மெல்பேணில் தமிழீழ தேசிய மாவீரர் நாள்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 277
 •  
 •  
 •  
 • 23
 •  
 •  
 •  
 •  
 •  
  300
  Shares

தமிழீழ விடுதலைக்காக இறுதிவரை போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை நினைவுகொள்ளும் தேசிய நினைவெழுச்சி நாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்றுவருகின்றன. இந்தவகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும் மாவீரர் நினைவு நாள் நிகழ்வுக்கான ஏற்பாடுகள் தமிழர் வாழும் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றுவரும் இவ்வேளையில், அவுஸ்திரேலியாவின் விக்ரோரிய மாநில, மெல்பேர்ன் நகரில் அமைந்துள்ள Springvale நகர மண்டபத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி, திங்கட்கிழமை மாலை 6மணி முதல் தேசிய நினைவெழுச்சிநாள் (மாவீரர் நாள்) நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்படவுள்ளது.

இந்நிகழ்வுக்கு முன்பாக மெல்பேணில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை விரைவில் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் மாவீரர் பணிமனையுடன் பதிவுசெய்து கொள்ளுமாறு வேண்டப்படுகின்றீர்கள். இதற்காக அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவினரால் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்ட அறிவித்தலும், மாவீரர் நாள் பற்றிய விளம்பர மடலும் இத்துடன் மீண்டும் ஒருமுறை உங்கள் கவனத்திற்காக இணைத்து அனுப்பப்பட்டுள்ளது.

தயவுகூர்ந்து இவ்வறிவித்தல்களை மெல்பேண் வாஅக்ஷ் உங்கள் உறவுகளுக்கும் தெரியப்படுத்துங்கள். இதற்கு உங்களாலான முழுமையான ஒத்துழைப்பையும் ஆதரவையும் வழங்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
நன்றி

அவுஸ்திரேலியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் வேண்டுதல்!
மாவீரர் குடும்பங்களின் விபரத் திரட்டு

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

தமிழீழ விடுதலைக்காக தம்முயிரை அர்ப்பணித்து போராடி வீரச்சாவடைந்த மாவீரர்களை, எழுச்சியுடன் நினைவு கொள்ளும் தேசிய நினைவெழுச்சிநாள் ஏற்பாடுகள் தமிழர்கள் வாழும் அனைத்து நாடுகளிலும் நடைபெற்று வருகின்றன. அவ்வகையில் அவுஸ்திரேலிய நாட்டிலும், 2017ம் ஆண்டு மாவீரர் நினைவுநாள் நிகழ்வுகள் நவம்பர் மாதம் 27ம் நாள் திங்கட்கிழமை (27 – 11 – 2017) அன்று அனைத்து மாநிலங்களிலும் நடைபெறவிருக்கின்ற நிலையில், அவுஸ்திரேலியாவில் வாழும் மாவீரர் குடும்பங்களை சேர்ந்தோர் அல்லது உரித்துடையோர் தமது விபரங்களை பதிவுசெய்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.

இதுவரை தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் விபரப்பட்டியலில் இல்லாத, மாவீரர் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், குறிப்பாக அண்மையில் குடிபுகுந்தவர்கள் தயவு செய்து தமது விபரங்களைத் தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவுடன் பகிர்ந்துகொள்ளுமாறு தாழ்மையுடன் கேட்டுக் கொள்கின்றோம். மாவீரர் நாள் நிகழ்வில் தங்கள் குடும்பத்தைச் சேர்ந்த மாவீரரின் திருவுருவப் படத்திற்கு விளக்கேற்றும் நிகழ்வுக்கான ஒழுங்குபடுத்தல்களைச் செய்யவே, இவ்விபரத் திரட்டு நடைபெறுகின்றது. எனவே இதுவரை பதிவுகளை மேற்கொள்ளாதவர்கள், பின்வரும் தொலைபேசி எண்களில் தொடர்புகொண்டு பதிவுகளை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

மெல்பேர்ண் 0401 111 120
சிட்னி 0424 757 814

இவ்வண்ணம்

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – அவுஸ்திரேலியா

காந்தள் மலருக்கான ஆக்கங்கள் வேண்டுகை

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

கடந்த ஆண்டுகளில் மாவீரர் நாள் நினைவாக ‘காந்தள்’ என்ற பெயரில் மாவீரர் தொடர்பான படைப்புக்களைத் தாங்கிய இதழ் வெளியிடப்பட்டு வருகின்றது. அவ்வாறு இவ்வாண்டும் காந்தள் மலர் வெளியிடப்படவுள்ளதால் மாவீரர், தமிழீழம், தமிழீழ விடுதலைப் போராட்டம் தொடர்பான படைப்புக்கள் எம்மால் எதிர்பார்க்கப்படுகின்றன. படைப்புக்களை அனுப்ப விரும்புவோர் அவற்றைத் தட்டச்சி [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 17/11/2017 இற்கு முன்னதாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம். இம் மலருக்குத் தகுதியான ஆக்கங்கள் இவ்வாண்டின் காந்தள் மலரில் உள்ளடக்கப்படும் என்பதை தெரிவித்துக்கொள்கின்றோம்.

காந்தள் மலருக்கான நன்கொடை வேண்டுகை

அன்பார்ந்த எமது தமிழ் உறவுகளே,

கடந்த ஆண்டைப்போல் இம்முறையும் காந்தள் மலர் மாவீரர் நாளையொட்டி வெளியிடப்பட இருக்கின்றது. இம்மலருக்கான விளம்பர நன்கொடைகளைத் தங்களிடமிருந்து எதிர்பார்க் கின்றோம். இவ்விளம்பர நன்கொடைகளால் திரட்டப்படும் நிதி தாயகத்திலுள்ள மக்களின் வாழ்வாதாரத் தேவைகளை நிறைவுசெய்யப் பயன்படுத்தப்படும்.

விளம்பர நன்கொடை விபரம்:

முழுப்பக்கம்: $300.00

அரைப்பக்கம்: $200.00

காற்பக்கம்: $100.00

விளம்பரங்கள் தொடர்பாக தமிழர் ஒருங்கிணைப்புக்குழுவினருடன் தொடர்பு கொள்ளவும். விளம்பரக் கோப்புக்களை [email protected] என்ற மின்னஞ்சல் முகவரிக்கு எதிர்வரும் 17/11/2017 இற்கு முன்னதாக அனுப்புமாறு அன்புடன் கேட்டுக்கொள்கின்றோம்.
நன்றி.

மாவீரர் பணிமனை

தமிழர் ஒருங்கிணைப்புக்குழு – விக்டோரியா

தொடர்பு இலக்கங்கள்:
மெல்பேண் – 0433 002 619 அல்லது
0401 111 120 அல்லது
0404 802 104

இதையும் படிக்கலாமே
மனைவி போன பின் கணவன் படும் துயர் !!!
ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
பிஸ்தா பர்ஃபி தேவையானவை:
Truth Behind Suja's Eviction | சில உண்...
Bigg Boss - 27 September 2017 - Promo ...
சிட்னியில் ஆதித் தமிழன் இசைப் பயிற்சி
முதியோர் இல்லத்தில் இருந்து ஒரு அழு கு...
பூகம்பம், எரிமலை, சுனாமி ஏன் தோன்றுகின...
உங்கள் மனைவியிடம் கேட்க கூடாத அதிர்ச்ச...
10வயதில் விபச்சாரி, எங்கள் மனதையும் பு...
ஆண்மகனின் பேறுகாலம்! திருமணமான ஆண்களுக...
லண்டனில் ரெயினில் பயணம் செய்பவரா நீங்க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 277
 •  
 •  
 •  
 • 23
 •  
 •  
 •  
 •  
 •  
  300
  Shares