எளிய இயற்கை மருத்துவம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

* தும்பைப் பூவை தினமும் கொஞ்சம் வாயில் போட்டு மென்று வந்தால் தொண்டையில் சதை ஏற்படாமல் தடுக்கும். தொண்டைப்புண்ணும் ஆறும்.

* காலையிலும் இரவிலும் காய்ச்சிய ஒரு டம்ளர் பசும்பாலில் தேன் கலந்து தினமும் குடித்து வந்தால் சோகை நோய்க்கு மருந்தே தேவையில்லை.

* பெருங்காயத்தைத் தினமும் ஒருவேளையாவது உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். வாயுவை வெளியேற்றுவதில் பெருங்காயம் பெரும்பங்கு வகிக்கிறது.

* கரிசலாங்கண்ணி கீரையைப் பருப்பு மட்டும் சேர்த்துப் பொரியல் செய்து சாப்பிட்டு வந்தால் உடல் பருமன் குறையும். இரவு வேளைகளில் சாப்பிடாமல் தவிர்ப்பது நல்லது.

* விவசாயிகளுக்கும், சலவைத் தொழிலாளிகளுக்கும் தண்ணீரில் நின்று வேலை பார்ப்பவர்களுக்கும் சாதாரணமாக வரக்ககூடிய கால் நோயான சேற்றுப்புண்ணிற்கு கால்களை ஈரம் போகத் துடைத்துவிட்டு மஞ்சள் தூளைத் தேனில் குழப்பி கால் இடுக்குகளில் தடவி வந்தால் சேற்றுப்புண் ஆறும்.

* தோல் வியாதிகள் காரணமாக உடம்பின் மேல் பகுதி தடித்துச் சொரசொரப்பாக இருக்கும். கொத்துமல்லி இலையை நன்றாக அரைத்து சொரசொரப்பான இடத்தில் மேல் பூச்சாகப் பூசி வந்தால் மூன்று நாட்களிலேயே தோல் மிருதுவாகும்.

* வெண்டைக்காய் விதையைக் கொஞ்சம் பார்லி கஞ்சியில் போட்டு காய்ச்சி மூன்று நாள் வரை சாப்பிட்டு வந்தால் சிறுநீர் கழிக்கும்போது ஏற்படும் எரிச்சல் இல்லாமல் போகும்.

* உணவு சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக தினசரி அரை டீஸ்பூன் ஆலிவ் எண்ணெய்யைச் சாப்பிட்டு வந்தால், இரத்தக் குழாயிலே கொலஸ்ட்ரால் படியாதவாறு தடுக்கும்.

* வாய்ப் புண் வந்தவருக்குப் பகை காரம். முடிந்த வரை காரத்தைக் குறைத்துச் சாப்பிடுங்கள். தேங்காய்த் துண்டுகளைச் சாப்பிட்டு வந்தால் எளிதில் ஆறும்.

* ஜாதிக்காயைச் சிறுசிறு துண்டுகளாகச் சீவி அதை நெய்விட்டு வறுத்து சாப்பிட்டு வந்தால் சீதளபேதி போக்கும். தயிர், மோர், இளநீர் ஆகியவற்றை மட்டும் ஏராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

* துளசி நீர் மனித மூளைக்கு வலிமையைக் கொடுக்கக்கூடிய அபாரமான மருந்து. துளசி இலையை ஒரு டம்ளரில் போட்டு ஊற வைத்து அந்தத் நீரைக் குடித்து வந்தால் மூளை பலம் பெறும்.

* தொண்டைப் புண்ணுக்குப் பிறகு கொஞ்சம் மிளகைத் தூளாக இடித்து, அதில் வெல்லம், நெய் கலந்து உருட்டி விழுங்கி வந்தால் முற்றிலும் குணமாகும்.

* அஜீரணம் மற்றும் மந்தத்திற்குச் சிறந்தது கொய்யாவின் கொழுந்து

இதையும் படிக்கலாமே
நோய் தீர்த்து செல்வத்தை கொடுக்கும் வெந...
30-வயசாகியும் உங்களுக்கு கல்யாணம் ஆகவி...
இரவு 11 மணிக்கு மேல் கட்டிலுக்கு சொல்ப...
உண்மையிலேயே விந்து வெளியேறும் போது சத்...
முடி உதிர்தலை தடுக்க மற்றும் தலை முடி ...
திருமணத்திற்கு முன் உடலுறவு கொள்வது சர...
இதை சாப்பிடுங்கள் . இதய நோய் மட்டுமில்...
அதிகமாக பகிருங்கள்: தயவு செய்து வலிப்ப...
அதிகமாக பகிருங்கள்: சிறுநீரை அடைக்கி வ...
ஆண்களே தொங்கும் தொப்பையை கரைக்க வேண்டு...
உங்களுக்கு கண் திருஷ்டியா..? கண்டுபிடி...
உடல் எடையை குறைக்கும் அற்புத பழம்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •