ஈழத்தை அதிர வைத்த கரும்புலித் தாக்குதல் தோல்வியில் முடிந்தது எப்படி- இது வரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 224
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  224
  Shares

ஈழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெளிவராத மர்மங்களின் தொகுப்பு: பாகம் 01
இப் பதிவானது ஏற்கனவே நடந்து முடிந்த ஓர் சம்பவத்தைப் பற்றியது. இந்தத் தாக்குதலோடு தொடர்புடையவர்களில் தற்போது உயிரோடு இருப்பவர்களின் பெயர் விபரங்கள் யாவும் மாற்றப்பட்டுள்ளது.

சுருக்க விவரணம்:
ஈழப் போராட்ட வரலாற்றில் தமிழீழம் எனும் இலட்சியத்தினைத் தாங்கிப் பல போராட்ட அமைப்புக்கள் ஆயுத முனையிலும், அரசியல் நீரோட்டத்திலும் போராடி காலவோட்டத்தில் காணாமற் போய் விட்டன. தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்புத் தான் தாம் தலைமேற் கொண்ட கடமை – இலட்சியம் என்பவற்றில் உறுதியாக நின்று , மக்களுக்கு கொடுத்த வாக்குறுதியினைத் தம்மால் முடிந்தளவிற்கு காப்பாற்ற வேண்டும் எனும் நோக்கில் இறுதி வரை போராடினார்கள். புலிகள் அமைப்பினர் குறைந்தளவு ஆள் பலத்தினையோ அல்லது ஆயுத பலத்தினையோ தம் வசம் வைத்திருந்தாலும் தம்மோடு போர் புரிந்தவர்களுக்கு அதிகளவான இழப்புக்களைக் கொடுப்பதில் கண்ணும் கருத்துமாக இருந்தவர்கள்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் பிரபாகரனும், குறைந்தளவு ஆளணியினை வைத்துப் பெருமளவனா படையினருடன் மோத வரும் எதிரணியினரை தம் மனோபலம் எனும் ஆயுதம் மூலம் எதிர்க்கின்ற வலிமையினைத் தன் போராட்ட அமைப்பிற்குக் கற்றுக் கொடுத்திருந்தார். புலிகள் தீவிரவாதிகள் எனும் கூற்று உண்மையிலே சரியானது தான். “புலிகள் தாம் கொண்ட கொள்கையிலும் சரி, அல்லது தமது தாக்குதல்களிலும் சரி தம்மைத் தீவிரமாக ஈடுபடுத்திக் கொண்டதனால் அவர்களைத் தீவிரவாதிகள் என அழைத்தல் ஒரு போதும் அவ் அமைப்பினைத் தாழ்த்தியிருக்காது என்று நினைக்கிறேன்”.

புலிகளின் ஒவ்வோர் தாக்குதலின் வெற்றியின் பின்னணியிலும் பொட்டம்மான் தலமையிலான உளவுத் துறை அல்லது புலனாய்வுத் துறையின் பங்களிப்பு அதிகமாக இடம் பெற்றிருக்கும். உலக வல்லரசு நாடுகள் வியந்து போற்றிய பெருமையினை புலிகளின் புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது. புலிகள் தமது பகுதிக்குள் இடம் பெற்ற உட்பூசல்கள் மூலம் பல கருமங்களில் வீழ்ச்சி கண்டிருந்த போதிலும்,
இந்த உட் பூசல்களையெல்லாம் முற் கூட்டியே அறிந்து தலைவரினை, அவதானத்துடன் நடக்கும் படி பல சந்தர்ப்பங்களில் எச்சரித்த பெருமையினைம் இந்தப் புலனாய்வுத் துறையானது பெற்றிருந்தது.

எச்சரிக்கை செய்யப்படும் நபர்கள் மீது தலைவருக்கு இருந்த அதீத நம்பிக்கை காரணமாக நம்பிக் கெட்டுப் போன பெருமையும் இந்தப் தேசியத் தலைவருக்கு உண்டு. புலிகளின் தாக்குதல்களின் வெற்றியினை விளக்க ஒரு வசனம் கூறுவார்கள். ‘காற்றுப் போக முடியாத இடத்திலும் புலிகள் புகுந்து சேதம் விளைவிக்கக் கூடியளவிற்கு தேர்ச்சி பெற்றிருந்தார்களாம் என. சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையகேளுங்கள்.

புலிகளின் புலனாய்வுத் துறையினரின் வீரமிகு- விவேக மிகு பங்களிப்புக்கள் மூலமாக, பல ஆயிரம் எதிரணிப் படைகளால் தீவிர கண்காணிப்புடன் 24 மணி நேரமும் மின்சாரம் பாய்ச்சப்பட்டு , முட் கம்பி வேலிகள் மூலம் அடைக்கப்பட்டிருக்கும் இராணூவத் தளங்களுக்குள் , ஊடுருவித் தாக்குதல் நடத்தி வெற்றிகரமாகத் தமது தளம் திரும்பக் கூடிய பெருமையினை புலிகள் ஒரு காலத்தில் தம் வசம் தக்க வைத்திருந்தார்கள்.

எதிரணியினரின் குகையினுள், அதிகளவான சிங்கள மக்கள் செறிந்து வாழும் பகுதியான- இலங்கையின் தலை நகருக்கு சமீபமாக உள்ள கொழும்புப் பகுதியினுள் ஒரு தாக்குதலை வெற்றிகரமாக நடத்தி முடிப்பதென்பது கடினமான விடயமாக இருந்த போதிலும், தலமை சளைக்காது தனது புலனாய்வுத் துறையினரின் உதவியோடு இந்தத் தாக்குதல்களையெல்லாம் வெற்றிகரமாக நடாத்தியிருந்தது.

ஒரு கட்டத்தில் எதிரணியினரின் குகையினுள் ஊடுருவித் தாக்கும் தாக்குதல்களுக்கான காய் நகர்த்தல்களை, உளவுத் தகவல்களைச் சேமிப்பதில் மிகுந்த சிரமங்கள் நிலவிய போதும்; தலைவரும் – பொட்டம்மானும் கையாண்ட உத்திகள் தான்
*பெண் உளவாளிகளை அனுப்பி இராணுவத்தினரோடு காதல் களியாட்டங்களில் ஈடுபட வைத்து அவ் இராணுவத்தினர் மூலமாக இராணுவத் தலமையம், முக்கிய அரசியற் பிரமுகர்களின் வாசஸ்தலம், இராணுவ மையங்கள், கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த நிலையங்கள் முதலியவற்றினைப் பற்றிய தகவல்களைச் சேகரித்துக் கொள்ளுவதாகும்.
*சிங்கள மக்களை விலை கொடுத்து(பணம் கொடுத்து) வாங்கி உளவாளிகளாகச் செயற்பட வைத்தல். சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியையகேளுங்கள்.

கொழும்பு நகரில் இராணுவத்தினரின் புலானய்வுத் தகவல்களைத் திரட்டும் புலியணிக்குப் பொறுப்பாக நியூட்டன் இருந்த காலப் பகுதியில், இடம் பெற்ற தாக்குதலைப் பற்றிய மர்மங்கள் தான் இங்கே பகிர்ந்து கொள்ளப்படவிருக்கிறது. தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அப்போதைய கள நிலமைக்கு அமைவாக தமிழர் விரோதச் செயல்களில் ஈடுபட்ட தமிழர்களை- தமிழ் அமைச்சர்களைப் போட்டுத் தள்ள வேண்டிய தேவை எழுகின்ற போதெல்லாம் அதிகளவான ரிஸ்க் எடுக்கமாட்டார்கள்.

தமது எதிராளி ஒரு தமிழ் அரசியற் கட்சியினைச் சேர்ந்தவராக இருக்கும் பட்சத்தில்; தமது புலி உறுப்பினர் ஒருவரை அவர்களது கட்சியினுள் சேர வைத்துத் தமக்கு வேண்டிய தேவையினை அப் புலி உறுப்பினர் மூலமாக நிறைவேற்றிக் கொள்வார்கள்.
இந்த இராணுவ அதிகாரி புலிகளால் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வந்த ஒரு நபர். புலிகளால் குறித்த அமைச்சர் மீது, அதாவது இந்தச் சம்பவத்தின் மூலம் உயிர் தப்பினார் எனக் கூறப்பட்ட அமைச்சர் மீது தற்கொலைத் தாக்குதல் நடாத்த வேண்டிய அளவிற்கு அக் காலப் பகுதியில் (20….ம் ஆண்டு ஜூ………மாதத்தில்)
அவர் ஒரு முக்கியமான இலக்காக காணப்படவில்லை, டம்மிப் பீஸ் ஒன்றிற்காக கொழும்பின் உயர் பாதுகாப்பு வலயத்தினுள் தமது ஆயுதங்களை நகர்த்தித் தற்கொலைப் போராளி ஒருவரைத் தயார் செய்து தாக்குதல் நடாத்தும் அளவிற்கு புலிகள் அப்போது முனைப்புக் காட்டவில்லை.சொந்தங்களே, நியூஸ் படிச்சதோட மட்டும் நின்று விடாது, மறக்காம புரட்சி வானொலியை கேளுங்கள்.

குறிப்பிட்ட அமைச்சர் மீது புலிகள் தாக்குதல் நடாத்த வேண்டிய தேவை இருப்பின், யாழ் மாவட்டத்தில் அவரது கட்சி உறுப்பினர்களோடு கூட இருந்து, அக் கட்சி உறுப்பினர்கள் சிலரைச் சுட்டுக் கொன்று விட்டுச் சென்ற புலிகளால் அவரும் யாழ்ப்பாணத்தில் வைத்து இலக்கு வைக்கப்பட்டிருக்கலாம். ஆனால் கொழும்பு வரை பின் தொடர்ந்து சமாதான ஒப்பந்த காலப் பகுதியில் இலக்கு வைக்கப்படுமளவிற்கு இவர் அப்போது புலிகள் அமைப்பிற்கு வேண்டிய ஒரு நபராக காணப்படவில்லை.

கொழும்பு மாவட்டத்தில் நிகழும் புலிகளின் நடவடிக்கைகளைக் கண்காணித்தல், தமிழ் வணிகர்களின் வியாபரத் தகவல்களைத் திரட்டி இராணுவத்தினருக்கு வழங்குதல் முதலிய விடயங்களில் ஜால்ராப் போட்டு வீணை வாசித்துக் கொண்டிருந்த ஒருவர்…அடிக்கடி இராணுவத்தின் கொழும்பு மாவட்டப் புலனாய்வுப் பிரிவில் மிக முக்கிய பொறுப்பில் இருந்த இஸ்லாமிய புலனாய்வு அதிகாரியினைத் தனது கட்சி அமைவிடத்திற்கு அழைத்துச் சந்திப்புக்களை மேற்கொண்டு இரசியத் தகவல்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்.

இனி……….யார் மீது? எத்தனை பேரின் உதவியோடு, புலிகளால் மேற்கொள்ளப்பட்ட மனித வெடி குண்டுத் தாக்குதல் எனப்படும் கரும்புலித் தாக்குதல் தோல்வியடைந்தது? அது எப்படித் திசை திருப்பட்டது எனும் தகவல்கள் அடுத்த பாகத்தில் பார்ப்போமா……………….

அன்பான அறிவித்தல்: ஏற்கனவே நடந்து முடிந்த, வழக்குகள் யாவும் நிறைவுற்ற, குற்றவாளிகள் தண்டனை பெற்றுக் கொண்ட சம்பவத்தினையே இங்கு பகிர்கிறேன். இம் மர்மங்களை எழுத்துருவிற்கு கொண்டு வருவதன் மூலம்; குறித்த அமைச்சரைப் பற்றிய தகவலினைப் பகிரங்கப்படுத்த நான் முயற்சி செய்யவில்லை. நடந்து முடிந்த ஒரு சம்பவத்தினை இங்கே பகிர்வதால், இக் கட்டுரையினைக் கட்டுரையாகவே விட்டு விடுவோம். யார் மனதையும் புண்படுத்த வேண்டும் எனும் நோக்கிலோ, அல்லது சம்பவத்தோடு தொடர்புடைய நபரை இக் கட்டுரையூடாக வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும் என்பதற்காகவோ இக் கட்டுரையினை இங்கே எழுதவில்லை.
புரட்சி வானொலிக்காக கே.கே. பல அதிர்ச்சியூட்டும் சம்பவங்களைத் தாங்கிய இரண்டாவது பாகம் நாளை இதே நேரம் உங்களை நாடி வரும்.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
மெர்சல் படத்தின் இந்த காட்சிகளை உடனடிய...
விஜய் பற்றி கொச்சையாக பேச தொடங்கிய எச்...
நடிகர் விஜய்க்கான கடைசி வாய்ப்பு முடிந...
கனடா பள்ளிகளில் தமிழ் மொழி..! இரண்டாம்...
வருமானவரி துறையின் திடீர் பாய்ச்சல். ம...
பிரான்ஸில் அரசியல் ஆலோசகராக ஈழத்து சிற...
139 பேருக்கு மரண தண்டனை விதித்து அதிரட...
ஜெயலலிதாவின் மரணத்திற்கு காரணம் இந்த ம...
25-ற்கு மேற்பட்ட பெண்களை பாலியல் பலாத்...
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவ...
பிரதமருக்கு எதிராக தேர்தலில் வாக்களிப்...
எதிரணிகளை நடுங்க வைத்த பிரபல கிரிக்கெட...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 224
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
  224
  Shares