பிக் பாஸ் ஜூலியின் கழுத்துக்கு வந்த கத்தி.திசை மாறுமா ஜூலியின் வாழ்க்கை .?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.4K
 •  
 •  
 •  
 • 3.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  10.6K
  Shares

பிக் பாஸ்’ ஜூலிக்கும் உங்களுக்கும் என்ன பிரச்னை?”“பிரச்னை எதுவும் இல்லை. நான் இப்ப எடுக்கிற விளம்பரப் படத்தின் முக்கிய கதாபாத்திரத்துல அவங்கதான் நடிக்கிறாங்க. படத்துக்கான வேலைகள் ஒருபக்கம் போயிக்கிட்டிருந்தாலும் விளம்பரப் படங்கள் இயக்கிட்டுதான் இருக்கேன். ராமநாதபுரத்துல இருக்கிற இலாஹி ஷாப்பிங் மாலுக்காக ஜூலியை வெச்சு ஒரு விளம்பரம்  எடுக்கலாம்னு யோசிச்சேன். அதை ஃபேஸ்புக்ல ஸ்டேட்டஸா போட்டப்போ பயங்கர எதிர்ப்பு. ஒரே நெகட்டிவ் கமென்ட்ஸ்.அப்புறம் முக்கியமான விஷயம், ஜூலி எங்க ஊரு பொண்ணு. பரமக்குடி பொண்ணு. `பிக் பாஸ்’ல கலந்துக்கிட்ட எல்லோருக்குமே சினிமா பின்னணி இருக்கு. ஆனா, ஜூலிக்கு அப்படி எதுவும் இல்லை. மனசுல படுறதை அப்படியே பேசுற ஆள். அதுக்கே அந்தப் பொண்ணை எல்லோரும் அவ்ளோ மோசமா திட்ட ஆரம்பிச்சுட்டாங்க. அதனால அந்தப் பொண்ணையே விளம்பரப் படத்துல நடிக்கவைக்கலாம்னு முடிவுசெஞ்சு ஃபிக்ஸ் பண்ணிட்டேன். ஏன்னா, இந்த உலகத்துல யாரும் கெட்டவங்களும் இல்லை; யாரும் நல்லவங்களும்இல்லை. எல்லாமே சந்தர்ப்ப சூழல்தான் அல்லது நாம பார்க்கிற பார்வை அப்படி!சூப்பர் மார்க்கெட் ஓனருக்கும் இதுல ஆரம்பத்துலயிருந்தே உடன்பாடில்லை. ஆனா, நான் பிடிவாதமா ஜூலிக்காக நின்னதும் ஓகே சொல்லிட்டார். ஜூலியை வெச்சு நான் விளம்பரம் எடுக்கிறது தெரிஞ்சதும் சென்னையில என் கம்பெனியோட வொர்க்கிங் பார்ட்னரா இருக்கிற ஹேமா மேடம், பார்ட்னர்ஷிப்பையே முறிச்சுக்கிட்டாங்க. அதுக்கும் ஜூலியோட கேரக்டரைத்தான் சொன்னாங்க. இப்படி எல்லா தரப்புலயும் எதிர்ப்பு வர வர, நான் ஜூலியை வெச்சு அந்த விளம்பரத்தை ஒரே நாள்ல எடுத்து முடிச்சேன்.”“ஜூலியைப் பற்றி நீங்க இப்போ என்நினைக்கிறீங்க?”“சினிமா ஆள்களைவிட செம திறமையான பொண்ணு. எதைச் சொன்னாலும் ஒரே டேக்ல பண்ணி அசத்திடுது. பழகுறதுக்கும் உண்மையான பொண்ணு. காயத்ரி, ஆர்த்தியைவிட ஜூலி நல்ல பொண்ணு. `அண்ணா’னு கூப்பிடுறப்போ அதுல உண்மை இருக்கும். `போட்டோஷூட், சினிமாவுல நடிக்கிறியாமா?’னு நான் கேட்டதும், `அண்ணன் படத்துல நடிக்காமையா?’னு சொல்லுச்சு. காசு, பணம்கூட அந்தப் பொண்ணு எதிர்பார்க்க மாட்டேங்குது. `நிறைய சாதிக்கணும்ணா’னு சொல்லுச்சு. அவங்க அம்மா கால் பண்ணி, `பேட்டா காசு வாங்குடி!’னு சொன்னதுக்குக்கூட, `போம்மா… அண்ணன்கிட்ட நடிக்க யாராச்சும் காசு வாங்குவாங்களா?’னு கேட்டுச்சு. இந்தப் படத்துல ஹீரோயினுக்குச் சமமான ரோல் என் தங்கச்சி ஜூலிக்கு. தமிழ் சினிமாவுல ஜூலிக்கு நிச்சயம் பெரிய இடம் உண்டு!” என ஏகத்துக்கும் நெகிழ்கிறார் பாபா பகுர்தீன்!

இதையும் படிக்கலாமே
கடவுள் காவல் துறை அதிகாரியாகவும் வரலாம...
அடடே.. நடிகை தேஜாஸ்ரீயா இப்படி? படங்கள...
பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய ஷரதா கபூர...
எனக்கு பிக் பாஸ் ஜூலியிடம் பிடித்ததே இ...
வியக்க வைத்த சம்பவம்:ஒரு பன்றியின் மூல...
சுவிட்ஸர்லாந்து மக்களுக்கு சந்தோசமான ச...
படுத்ததுமே உறங்க வேண்டுமா .? இதோ எளிய ...
இன்றைய நாளும் இன்றைய பலனும்!
முஸ்லிமாக மாற போகிறாரா நடிகை அமலா பால்...
கால்கள் போர்வைக்கு வெளியே இருக்கும் பட...
இளம் பெண்ணுக்கு நிலவுடன் நடந்த திருமணம...
மெட்ரோ ரயிலில் செக்ஸ் டார்ச்சர் மற்றும...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 7.4K
 •  
 •  
 •  
 • 3.2K
 •  
 •  
 •  
 •  
 •  
  10.6K
  Shares