சவுதியில் கோமா நிலையில் இருக்கும் இந்திய குடும்பத்தினர் வைத்த உருக்கமான கோரிக்கை

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 9.2K
 •  
 •  
 •  
 • 6.5K
 •  
 •  
 •  
 •  
 •  
  15.8K
  Shares

இந்தியாவை சேர்ந்த நபர் ஒருவர் சவுதி மருத்துவமனையில் கோமா நிலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் இந்தியாவுக்கு அவர் மீண்டும் திரும்ப உதவி செய்ய வேண்டும் என அவரது குடும்பத்தார் அரசிடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

தெலுங்கானாவின் ராஜன்ன சிர்சில்லா மாவட்டத்தை சேர்ந்தவர் முகமது ஷம்சுதின் (42) இவர் பல வருடங்களாக சவுதி அரேபியாவில் தங்கி வேலை செய்து வருகிறார்.இந்நிலையில், கடந்த யூன் மாதம் 6-ஆம் திகதி திடீரென முகமதுக்கு பக்கவாதம் ஏற்பட்டதையடுத்து மூளையில் ரத்த கசிவு ஏற்பட்டுள்ளது.இதையடுத்து சவுதியின் டமாம் நகரில் உள்ள மருத்துவமனையில் முகமது சேர்க்கப்பட்டார்.

தற்போது அவர் கோமாவில் உள்ளார்.கடந்த 20 வருடங்களாக தனது குடும்பத்தாருடன் தொடர்பில்லாமல் இருந்த முகமதின் நிலை குறித்து இந்தியாவில் இருக்கும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 20 வருடங்களாக தனது குடும்பத்தாருடன் தொடர்பில்லாமல் இருந்த முகமதின் நிலை குறித்து இந்தியாவில் இருக்கும் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.இதையடுத்து முகமதை எப்படியாவது இந்தியாவுக்கு கொண்டு வர உதவவேண்டும் என அவரின் குடும்பத்தார் தெலுங்கானா அமைச்சர் மற்றும் தொகுதி எம்.எல்.ஏ-விடம் கோரிக்கை வைத்துள்ளனர்.

முகமதின் சகோதரர் அசாருதினும் சவுதியில் பணிபுரிந்து வரும் நிலையில், உடல் நிலை குறித்து அவருக்கு தெரிவிக்கப்பட்டது.அசாருதின் கூறுகையில், என் சகோதரரை எப்படியாவது இந்தியா கொண்டு செல்ல முயற்சித்து வருகிறேன், ஆனால் அதை எப்படி செய்வது என சரியாக தெரியவில்லை அவரை வாரம் ஒருமுறை மருத்துவமனைக்கு சென்று பார்ப்பேன், அப்போது எனக்கு அழுகை வரும்.எங்கள் குடும்பம் ஏழ்மையான குடும்பம், இந்தியாவுக்கு சென்றாலும் முகமதின் மருத்துவ செலவை எப்படி சமாளிப்போம் என தெரியவில்லை,

நான் இங்கு ஓட்டுனராக வேலை செய்து வருகிறேன்.குடும்பத்தை விட்டு முகமது விலகியே இருப்பார். எங்கள் பெற்றோர் மரணத்துக்கு கூட அவர் வரவில்லை, அதற்கான காரணம் தெரியவில்லை என கூறியுள்ளார்.முகமதின் விசா காலம் முடிவடைந்துவிட்டதால் அவர் சட்டவிரோதமாகவே சவுதியில் தங்கியுள்ளார்.இதனிடையில், இந்தியாவை சேர்ந்த சமூக சேகவர் நஷ், முகமதை சொந்த நாட்டுக்கு அழைத்து செல்வது குறித்து சவுதி அதிகாரிகளுடன் பேசி வருகிறார்.

இதையும் படிக்கலாமே
இவர்கள் மட்டும் பப்பாளி பழத்தை சாப்பிட...
ஆங்கில மொழி புலமையை அதிகரிக்க அசத்தலான...
உடலுறவின் பின் என்ன செய்ய வேண்டும் .? ...
இறப்புக்குப் பின் என்னவாகிறோம்?சொர்க்க...
கண் திருஷ்டியால் அவஸ்தைப் படுகிறீர்களா...
அதிகமாக பகிரவும் : மக்களே உஷார்! செல்...
பெண்களை காதலிக்க வேண்டும் என ஆசையா? இத...
விரைவில் விந்து வெளியேறிவிடுகிறதா? ஆண்...
அதிகமாக பகிருங்கள்: மாதம் ரூ 100000 வர...
ஆக்ரோஷமாக உடலுறவில் ஈடுபடுபவரா நீங்கள்...
திருமணம் நடந்து சில மணி நேரத்தில் பரித...
தீபாவிற்கும் கார் ட்ரைவருக்கும் இப்படி...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 9.2K
 •  
 •  
 •  
 • 6.5K
 •  
 •  
 •  
 •  
 •  
  15.8K
  Shares