எச்சரிக்கை: நவம்பர் 19ம் திகதி அழியப் போகும் உலகின் சில பகுதி இவை தானா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 2.9K
  •  
  •  
  •  
  • 650
  •  
  •  
  •  
  •  
  •  
    3.5K
    Shares

நவம்பர் 19ம் தேதி உலகின் பல பகுதிகளுக்கு பூகோள ரீதியில் பெரும் அழிவு காத்திருப்பதாக அச்சுறுத்துகின்றனர் சில விஞ்ஞானிகள்.
‘பிளானட் எக்ஸ்’ இதுதான் கிறிஸ்தவ எண்ணியல் நிபுணர் டேவிட் மியாடே, சில வானியல் நிபுணர்கள் நிபிரு என்ற கோளுக்கு வைத்துள்ள பெயர்.
இதுதான் இத்தனை திகில்களுக்கும் காரணமான கோள் இந்த கோள், அடுத்த மாதத்தில் உலகெங்கிலும் பெரிய பூகோள அழிவுகளுக்கு காரணமாக இருக்கப்போவதாக இவர்கள் கூறுகிறார்கள். சமீபத்தில் நடைபெற்ற எரிமலை வெடிப்புகள், நிலநடுக்கங்களுக்கு நிபிருதான் காரணம் என்கிறார்கள் இந்த விஞ்ஞானிகள். ஆனால் இனிதான் பெரும் பாதிப்புகள் ஏற்படுத்தப்போவதாக அவர்கள் கூறுவதுதான் இதில் திகிலூட்டும் சமாச்சாரம். நவம்பர் 19ம் தேதி, இந்த நிபிரு கோள் தாக்கம், பூமியில் அதிகரிக்கும். இதன்பிறகு டிசம்பர் வரை இந்த தாக்கம் தொடர்ந்து கொண்டே இருக்கும். இதனால் பூமியில் பல்வேறு அழிவுகள் ஏற்படும் என்று கூறியுள்ளார் எழுத்தாளர் டெர்ரல் க்ரோப்ட். இவரது கருத்தை தொடர்ந்து பீதி அதிகரித்துள்ளது. சூரியனுக்கு பின்னால் பூமி செல்லும்போது, நிபிரு கோளின் தொடர்பு ஏற்படும். இதனால் நவம்பர் 19ம் தேதி இந்தோனேஷியாவில் பெரும் பூகம்பங்கள் ஏற்படலாம். இதனால் சுனாமி ஏற்படலாம். இத்தாலி, பிரான்ஸ் நாடுகளில் புதிய எரிமலை சீற்றம், நில நடுக்கம் போன்றவற்றை இந்த கோள் ஏற்படுத்தும் வாய்ப்புள்ளது என்று க்ரோப்ட் தெரிவித்துள்ளார். சுமேரியாவிலுள்ள ஜோதிடர்கள் நிபிரு கோளுக்கு மிகுந்த முக்கியத்துவம் கொடுப்பது வழக்கம். இந்த கோள் 3600 வருடங்களுக்கு ஒருமுறை, பூமிக்கு அருகே செல்வது வழக்கம் என்பது அவர்களின் ஜோதிட கணிப்பு. முதலில் செப்டம்பர் 23ம் தேதியும், பிறகு, அக்டோபர் 15ம் தேதியும் பூமிக்கு ஆபத்து ஏற்பட இருப்பதாக சில எண்ணியல் நிபுணர்கள் கணித்திருந்தனர். இப்போது நவம்பர் 19ம் தேதியை நோக்கி அவர்கள் பார்வை நகர்ந்துள்ளது. அதேநேரம், நாசா இதை மறுத்துள்ளது. நிபிரு என்ற கோள் இல்லவே இல்லை என்பது நாசா வாதம். மற்றொரு கோள் பூமி மீது மோதுவதால் அழிவு ஏற்படும் என்று பலரும் கூறுகிறார்கள். ஆனால் நிபிரு என்ற கோள் இருப்பதே கேள்விக்குறி எனும்போது, மோதலுக்கு ஏது வாய்ப்பு. நிபிரு குறித்த கருத்து வெகுகாலமாக உள்ளது. காலத்திற்கு ஏற்ப அது மாற்றிச் சொல்லப்படுகிறது. இவ்வாறு நாசா கூறியுள்ளது.புரட்சி வானொலியின் – இந்த பதிவை உங்கள் நண்பர்களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள்

இதையும் படிக்கலாமே
இருமலை கட்டுப்படுத்தும் நல்லெண்ணெய் !!...
shreya
இன்றைய பிக் பாஸ்ஸில் BIGG BOSS - 19th ...
மனைவிக்கு கள்ளத் தொடர்பு இருந்ததா?- போ...
ஓவியா டா
T rajendar Clarifies why he scolded Dh...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
அஜித் படத்தில் வேலைக்காரியாக நடிக்க தய...
அழகான மனைவி எந்த ராசிக்காரருக்கு கிடைப...
தமிழ்நாட்டில் 2 நாட்களுக்கு பலத்த மழை ...
உடலுறவில் இதெல்லாம் தப்பே இல்லை!
அரசியலில் குதிக்கும் நயன்தாரா.! இந்த க...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 2.9K
  •  
  •  
  •  
  • 650
  •  
  •  
  •  
  •  
  •  
    3.5K
    Shares