கொடூரம் – படுக்கைக்கு வா – டாக்டர் ஆக்குகிறேன் – பிரபல கல்லூரி பேராசிரியர்

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 9.5K
  •  
  •  
  •  
  • 226
  •  
  •  
  •  
  •  
  •  
    9.7K
    Shares

“அட்ஜஸ்ட் பண்ணிக்கோங்க… அப்போதான் டாக்டராக முடியும்!” – விழுப்புரம் மருத்துவக் கல்லூரி வில்லங்கம் “இப்போது, நாங்கள் பயிற்சி மருத்துவர்களாக இருக்கிறோம். எங்கள் துறையின் பேராசிரியர்கள் கொடுக்கும் மதிப்பெண்கள்தான் இந்தப் பயிற்சிக்கான சான்று. இதைச் சாக்காகக்கொண்டு, சில பேராசிரியர்கள் எங்களுக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுக்கிறார்கள். ‘இதெல்லாம் சகஜம். அட்ஜஸ்ட் பண்ணிக்கனும்மா. அப்போதான், நீ டாக்டராக முடியும்’னு ரொம்ப அருவருப்பாகப் பேசுகிறார்கள்” என்று அலறுகிறார்கள், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மாணவிகள். விழுப்புரம் மாவட்டம், முண்டியம்பாக்கத்தில் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை உள்ளது.

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த மாணவ, மாணவிகள் இங்கு படிக்கிறார்கள். எம்.பி.பி.எஸ் படிப்பில் நான்கு வருடங்களை முடித்த மாணவர்கள், அங்கு பயிற்சி மருத்துவர்களாகப் பணியாற்றிவருகின்றனர். அவர்களில் ஒரு மாணவிதான், பேராசிரியர் ஒருவர் தமக்குப் பாலியல் ரீதியாக தொல்லை கொடுப்பதாக, தமிழ்நாடு எம்.ஜி.ஆர் மருத்துவப் பல்கலைக்கழகத் துணைவேந்தர், மருத்துவக் கல்வி இயக்குநர், விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரியின் டீன் வனிதாமணி ஆகியோருக்குப் புகார் அனுப்பியுள்ளார். அந்தப் புகாரில், “பயிற்சி மருத்துவராக இருக்கும் நான், கடந்த மாதம் பொது அறுவைச் சிகிச்சைப் பிரிவில் பணியில் இருந்தபோது, அந்தத் துறையின் துணைப் பேராசிரியர் ஒருவர் எனக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லை கொடுத்தார்.

இதனால், கடும் மன உளைச்சலுக்கு ஆளானேன். அவர்மீது தகுந்த நடவடிக்கையை எடுக்க வேண்டும்” என்று கூறியிருந்தார். அந்த மாணவிக்கு ஆதரவாக, 32 மருத்துவ மாணவிகள் கையெழுத்திட்டிருந்தனர். இந்தப் பிரச்னை குறித்து அந்தக் கல்லூரி மாணவிகளிடம் பேசினோம். “சில பேராசிரியர்கள் எங்களுக்குப் பாலியல்ரீதியாகத் தொல்லைகள் கொடுப்பது குறித்த புகார் கடிதத்தில் நாங்கள் எல்லோருமே கையெழுத்துப் போட்டிருந்தோம். எங்கள் புகார்மீது நடவடிக்கை எடுக்க வேண்டிய கல்லூரி நிர்வாகம், பெற்றோர்களை அழைத்துவரச் சொல்லி எங்களை மிரட்டுகிறது. இன்னும் சில மாதங்களில் ஒரு மருத்துவமனையையே நிர்வகிக்கப்போகும் எங்களுக்கு, சுயமாக முடிவெடுக்கத் தெரியாதா? பள்ளி மாணவர்களிடம் சொல்வதைப்போல, ‘உங்கள் பெற்றோர்களிடம் சொல்வோம்’ என்று எங்களை மிரட்டுகிறார்கள். அந்தத் துணைப் பேராசிரியரைக் காப்பாற்றுவதற்காக, புகார் அளித்த மாணவிமீது தவறான தகவல்களைப் பரப்ப முயற்சி செய்கிறார்கள். புகார் கொடுத்த மாணவியை அழைத்த இன்னொரு பெண் பேராசிரியை, ‘அவரைப் பார்த்தால் உன் அப்பாவைப்போல இல்லையா.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மகளைப்போல நினைத்துக்கூட தொட்டிருக்கலாமே. நடந்ததையெல்லாம் மனசுல இருந்து அழிச்சிடு. இல்லையென்றால் இந்த விஷயம் உனக்கு எதிராகத்தான் முடியும்’ என்று கூறியிருக்கிறார். தவறாகத் தொடுதல், தவறான பேச்சு எது என்றுகூடத் தெரியாத வயதிலா நாங்கள் இருக்கிறோம்” என மாணவிகள் கொந்தளிக்கிறார்கள். இந்த விவகாரம் குறித்து மருத்துவக் கல்லூரி டீன் வனிதாமணியிடம் பேசியபோது, “அந்தப் புகார் குறித்து விசாரிப்பதற்கு, கல்லூரியின் மருத்துவக் கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளோம்.

அந்தக் குழு தரும் அறிக்கையைத் துறை மேலதிகாரிகளுக்கு அனுப்பி வைப்போம். அவர்களின் அறிவுறுத்தலின்படிதான், எங்களால் செயல்பட முடியும். அந்தப் பேராசிரியருக்கு ஆதரவாகச் செயல்படுகிறோம் என்ற குற்றச்சாட்டுத் தவறானது. அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா? மாணவிகளின் பெற்றோர் யாரையும் நாங்கள் வரச் சொல்வில்லை” என முடித்துக்கொண்டார். மருத்துவக் கல்லூரியில் பணியாற்றும் ஊழியர் ஒருவரிடம் பேசினோம். “அந்த மாணவியின் புகார் பெரிய விஷயமாக மாறியவுடன், மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் என அனைவருக்கும் போன் செய்து, ‘இந்தப் பிரச்னையில் நாம் அனைவரும் துணைப் பேராசிரியருக்கு ஆதரவாக செயல்பட வேண்டும்’ என ஒரு டீம் பேசியது. பாதிக்கப்பட்ட அந்த மாணவியின் உறவினர் ஒருவர் இதே கல்லூரியில் பணிபுரிகிறார். அவரிடமும், ‘துணைப் பேராசிரியருக்குத்தான் நாம் ஆதரவாக இருக்க வேண்டும்’ எனச் சொல்லியுள்ளனர். அதைக்கேட்டு அவர் நொந்துபோய்விட்டார்” என்றார். கடந்தாண்டு, இதே விழுப்புரம் மாவட்டத்தில், சின்ன சேலம் எஸ்.வி.எஸ் தனியார் மருத்துவக் கல்லூரியில் மூன்று மாணவிகள் மர்மமான முறையில் தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை மனதில் வைத்துக்கொண்டு, மாணவிகளின் இந்தப் புகாரை அரசு அணுக வேண்டும்.

நன்றி: ஜுனியர் விகடன், புரட்சி வானொலி கேட்க puradsifm.com என கூகிளில் தேடுங்கள்.

இதையும் படிக்கலாமே
Bigg Boss இன்ப அதிர்ச்சியில் கணேஷ்
BIGG BOSS GRAND FINALE - LAST PROMO
ஸ்பைடர் படமும் உண்மை நிகழ்வும்
சுவிஸில் கொல்லப்பட்ட ஈழத்து இளைஞன் – உ...
அதிகமாக பகிருங்கள்: இப்படியும் ஒரு வின...
இப்படியும் ஒரு விமான இறங்கு தளம்..!
நயன்தாராவுக்கு திருமணம்? அதிர்ச்சியில்...
அதிகமாக பகிருங்கள் - மக்களே உஷார்
நோய்களை எதிர்க்கும் சக்தியுடன் மனித மூ...
ஜூலி மறந்தாலும் ரக்சனுக்கு நான் இருக்க...
ஜல்லிகட்டு போராட்டத்தில் காக்கி உடையுட...
சாலினிக்கு அஜித்தின் பிறந்த நாள் பரிசு...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
  • 9.5K
  •  
  •  
  •  
  • 226
  •  
  •  
  •  
  •  
  •  
    9.7K
    Shares