காளான் சாப்பிடுங்கள்,சந்தோசமாக வாழுங்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 714
  •  
  •  
  •  
  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
    801
    Shares

சிகிச்சையளிக்க முடியாத மன உளைச்சலால் அவதிப்படுபவர்களின் மூளையை மேஜிக் காளான்களில் காணப்படும் சைலோசிபின் எனும் ஒருவித மயக்கத்தைத் தரக்கூடிய இரசாயனம் மீளமைக்கும் என பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது.

சிறியளவில் நடத்தப்பட்ட ஆய்வில் 19 நோயாளிகளுக்கு, சைகெடெலிக் மூலக்கூறு அடங்கிய சைலோசிபின் என்ற மருந்தின் ஒரு டோஸ் கொடுக்கப்பட்டுள்ளது.
நோயாளிகளில் பாதிப்பேருக்கு மன உளைச்சல் ஏற்படுவது நின்று, மூளை செயற்பாட்டில் அனுபவப்பூர்வமான மாற்றங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்நிலை கிட்டத்தட்ட ஐந்து வாரங்களுக்கு நீடித்துள்ளது.
எனினும், லண்டன் இம்பீரியல் கல்லூரியைச் சேர்ந்த குழு, மருத்துவரின் ஒப்புதலின்றி நோயாளிகள் சுயமாகவே மருந்தை எடுத்துக்கொள்ளக்கூடாது என்று கூறியுள்ளது.
மன உளைச்சலின் போது, சைலோசிபின் மூளைக்கு மசகுப்பொருள் போல செயற்படக்கூடும் என்று பல தொடர் சிறிய ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.

சைலோசிபின் அவ்வாறு செயற்படும்போது, மன உளைச்சல் அறிகுறிகளிலிருந்து நோயாளிகள் தப்பிக்க அனுமதிக்கிறது.
ஆனால், மூளை செயற்பாட்டின் மீது என்ன மாதிரியான குறிப்பிட்ட விளைவுகளை ஏற்படுத்துகிறது என்பது தெளிவாகத் தெரியவில்லை.
நோயாளிகளுக்கு சைலோசிபின் வழங்கப்படுவதற்கு முன்னரும், நோயாளிகள் நிதான நிலைக்கு வந்த பின்னரும் இம்பீரியல் குழுவினர் எம். ஆர். ஐ. ஸ்கேனை எடுத்துள்ளனர்.
இந்த ஆய்வு, ‘சைன்டிஃபிக் ரிப்போர்ட்ஸ்’ என்ற இதழில் வெளியிடப்பட்டுள்ளது. அதில், மூளையின் இரு முக்கிய பகுதிகளை சைலோசிபின் பாதிக்கிறது. அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.


ஒன்று அமிக்டாலா பகுதி மற்றொன்று நரம்புகளின் பிணையப்பகுதி.
பயம் மற்றும் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துவதில் அமிக்டாலா பெரும் பங்காற்றுகிறது. சைலோசிபின் உள்ளே சென்றவுடன் இந்த பகுதியின் செயற்திறன் குறைகிறது. அதேசமயம், சைலோசிபின் எடுத்துக்கொண்ட பின் நரம்புகளின் பிணையப்பகுதி மிகவும் நிதானமாக செயற்படத் தொடங்குகிறது.

எனினும், இந்த பரிசோதனைகள் இன்னும் சிறியளவிலேயே இருக்கின்றன.
மேலும், மன உளைச்சலுக்கு சைலோசிபின் சிகிச்சையைப் பயன்படுத்த முடியும் என ஏற்றுக்கொள்வதற்கு முன் பெரியளவிலான ஆய்வுகள் இதுகுறித்து இன்னும் தேவைப்படுகின்றன.

புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
நாவல் பழத்தின் மகத்துவமும் மருத்துவமும...
உடலுக்கு வலு சேர்க்கும் பாதம் பருப்பு
பொடுகு தொல்லை இனி இல்லை எளிமையான டிப்ஸ...
வெண்டக்காய் சாப்பிடுவதால் இத்தனை நன்மை...
வேகமாக பகிருங்கள் சோம்பில் உள்ள நன்மைக...
மாதவிடாய் நாட்களில் உடலுறவுகொண்டால் இத...
வயாகரா எதுக்கு கைவசம் சாதிக்காய் இருக்...
பாதாம் பருப்பின் மருத்துவ பயன்கள்
உடலில் இருக்கும் கொழுப்பை கரைக்கும் உ...
5 ரூபாய் செலவில் சிறுநீரக கல்லைக் கரைக...
அதிகமாக பகிருங்கள் பால் பிரியர்களுக்கு...
அதிகமாக பகிருங்கள் . ஒரு கப் கரட் ஜூஸி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 714
  •  
  •  
  •  
  • 87
  •  
  •  
  •  
  •  
  •  
    801
    Shares