கணவரின் நண்பரால் பாலியல் தொல்லை – கதறும் பிரபலம்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

எனக்கும், என் கணவருக்கும் பெரிதாக சொல்லிக் கொள்கிற அளவுக்கு அப்படியொன்றும் அன்னியோன்யம் இல்லை. வாசகர்களே, இங்கே நீங்கள் படிப்பது தினகரன் நாளிதழில் வெளியான மருத்துவர் கேள்வி பதிலாகும். டியர் மேடம், எனக்கு வயது 32. ரொம்பவும் சுமாரான அழகுதான். நானும், என் கணவரும் ஒரே அலுவலகத்தில் வேலை பார்க்கிறோம். வேலையில், அழகில், ஆளுமையில் எல்லாவற்றிலும் என் கணவருக்கும், எனக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது. நான் அவருக்கு சரியான ஜோடியில்லையோ என்கிற வருத்தம் எனக்கு நிறையவே உண்டு.

எனக்கும், என் கணவருக்கும் பெரிதாக சொல்லிக் கொள்கிற அளவுக்கு அப்படியொன்றும் அன்னியோன்யம் இல்லை. நான் சுமாரானவள் என்பதை அடிக்கடி அவரது பேச்சும், செயல்களும் குத்திக் காட்டிக் கொண்டே இருக்கும். என் கணவருக்கு அடுத்த பொசிஷனில் இருப்பவர் இன்னொரு ஆண். அவரும் என் கணவரைப் போலவே அழகானவர். கம்பீரமானவர். எனக்கும் அவர் நல்ல நண்பர்.

அலுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம் என்னுடைய கேபினுக்கு வந்து பேசிக் கொண்டிருப்பார் அந்த நண்பர். முதலில் சாதாரண பேச்சுவார்த்தையில் தொடங்கிய நட்பு, மெதுவாக அடுத்த கட்டத்துக்கு நகர்ந்தது. எதேச்சையாக தொட்டுப் பேசுவது, கையைப் பிடிப்பது என மாறியது. தனிமையில் இருக்கும் போது எனக்குப் பின்னால் வந்து கண்களைப் பொத்துவார். தோள்களைத் தொடுவார். ஆரம்பத்தில் நானும் அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. தெரியாமல் செய்கிறார் என்று அலட்சியப் படுத்தினேன்.

போகப் போக அவர் தெரிந்துதான் செய்கிறார் எனப் புரிந்தது. பல முறை எச்சரித்தேன். அப்போதெல்லாம் அவர் தன் மனைவியைப் பற்றிப் பேச ஆரம்பித்துவிடுவார். ‘மனைவியுடனான உறவு சரியில்லை, உன்னை மிகவும் பிடித்திருக்கிறது’ எனப் புலம்புவார். நல்லவேளையாக அவர் என்னிடம் நடந்து கொள்கிற முறை என் கணவர் உள்பட அலுவலகத்தில் யாருக்கும் தெரியாது.

அப்படித் தெரிந்தால் என் நிலை என்னாகுமோ என நினைக்கவே பயமாக இருக்கிறது. அந்த நண்பரிடம் அன்பாகவும், கோபமாகவும் இதெல்லாம் வேண்டாம் எனச் சொல்லிப் பார்த்தும் பலனில்லை. இதிலிருந்து நான் எப்படி மீள்வது? அந்த நண்பரை எப்படிக் கட்டுப்படுத்துவது? – பெயர் வெளியிட விரும்பாத சென்னை வாசகி.

அன்புத் தோழி, நண்பர் என நீங்கள் குறிப்பிட்டிருக்கும் அந்த நபரின் நட்பும், ஸ்பரிசமும் வேண்டாம் என உங்கள் வாய் சொன்னாலும், மனது வேண்டும் என்றே விரும்புகிறது. எப்போது ஒரு ஆணின் நடவடிக்கைகள் உங்களுக்கு தர்ம சங்கடத்தைத் தருகிறதோ, பிடிக்கவில்லையோ அதை நிறுத்தும்படி உறுதியாகச் சொல்வது உங்கள் கைகளில்தான் உள்ளது. நீங்கள் நினைத்திருந்தால், அந்த நபரிடம் கண்டிப்பான குரலில், கோபத்துடன் அதைச் சொல்லி நிறுத்தியிருக்கலாம்.

அப்படியும் அவர் கேட்காமல் இருந்தால், உங்கள் கணவரிடமோ, மேலதிகாரியிடமோ புகார் செய்து, அவர்கள் மூலம் நடவடிக்கை எடுத்திருக்கலாம். அது எதையும் நீங்கள் விரும்பவில்லை என்பதை உங்கள் கடிதமே சொல்கிறது. கடிதத்தின் ஆரம்பத்திலேயே நீங்கள் ரொம்பவும் சுமாரான அழகுள்ளவர் எனக் குறிப்பிட்டிருக்கிறீர்கள். அதே சமயம் உங்கள் கணவரும், நண்பரும் உங்களைவிட எல்லாவிதங்களிலும் உயர்ந்தவர்கள் என்றும் குறிப்பிட்டிருக்கிறீர்கள்.

உங்களுடைய அழகையும் தோற்றத்தையும் அடிக்கடி உங்கள் கணவர் மட்டம் தட்டிப் பேசுவதாலும், அதே நேரம் யாரோ ஒரு ஆண் உங்களிடம் அன்பாகவும், உங்களை நேசிப்பதாகவும் சொல்லியதால் உண்டான வினை தான் இது எல்லாம். நண்பரின் அத்துமீறல்கள் தவறு எனத் தெரிந்தாலும், உள் மனசு அது வேண்டுமென்றே விரும்பியிருக்கிறது. கணவரால் சீண்டப் பட்ட உங்கள் ஈகோவுக்கு இது சந்தோஷம் தருகிறது. இது தற்காலிக இன்பம்தான் என்பது உங்கள் மனதுக்குப் புரியவில்லை. விஷயம் உங்கள் அலுவலகத்தில் கசிந்தால், அசிங்கமும், அவமானமும் உங்களுக்குத்தான். உங்களுடன் சேர்ந்து அவமானப்படப் போகிறவர் உங்கள் கணவரும்தான்.

தன் மனைவியைப் பற்றிக் குறை சொல்லி, அதன் மூலம் உங்கள் இரக்கத்தை சம்பாதித்து, அதையே தனக்கு சாதகமாக்கிக் கொள்ளவும் நினைத்திருக்கிறார் உங்கள் நண்பர். பெண்களை ஏமாற்ற நினைக்கிற பல ஆண்களின் ஆயுதம் இது. அதை நம்பி மோசம் போகாதீர்கள். உங்களிடமிருந்து விலகும்படி நண்பரிடம் கடுமையாகச் சொல்லுங்கள். முடிந்தால் அவரை வேறு அலுவலகத்துக்கு இடம் மாற்றுங்கள் அல்லது நீங்கள் மாறிக் கொள்ளுங்கள். அழகு, அந்தஸ்து எனப் பல விஷயங்களில் நீங்கள் உங்கள் கணவரைவிடக் குறைந்தவராக இருக்கலாம்.

ஆனால், கல்யாணமென்று ஆன பிறகு, அதையெல்லாம் பெரிதுபடுத்தி, உங்கள் நிம்மதியை நீங்களே சிதைத்துக் கொள்ளாதீர்கள். கணவருடன் உட்கார்ந்து அன்பாக, அமைதியாகப் பேசுங்கள். அவரது பேச்சு உங்களை எந்தளவு காயப்படுத்துகிறது எனப் புரிய வையுங்கள். நீங்கள் அவர்மீது எந்தளவுக்கு அன்பு வைத்திருக்கிறீர்கள் என்பதை வார்த்தைகளாலும், செயல்களாலும் நிரூபித்துக் கொண்டே இருங்கள். தடுமாற்றம் வேண்டாம். வாழ்க்கை இன்னும் மிச்சமிருக்கிறது. நம்பிக்கையோடு இருங்கள்.

நன்றி தினகரன்

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
சருமத்தை வெள்ளையாக மாற்ற
முகத்தில் உள்ள கரும்புள்ளிகளை போக்கும்...
வைரம் பிரண்டை சாற்றில் பொடியாகும் என்ற...
மூளைக்காய்ச்சல்
முடி வளர்ச்சியைத் தூண்டும் இயற்கை முறை...
சுகம் தரும் சோம்பு
அசத்தலான குறிப்புக்கள்
உடல் பருமனை குறைக்க உதவும் இயற்கை வழி...
இந்தியாவில் பாசுமதி அரிசி பயிரிட அதிரட...
தமிழர்களை வாழ்த்தும் ஆங்கிலேயர்கள்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
சுவிஸில் மீண்டும் சோகம்: பொலிசாரிடம் இ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •