நாளில் நீங்கள் ஒரு சிகரெட்டை கூட வாங்கக் கூடாது.
மாறாக கடைக்குப் போய் 50 காசு கொடுத்து கடலை மிட்டாயை வாங்குங்கள்.
சென்னைப் பக்கம் இதற்கு பர்பி என்று பெயர், மதுரைப் பக்கம் போனால் கடலை மிட்டாய் என்பார்கள்.
இந்தக் கடலை மிட்டாய்தாங்க உங்களின் புகைப் பழக்கத்தை அடியோடு விரட்டப் போகும் அரு மருந்து.
எனவே இதை சாதாரணமாக எடை போட்டு விடாதீர்கள்.
-2வது நாள் முழுவதும் எப்போதெல்லாம் தம் அடிக்க வேண்டும் என்று உங்களுக்குத் தோன்றுகிறதோ அப்போதெல்லாம் ஒன்று அல்லது 2 கடலை மிட்டாய்களை வாங்கி வாயில் போட்டு சாப்பிடுங்கள்.
இது மிகப் பெரிய ‘டைவர்ஷனை’ கொடுக்கும்- இது அனுபவ வார்த்தை எனவே நம்புங்கள்.
2வது நாள் முழுவதும் உங்களுக்கு ரொம்பவே கஷ்டமாகத்தான் இருக்கும், கிட்டத்தட்ட பைத்தியம் பிடிப்பது போலவும் இருக்கும்.
இருந்தாலும் மனதை கட்டுப்படுத்துங்கள், டைவர்ஷனைத் தரும் வகையிலான சிந்தனைக்கு மாறிப் பாருங்கள், நிச்சயம் புகை பிடிக்கும் உணர்வை கட்டுப்படுத்த முடியும்.


– 3வது நாளில் உங்களுக்குள் பெரிய மாற்றத்தை உணர முடியும்.
புகை பிடிக்க வேண்டும் என்ற எண்ணம் வெகுவாக குறைந்திருப்பதை நீங்களே உணர முடியும். அப்படி ஒரு வேளை தவிர்க்க முடியாமல் தோன்றினாலும், உடனே கடைக்குப் போய் கடலை மிட்டாயை வாங்கி வாயில் போடுங்கள்.
இந்த மிக மிக எளிய முறையில் 3 நாட்களிலேயே, ஒரு வேளை உங்களால் கட்டுப்படுத்த முடியாவிட்டால் கூடுதலாக 2 நாட்களை எடுத்துக் கொள்ளலாம், உங்களது புகை பிடிக்கும் பழக்கத்தை நீங்கள் கட்டோடு நிறுத்தி விட முடியும் அல்லது குறைத்து விட முடியும்.
அது எப்படிய்யா கடலை மிட்டாயை வச்சு தம் அடிப்பதைக் குறைக்க முடியும், பெரிய டுபாக்கூரா இருக்கே என்று அவ நம்பிக்கையுடன் கேட்கிறீர்களா…
அப்படிச் சொல்லாதீங்க, நிச்சயம் முடியும்.
உங்களுக்கு மன உறுதியும், கட்டுப்பாடும் மட்டும்தான் இந்த சமயத்தில் மிக மிக முக்கியமாக தேவை.இன்னொரு விஷயம், இந்த மூன்று நாட்களுமே நீங்கள் வீட்டில் உட்கார்ந்து கொண்டு இதைச் செய்து பார்க்காதீர்கள், சத்தியமாக உங்களால் புகைப் பழகத்தை விடவே முடியாது.
நீங்கள் எங்கு வழக்கமாக சிகரெட் வாங்குவீர்களோ அதே கடைக்குப் போய்த்தான் இந்த ‘மருந்தை சாப்பிட’ வேண்டும்.அப்போதுதான் உங்களைப் பிடித்துள்ள இந்த ‘நோய்’ குணமாகும்.
இதுவும் கூட ஒரு வகையில் ‘சைக்கலாஜிகல் அப்ரோச்’தான்.
அதாவது சிகரெட்டை சிகரெட்டை வைத்தே விரட்டுவது.
ஒருசிகரெட்டானது உங்களது ஒரு நாள் ஆயுளைக் குறைக்கிறதாம்.
அத்தோடு உங்களைச் சுற்றியுள்ளவர் களையும் கூட காவு வாங்கி விடுகிறது.
எனவே இனியும் கையில் ‘தம்’மோடு திரியாதீர்கள்..
மனதில் தெம்போடு திரிய கடலை மிட்டாயை வாங்குங்கள், மனம் நிறைய நம்பிக்கையோடு புது வாழ்க்கையைத் தொடங்குங்கள்…
Disclaimer: கடலை மிட்டாய் என்பது
ஒரு மீடியம்தான்.
கடலை மிட்டாய்க்குப் பதில் சாக்லேட், மின்ட் என எதை வேண்டுமானாலும் நீங்கள் பயன்படுத்தலாம்…
உங்களுக்குத் தேவை திசை திருப்ப உதவும் ஒரு டைவர்ஷன் மட்டும்தான்.
உங்களுக்குப் பிரியமானவர்களை நினைத்துக் கொண்டாலும் கூட நீங்கள் புகை பிடிப்பதை விட முடியும்.சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையும் கேளுங்கள்.
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
வாழைப்பூ உருண்டை பிரியாணி
தலைவலி உயிர்போகிறதா? இதோ காரணமும் உடனட...
5 ரூபாய் செலவில் சிறுநீரக கல்லைக் கரைக...
அதிகமாக பகிருங்கள்: கும்பலாக ஆட்கள் நி...
அதிகமாக பகிருங்கள்: 5 ரூபாய் செலவில் ப...
அழகான முகத்தில் அசிங்கமாய் ஏன் கரும்பு...
அதிகமாக பகிருங்கள்:பெண்களை மட்டும் குற...
பப்பாளி விதைகளை தூக்கிப்போட்டு விடுகிற...
சிறு நீரக நோய்க்கு குட் Bபாய்...! இந்த...
மருந்துக்கு கட்டுப் படாத வயிற்றுப் புண...
இரு புருவங்களுக்கு மத்தியில் அழுத்தம் ...
ஆயுள் நீடிக்கவும் ஆரோக்கியமான வாழ்க்கை...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 108
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  108
  Shares