பேஸ்புக்கில் அந்த மாதிரி விடயங்களில் ஆர்வம் காட்டுவோரா நீங்கள்? அப்ப இதைப் படியுங்க

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 160
 •  
 •  
 •  
 •  
 •  
  600
  Shares

ப்ரியா வுடுறான் பேஸ்புக். மச்சி நீ புகுந்து விளையாடு.. இந்த மாதிரித் தான் நம்மில் பலர் இன்று சமூக வலைத் தளத்தங்களில் உலவுகிறோம்.
காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை வாழ்க்கையில் என்னென்ன நடந்தது என்பதை அப்படியே போட்டோ எடுத்து பேஸ் புக்கில் போடுவது நமது வாடிக்கையாகிவிட்டது. இதை பப்ளிசிட்டி என்று சொல்வதா? இல்லை தற் புகழ்ச்சி என்பதா? அல்லது நம்மை நாமே காட்சிப்படுத்தி மகிழ்கிறோம் என்பதா? எப்போதாவது நாம் குடும்பத்துடன் வெளியில் சென்ற போட்டோவை பேஸ்புக்கில் போடுவது என்பது சரி என்று வைத்துக் கொள்வோம். அதற்காக உங்களது வாழ்க்கையில் நடக்கும் அனைத்து விஷயத்தையும் பேஸ் புக்கில் போட்டுக் கொண்டு இருந்தால் அது உங்களுக்கு பின்னாளில் ஒரு பெரும் தலைவலியாக தான் வந்து சேரும். அட என்னங்க முழிக்கிறீங்க. ஆமாங்க மக்கள்ஸ், நீங்கள் பேஸ்புக்கில் அப்டேட் செய்யும் சில விஷயங்களை உங்களுக்கே தெரியாமல், பின்னனியில் சில பிரச்சனைகளாக உருவாகும். இதை எல்லாம் புரிந்து கொள்ளாமல் களத்தில் இறங்கினால் உங்கள் நிலை அவ்வளவு தான்…! அப்புறம் நடுத் தெருவில் நின்று கத்தினாலும் உதவிக்கு யாருமே வரமாட்டாங்க. காரணம் மானம் போனால் வராது என்பது போல, பேஸ்புக்கில் ஒருவாட்டி அப்லோட் செய்தாலே போது. சங்கிலித் தொடரா சும்மா போய்க் கொண்டே இருக்கும் ஷேர் போஸ்ட்.

துணையின் அனுமதி : ஏதாவது போட்டோவை உங்களது துணையின் டைம் லைனில் ஷேர் செய்யும் முன்னர் உங்களது துணையின் அனுமதி பெற்ற பின்னரே ஷேர் செய்ய வேண்டியது அவசியம். அவரது அனுமதி இல்லாமல் அவரது டைம் லைனில் நீங்கள் ஏதாவது ஷேர் செய்தால், அது அவரை ஏதேனும் ஒரு விதத்தில் பாதித்துவிட்டால், உங்களது உறவில் அது விரிசலை உண்டாக்கிவிடும்.

சண்டை : உங்களது துணை எந்த அளவுக்கு சண்டை போட்டாலும் சரி, உங்களை புரிந்து கொள்ளாமல் இருந்தாலும் சரி, உங்கள் மீது தவறே ஒரு துளி கூட இல்லை என்றாலும் சரி நீங்கள் உங்களது சண்டை, உங்களது துணையின் மீது உள்ள கோபம் பற்றி பேஸ்புக்கில் ஷேர் செய்யாதீர்கள். உங்களது கோபத்தை மற்றவர்கள் பயன்படுத்திக் கொள்ள நிறைய வாய்ப்புகள் உள்ளன. அதுமட்டுமின்றி, இது ஒருவித தர்ம சங்கடத்தையும் உங்களது துணைக்கு உண்டாக்கும்.

நெருக்கமான போட்டோ: நீங்களும் உங்களது துணையும் மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அடிக்கடி வெளியே சென்று வாழ்க்கையை அனுபவித்து வாழ்பவர்களாக இருக்கலாம். அதே சமயம் உங்களது நட்பு வட்டத்தில், துணையை பிரிந்து, அல்லது இன்னும் திருமணம் ஆகவில்லையே என்று புலம்பி வாழ்பவர்களும் இருக்கலாம்… அவர்களது மத்தியில் நீங்கள் உங்களது துணையுடன் மிகவும் நெருக்கமாக உள்ள புகைப்படத்தை போட்டால் அது அவர்களை வருத்தப்பட செய்யும். இந்த கடுப்பில் உங்களை அவர்கள் பிளாக் செய்து விடவும் வாய்ப்புகள் உள்ளது.

பரிசுப் பொருட்கள்: நீங்கள் உங்களது துணையுடம் விலை அதிகமுள்ள பரிசுப் பொருட்களை போட்டோ எடுத்து பேஸ்புக்கில் போடுவது வேண்டாம். இது பொருளாதாரத்தில் உங்களுக்கு கீழ் உள்ளவர்களின் மனதை பாதிக்கும். நம்மால் இப்படி எல்லாம் இருக்க முடியவில்லையே என்ற ஏக்கத்தை தரும். உங்களது காதல் முறிவு.. ஏன் அவருடம் உங்களுக்கு பிரேக் அப் ஆனது போன்ற கதைகளை எல்லாம் பேஸ்புக்கில் போட வேண்டாம். உங்களது பிரேக் அப் பிரச்சனையை பேஸ்புக்கில் வந்து கொட்ட வேண்டும் என்று எல்லாம் ஒன்றும் இல்லை. உங்களது நெருங்கிய நண்பரகளிடத்தில் உங்களது பிரச்சனைகளை பகிர்ந்து கொண்டாலே போதுமானது.புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய மறவாதீர்கள்.

சின்ன சின்ன விஷயம்
உங்களது துணையும் நீங்களும் மிகவும் நெருக்கமானவர்களாக இருக்கலாம். அதற்காக உங்களது நண்பர்கள் அனைவரும் உங்களது வாழ்க்கையில் என்னென்ன விஷயங்கள் நடக்கிறது..திங்கள் கிழமை எங்கே போனீர்கள், செவ்வாய்கிழமை என்ன செய்தீர்கள் என்பதை எல்லாம் தெரிந்து கொள்ள அனைவரும் ஆர்வம் காட்டமாட்டார்கள். மேலும் இந்த பழக்கம் தம்பதிகளுக்கு இடையே உள்ள நெருக்கத்தை குறைப்பதாகவும் இருக்கும்.

முன்னாள் காதலன் / காதலி உங்களது பிரண்ட் லிஸ்ட்டில் வைத்துக் கொள்வது உங்களுக்கு நீங்களே ஆப்பு வைத்துக் கொள்வதை போல ஆகும். இதனை உங்களது காதலி அல்லது மனைவி அறிந்தால், நீங்கள் அவருடன் இன்னும் தொடர்பில் தான் இருக்கிறீர்கள் என்று நினைக்க கூட வாய்ப்புகள் உள்ளது. ஆகவே இனிப்பாக போய்க் கொண்டிருக்கும் இல் வாழ்வில் கசப்பான சூழல் ஆரம்பிக்க நீங்களே காரணமாகி விடாதீர்கள். ஒரு முறை சிந்தித்துப் பகிருங்கள். வாழ்வு சிறப்பாக அமையும். புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுக்கும் ஷேர் செய்ய மறவாதீர்கள்.
நன்றி https://tamil.boldsky.com/

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
வெறும் வயிற்றில் தண்ணீர் குடிப்பதன் நன...
கடவுள் யாரையும் கை‌விடுவ‌தி‌ல்லை!
சன்னி லியோனை தொடர்ந்து இந்திய படங்களில...
திரைப்பட பிரச்சனையால் தீபிகா படுகோன் எ...
கோட் பாதர் ,ஸ்கெட்ச்,பிரபல நடிகை மரணம்...
"நானும் செவிலியர் தான்" சென்...
தமிழ் ராக்கர்ஸ் இணையத்திற்கு ஆப்பு வைத...
ஒரு உயிரின் விலை ஒரு டாலர்,பதினோரு சென...
பச்சை மாங்காய் சாப்பிடுவதால் இத்தனை நோ...
பிறந்த நாளே இறந்த நாளான கொடூரம்..! தீய...
ஆண்கள் வயதில் மூத்த பெண்களை காதலிப்பது...
மனைவியை பிரிந்து செல்ல கருவாடு கேட்ட ந...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 440
 •  
 •  
 •  
 • 160
 •  
 •  
 •  
 •  
 •  
  600
  Shares