பரபப்பூட்டும் பேஸ்புக் பயனர்களுக்கான ராசி பலன்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 683
  •  
  •  
  •  
  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
    740
    Shares

பரபரப்பூட்டும் பேஸ்புக் வாசகர்களுக்கான ராசி பலன்கள் + கிசு கிசுக்கள்!!🙏🏻🙏🏻🙏🏻 வணக்கம் நண்பர்களே, பேஸ்புக்கில் அன்றாடம் தீயா வேலை செய்யும் நாம் ஒவ்வொருவரும் பேஸ்புக் உழைப்பாளிகளுக்கான ராசி பலன்களை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம் என ஸ்வாமி பேஸ்புக்கானந்தா அவர்கள் சொல்லியிருக்கிறார். அந்த வகையில் ஸ்வாமிஜி அவர்களின் கணிப்பின் பேரில் பேஸ்புக் ராசி பலன்கள் இதோ உங்களுக்காக.

மேஷம்
பேஸ்புக்கில் உங்கள் கை ஓங்கி காணப்படும். தொட்ட தெல்லாம் துலங்குவது போல நீங்கள் எழுதும் பதிவுகளும் செம ஹிட் வாங்கும், உங்கள் புகழ் எல்லா இடமும் வியாபித்திருக்கும். புதிது புதிதாக உட்கார்ந்து யோசிக்கத் தொடங்குவீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் பேஸ்புக் நண்பர்கள் யார் லைக்கிற்காகவும், கமெண்டிற்காகவும் உங்களைப் பின் தொடர்கிறார்கள் என்பதனை கண்டறிவீர்கள். உங்கள் பேஸ்புக் டைம் லைன் சந்தோசங்களால் நிறைந்து காணப்படும்.சத்தியமா இது ஒரு சீரியஸ் பதிவு கிடையாது.

ரிஷபம்

எதையும் துணிச்சலாகச் சொல்லப் போய் எதிர்ப்புக்களில் மாட்டிக் கொள்வீர்கள். வகை தொகையின்றி அடிக்கடி முட்டு சந்துகளில் அடி வாங்குவோர் போல், பேஸ்புக்கில் குழு மோதல்களுக்கு ஆளாகுவீர்கள். ஆனாலும் மனந் தளராது பதிவெழுதிக் கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு லைக்குகளால் ஏற்படும் குறையை நிவர்த்தி செய்ய விரும்பின் ஸ்வாமி லைக்கானந்தாவை ஆறு திங்கள் வேண்டி வர இக் குறை நிவர்த்தியாகும். அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

மிதுனம்

சர்ச்சைகளில் அடிக்கடி சிக்கித் தவிப்பீர்கள். பேஸ்புக்கில் பதிவிட இன்று எதுவும் சிக்கலையே எனும் நோக்கில் விபரீதமான தலைப்புக்களை வைத்து எழுதிப் பார்ப்பீர்கள். One india, விகடன், வெப் துனியா, தினமணி, Lankasri என பிரபல இணையத் தளங்களில் இருந்து காப்பி பேஸ்ட் போஸ்ட் எழுத முயற்சிப்பீர்கள். அதுவும் தேறவில்லை என்றால் சக பெண்களை வம்பிழுத்து புரட்சிகரமாக எழுத ஆரம்பித்து வாங்கிக் கட்டிக் கொள்வீர்கள். உங்களுக்கு ஹிட்டீஸ்வரனின் பார்வை அதிகமாக இருப்பதால் அதனை நீக்குவதே சிறந்த வழியாகும். இதற்குப் பரிகாரமாக பெண்ணியம், தலித்தியம் என கட்டுரைகள் எழுதி வர தோஷங்கள் யாவும் நீங்கும்.

கடகம்

கவர்ச்சியான போஸ்ட்டால், கலக்கலான போட்டோக்களால் பலரையும் கவர்வீர்கள். புதிய புதிய சிந்தனைகளை உள்வாங்கி ஸ்டேட்டஸ் பகிர்வீர்கள். பேஸ்புக்கில் எல்லோராலும் நட்பு பாராட்டப்படுவீர்கள். அனைத்து பேஸ்புக் நட்புக்களையும் அனுசரித்துப் போவீர்கள்.

சிம்மம்

இந்த ராசியினுள் சந்திரன் நீடிப்பதால் மத இறுக்கங்கள் உருவாகும். தர்ம சங்கடமான சூழ் நிலைகளுள் சிக்கித் தவிப்பீர்கள். எப்போது பார்த்தாலும் அழியும் நிலையில் என் மதம் இருக்கிறது. அதனை நான் காப்பாற்றியே ஆகனும் அதற்காகவே ஸ்டேட்டஸ் போட்டு புலம்புவீர்கள். கூட்டம் சேர்த்து உங்கள் பதிவுகளுக்கு நீங்களே லைக் போட்டு கொ(ல்)ள்வீர்கள். இது ஒரு வகை மேனியாவாகும். இதனை தீர்க்க விரும்பின் ஸ்வாமி பேஸ்புக்கானந்தாவை வணங்கி வர எல்லாம் குணமாகும்.

கன்னி!!

ஸ்டேட்டஸ் போடுவதால் அடிக்கடி அலைச்சலுக்குள்ளாவீர்கள். நடு ராத்திரியில் திடீரென எந்திருச்சு யார் மெசேஜ் அனுப்பியிருக்கிறார்கள், யார் லைக் போட்டிருக்கிறார்கள் என அடிக்கடி மொபைலில் செக் பண்ணிக் கொள்வதால் வீட்டுக்காரியின் கோபத்திற்கு ஆளாகுவீர்கள். வீட்டில் கவனம் செலுத்துவதை தவிர்த்து பேஸ்புக்கே பைத்தியம் என இருப்பதால் வீட்டில் எதிர்ப்புக்கள் உருவாகும். இதற்கு ஒரே பரிகாரம் பேஸ்புக்கிற்கு முற்றுப் புள்ளி வைப்பதேயாகும்.

துலாம்

திட்டமிட்டபடி உங்கள் ஸ்டேட்டஸ் பலராலும் ரசிக்கப்படலையே என்று கவலை கொள்வீர்கள். ஆன்மீகப் பதிவுகளை அடிக்கடி எழுதுவீர்கள். பேஸ்புக் நட்புக்கள் சிலரை அடிக்கடி மெசஞ்சரில் தொடர்பு கொண்டு நலம் விசாரிப்பீர்கள். ரொம்பவும் அப்பாவித்தனமாக இருப்பீர்கள். போஸ்ட் எழுதி விட்டு எப்படா ஆட்கள் வருவார்கள் என யோசித்துக் கொண்டிருப்பீர்கள். லைக்ஸ்
விழவில்லையே என குறைபட்டுக் கொள்வீர்கள். இந்தக் குறைகளை நிவர்த்தி செய்ய விரும்பின் ஸ்வாமி லைக்கானந்தாவை தொடர்ந்து வழிபட்டு வரவும். அன்பிற்கினிய சொந்தங்களே, புரட்சி வானொலியின் இந்தப் பதிவு பிடித்தால் மறக்காம ஷேர் செய்யுங்கள், புரட்சி வானொலியையும் கேட்க மறவாதீர்கள்.

விருச்சிகம்

லைக் வெறி கொண்டு உறக்கத்திலும் ஸ்டேட்டஸ் பற்றியே சிந்தித்து அரைத் தூக்கத்திலும் பதிவு எழுதுவீர்கள். லைக்ஸ் அதிகரிக்கலையே என நொந்து கொண்டு அடிக்கடி உங்களுடைய பேஸ்புக் பேஜ் வியூவை நீங்களே கூட்ட Refresh / கீபோர்ட்டில் F8 அழுத்திக் கொண்டிருப்பீர்கள். அரசியல், சினிமா என அனைத்து துறைகளிலும் எழுத துடியாய் துடிப்பீர்கள். ஸ்டேட்டஸ் எழுத மேட்டர் சிக்கவில்லை என்றால் உங்கள் மனைவி, பிள்ளைகளைக் கூடத் திட்டிப் பதிவெழுத பின் நிற்க மாட்டீர்கள்.

தனுசு

எப்போதாவது ஓர் நாள் தான் ஸ்டேட்டஸ் எழுதுவீர்கள். மனதுள் மகிழ்ச்சி பொங்கும். கலர்புல் போஸ்ட், கலர் கலர் போட்டோஸ், என அதிகம் பகிருவீர்கள். நண்பர்களுக்கு உதவும் வகையில் பொதுக் காரியங்களில் ஈடுபடுவீர்கள். புதிய நண்பர்கள் அறிமுகமாவார்கள். பேஸ்புக் பிரபலங்களுக்கு தீவிர கமெண்ட் விசிறியாக செயற்படுவீர்கள். கவிதை எழுதுகிறேன் என்ற பெயரில் அங்க சுட்டு – இங்க சுட்டு , ஆயாக் கடையில் மாவு அரைச்ச கதையாக உங்கள் பெயரில் கவிதை எழுதியதாக சுய புகழ்ச்சி கொள்வீர்கள். 40 பேரை Tag செய்து 400 லைக் வாங்கிட்டோம் என சுய பெருமை கொள்வீர்கள்.

மகரம்

சந்திராஷ்டமம் நீடிப்பதால் உங்களை அறியாமல் நீங்களாகவே சிக்கலில் மாட்டிக் கொள்வீங்க. துயரப் பதிவுக்கு கலக்கிட்டீங்க, சூப்பர் என்றும், சந்தோசப் பதிவுக்கு உங்களுடைய துன்பத்தில் நானும் பங்கெடுக்கிறேன் எனக் கூறி பேஸ்புக் நண்பர்களின் தீராத கோபத்திற்கு ஆளாவீர்கள். யாரையுமே பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். பேஸ்புக்கில் யாராச்சும் தீவிரமாகச் சண்டை போடும் பதிவினுள் கூட சிரித்தபடி கலக்கிட்டீங்க எனக் கமெண்ட் போட்டு விட்டுத் திரும்பிடுவீங்க. உங்களுக்கு பின்னூட்டீஸ்வரனால் குறையுண்டு. அவரை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

கும்பம்

உற்சாகத்துடன் ஸ்டேட்டஸ் போடுவீங்க. உங்கள் குடும்பத்தவரையும் பேஸ்புக்கிற்கு இழுத்துவர முயலுவீங்க. நண்பர்களை ஊக்கப்படுத்துவீர்கள். வியாபார தகவல்களை ஸ்டேட்டஸ் ஆக எழுதுவதை குறிக்கோளாக கொண்டிருப்பீர்கள். பேஸ்புக், ருவிட்டர் என எல்லா இடங்களிலும் உங்கள் பதிவுகளைக் கொண்டு போய் ஷேர் பண்ணுவீங்க.

மீனம்

உங்களைப் பேஸ்புக்வாதி என்று சொல்வதிலும் பார்க்க பின்னூட்டவாதி என்றே சிறப்பிக்கலாம். ஒவ்வோர் பேஸ்புக் நண்பர்களின் ஸ்டேட்டஸிலும், தொடர்பின்றி ஆன்லைனில் ஆட்டயப் போடுவது எப்படி என்று விளக்கம் பகிர்வீர்கள். பிரபல பேஸ்புக் pages , மற்றும் பிரபல பேஸ்புக் வாதிகளின் பக்கங்களினை சுற்றிச் சுற்றி வருவீர்கள். ஒவ்வோர் நாளும் நேரந் தவறாது ஒவ்வோர் பேஸ்புக் பிரபலங்களின் பதிவர்களினதும் பதிவுகளைச் சுட்டு உங்கள் டைம் லைனில் சொந்தப் பதிவுகள் போல எழுதி வருவீர்கள்.


மொத்தத்தில் இன்றைய நாள் பேஸ்புக் சொந்தங்கள் அனைவருக்கும் இனிய நாளாக அமையட்டும்.
இப் பதிவு வெறும் நகைச்சுவைக்காக மட்டுமே! யார் மனதையும் புண்படுத்தும் நோக்கத்தில் அல்ல. இது ஒரு சீரியஸ் பதிவே கிடையாது. புரட்சி வானொலிக்காக கமலேஷ்.
புரட்சி வானொலியின் வெளியீடாக ஓர் பாடல், பாருங்கள், பிடித்தால் பகிருங்கள்.
பாடல்: Boat Beat
இசை: SA அருண் பாடியவர்கள்: Aj மற்றும் SA அருண்
சொல்லிசை (Rap) : SA அருண்
பாடல் வரிகள்: கமலேஷ்
இது ஒரு புரட்சி எப்.எம் ஊடக நிறுவனத்தின் படைப்பு

இதையும் படிக்கலாமே
ஸ்நேஹன் லைவ் வீடியோ
சமந்தா நாகா சைதன்யா திருமண விழா
பிக் பாஸ் 2 இன் போட்டியாளர்கள் விபரம் ...
நினைத்ததை உடனே நிறைவேற்றும் சாய் நாமமு...
ஐஸ்வர்யாராயிடம் உல்லாசமாக இருக்க ஆசைப்...
வாட்சப் குழுவொன்றின் அட்மினா நீங்கள்? ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
நண்பர்களே தயவு செய்து இதை அதிகம் ஷேர் ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்..!
நடிகை சமந்தாவை காதலித்த நாகார்ஜூனா.! வ...
இந்த ஆசைகளையெல்லாம் பெண்களால் அடக்கவே ...
சுனாமி பீதியில் மக்கள்..? கருப்பு நிறம...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 683
  •  
  •  
  •  
  • 57
  •  
  •  
  •  
  •  
  •  
    740
    Shares