சவுதி இளவரசர்கள் கைதுக்கு இதுதான் காரணமாம்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.4K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  3.5K
  Shares

சவுதியில் மூத்த இளவரசர்கள் கைது விவகாரத்தை அமெரிக்கா வரவேற்றுள்ள நிலையில், இதன் பின்னணியில் அந்த நாட்டின் பங்கு இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் சந்தேகம் எழுப்பியுள்ளனர்.

சவுதி இளவரசர்கள் மீதான கைது நடவடிக்கை மிரட்டல் அரசியலாக மட்டுமே ஆய்வாளர்களால் பார்க்கப்படுகிறது. இதில் குற்றம் நிரூபிக்கப்பட்டு தண்டனை வழங்கும் அளவிற்கு போகாது எனவும் கருதப்படுகிறது.

ஏனெனில், அங்கு நடைபெறும் குற்றங்களுக்கு குர்ஆன் மற்றும் ஹதீஸ் அடிப்படையில் வழங்கப்படும் நீதிக்கான தண்டனைகள் மிகவும் கடுமையானது என்பது பலரும் அறிந்ததே என தெரிவிக்கின்றனர்.

சுமார் ஒன்றரை நூற்றாண்டுகளுக்கு முன் அரேபியாவில் பல்வேறு பழங்குடியினர் குழுக்களாக இஸ்லாமியர்கள் வாழ்ந்து வந்தனர்.

இவர்கள் ஒரே குடும்பமாக ஒன்றிணைந்து சவுதி அரேபியா என்ற நாடு 1930-ல் அமைக்கப்பட்டது. இதை உருவாக்கியவரான அப்துலஜீஸ் அல் சவூத் என்பவர் நாட்டுடன் தனது பெயரையும் இணைத்து சவுதி அரேபியா என்றாக்கினார்.

அப்போது இருந்த சிறிய குடும்பத்தில் அடுத்த மன்னரான பட்டத்து இளவரசரை தெரிவு செய்வது எளிதாக இருந்தது.மற்ற இளைஞர்கள் அனைவரும் இளவரசர்களாக அமர்த்தப்பட்டு, அரசவையின் அமைச்சரவையிலும் இடம் பெறுகிறார்கள்.

இதில், அரசரின் சகோதரர் அல்லது சகோதரி மகன், பேரன் என யார் வேண்டுமானாலும் தெரிவு செய்யப்படலாம். தற்போது ஆயிரக்கணக்கில் பெருகிவிட்ட மன்னரின் குடும்ப உறுப்பினர்களால் பட்டத்து இளவரசர் தெரிவு செய்வதில் பெரும் அரசியல் நிகழத் தொடங்கி விட்டது.

இதன் காரணமாகவே ஊழல் முறைகேடு தொடர்பில் அடுத்தடுத்த கைது நடவடிக்கைகள் என தெரிவிக்கின்றனர் ஆர்வலர்கள்.

தற்போது கைதாகி உள்ளவர்கள் அனைவரும் பட்டத்து இளவரசரான முகம்மது பின் சல்மானுக்கு எதிரானவர்கள் எனவும், தனக்கு பின் மகன் மன்னராவதற்கு அவர்களால் எதிர்ப்பு கிளம்பும் என சல்மான் சந்தேகிப்பதாகவும் கூறப்படுகிறது.

இதன் காரணமாக எடுக்கப்பட்ட இந்த கைது நடவடிக்கை ஒரு மிரட்டலாக மட்டுமே இருக்க வாய்ப்புள்ளதாகவும் ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

இதையும் படிக்கலாமே
கமலஹாசன் மூலம் தமிழகத்தை அழிக்கப் போகு...
விஜய் கோழையாக இருப்பது வருத்தமளிக்கிறத...
ஜெயலலிதா மரணத்தில் துலங்கும் மர்மங்கள்...
என்னைக் காட்டாயப்படுத்தி முத்தமிட்டார்...
அரசியலில் குதிக்கும் நயன்தாரா.! இந்த க...
உலக நாடுகள் அனைத்தும் அமெரிக்காவை பார்...
ஜெயலலிதா வழக்கில் மீண்டும் குழப்பம் . ...
தேசியத் தலைவர் பிரபாகரன் பற்றி துலங்கு...
தமிழீழப் போரியல் வரலாற்றில் இதுவரை வெள...
தயாராகியது சூப்பர் ஸ்டார் ரஜினியின் கட...
இதனால் தான் எம்,எல்,ஏ வை கன்னத்தில் அற...
நடிகர் ரஜினியின் சொத்து மதிப்பு இவ்வளவ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 3.4K
 •  
 •  
 •  
 • 124
 •  
 •  
 •  
 •  
 •  
  3.5K
  Shares