சுவிட்சர்லாந்தில் மாதம் ரூ.2,00,000 சம்பளத்தில் வேலை. அறிந்துகொள்ள இதை படிங்க…!

சுவிட்சர்லாந்தில் பணியாற்ற காத்திருக்கும் வெளிநாட்டவர்களுக்கான பயனுள்ள தகவல் இதுவாகும்.

Organization for Economic Cooperation and Development-ன் படி அமெரிக்கா, லக்சம்பெர்க்கை அடுத்து சுவிட்சர்லாந்தில் சம்பளம் அதிகம், ஏனெனில் ஐரோப்பாவை பொறுத்த வரையில் வாழ்வதற்கு அதிக விலையுயர்ந்த நாடுகளில் சுவிட்சர்லாந்தும் ஒன்றாகும்.
ஆண்- பெண்களுக்கு இடையேயான சம்பள விகிதமும் இங்கு அதிகம், ஐரோப்பிய நாடுகளில் இங்கு தான் அதிகளவு வித்தியாசம் உண்டு. சமீபத்திய ஆய்வின் படி ஆண்களை விட பெண்களுக்கு 19.3 சதவிகிதம் குறைவான சம்பளமே வழங்கப்படுகிறது, குறிப்பாக சுவிட்சர்லாந்து பெண்களை விட வெளிநாட்டை சேர்ந்த பெண்களுக்கு சம்பளம் குறைவு.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

வருடத்திற்கு சுவிட்சர்லாந்தில் 20 நாட்கள் பொது விடுமுறை வழங்கப்படுகிறது, ஆகஸ்ட் 1ம் திகதி சுவிஸ் தேசிய தினத்தன்று அனைத்து மாகாணங்களிலும் விடுமுறை வழங்கப்பட்டாலும், மற்ற பொது விடுமுறைகள் மாகாணங்களை பொறுத்து வேறுபடுகிறது.
சுவிட்சர்லாந்தில் வாழ்க்கை/பணி இரண்டுக்கும்மான Balance-யை சமமான முறையில் கொண்டு செல்ல முடியும், இதன் காரணமாகவே உலகளவில் வாழ்வதற்கு மிகச்சிறந்த நாடுகளின் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சுவிசின் சட்டப்படி, நிறுவனம் தொழிலாளரை ஒரு வாரத்திற்கு 45 மணிநேரம் பணியாற்ற அழைக்கலாம், மற்ற நாடுகளுடன் ஒப்பிடும் போது இது அதிகம். பிரான்சில் வாரத்திற்கு 35 மணிநேரமும், பிரித்தானியாவில் 36.5 மணிநேரமும் பணியாற்றுகின்றனர்.
ஒரு ஆண்டுக்கு வேலை செய்த பின்னர், வேலையை இழந்துவிட்டால் அவர்களுக்கு அதிகளவான சலுகைகள் கிடைக்கும், இதேபோன்று ஒரு நாளைக்கு எட்டு மணிநேரத்திற்கும் அதிகமாக பணியாற்றினால் குறித்த நிறுவனம் உங்களுக்கான விபத்து காப்பீட்டை செலுத்த வேண்டும்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

கர்ப்பிணிகளுக்கு பிரசவத்திற்காக 14 வார சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்படுகிறது, தந்தைமார்களுக்கு பெரும்பாலும் குழந்தை பிறந்த அன்றைய தினம் மட்டும் விடுமுறை வழங்கப்படுகிறது, இதேபோன்று பணியாற்றும் தாய்மார்களாக இருப்பின் குழந்தை வளர்ப்புக்கும் அதிக தொகை செலவிட வேண்டும்.

இதையும் படிக்கலாமே
Harish Kalyan and Bindhu madhavi Live
என் காதலிக்காக ஒரு கவிதை...!
Court issues arrest warrant against ac...
தாடி பாலாஜி நடப்பது என்ன ?
மெர்சலான படக்காட்சியின் போது ரசிகர்களை...
சொந்த தம்பியுடன் உறவு வைக்க வற்புறுத்த...
மீண்டும் கடலில் சோகம் .ஐரோப்பா நோக்கிச...
தமிழில் நடிக்க பயப்படும் பிரபல நடிகை!
தனது மரணத்தின் பின்பும் மகளுக்கு பிறந்...
பைனான்சியர் அன்புச்செழியன் சிக்கினார்...
இன்றைய நாளும் இன்றைய பலனும்.!
தங்கையின் திருமணத்தன்று தீ வைத்து கொளு...