போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோக்கள்!

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 565
 •  
 •  
 •  
 • 65
 •  
 •  
 •  
 •  
 •  
  630
  Shares

LIMITLESS – போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீரோக்கள்!
முன் அறிவித்தல்: இளகிய மனமுடையோர்க்கு உகந்த படம் அல்ல.
பாசத்திற்கும் நேசத்திற்குமுரிய உறவுகளே! சில திரைப்படங்கள் அப் படம் கொண்டிருக்கும் கதை நகர்விற்கு அமைவாக “ஏன்டா இப் படத்திற்கு வந்தோம்” என மனதில் சலிப்பினை ஏற்படுத்தி விடும். சில திரைப்படங்களோ, எம் மனதில் இருக்கும் ஏனைய சிந்தனைகளையெல்லாம் மறந்து அப்படியே அத் திரைப்படத்தோடு ஒன்றித்திருக்க வைத்து விடும். ஆரம்பத்தில் கொஞ்சம் சலிப்பினை வர வைத்தாலும் படத்தின் மையப் பகுதியில் சூடு பிடிக்கத் தொடங்கும் திரைப்படங்களும் இருக்கின்றன. இன்றைய இயந்திர உலகில் மக்கள் பொதுவாக விரும்புவது மனதினை மகிழ்விக்கின்ற, அதே நேரம் மக்களை இலகுவில் கவர்கின்ற படங்களையே ஆகும். அந்த வகையில் நாம் இப் பதிவின் வழியே அலசவிருக்கும் படம் தான் LIMITLESS.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

Virgin Produced மற்றும் Relativity Media தயாரிப்பில் இவ் வருடத்தின் (2011) மார்ச் மாதமளவில் திரைக்கு வந்துள்ள படம் தான் இவ் LIMITLESS. Neil Burger அவர்களின் இயக்கத்தில், Paul Leonard Morgan அவர்களின் திரிலிங் கலந்த விறு விறு இசையில், Bradley Copper, Abbie Cornish, Robert De Niro, உட்பட மற்றும் பல ஹாலிவூட் நட்சத்திரங்களின் நடிப்பில், The Dark Fields எனும் Alan Glynn அவர்களின் நாவலை அடிப்படையாக வைத்து தயாரிக்கப்பட்ட இப் படத்தினை, Lesile Dixon, Rayan Kavanaugh, Scoot Kroopf ஆகியோர் இணைந்து தயாரித்திருக்கிறார்கள். படத்தின் முதல் பத்து நிமிடங்களும் “ஏன்டா படத்திற்கு வந்தோம்? படத்தில் ஒன்றையும் காணமே!” என எண்ணுகையில் தான் படத்தின் விறு விறுப்புக் காட்சிகள் திரையில் தெரியத் தொடங்குகின்றன.

தன்னுடைய முன்னாள் நண்பனைச் சந்திக்கும் ஹீரோ Bradley Copper அவர்கள் அவன் கொடுக்கும் போதை மாத்திரைய (Smart Pills) முதலில் வாங்க மறுப்பது போல் பாசாங்கு செய்தாலும், பின்னர் தன் நண்பனின் சொற் கேட்டு ஒரு மாத்திரையை வாங்கி உட் கொண்ட பின்னர் தன் மூளைப் பகுதியில் பல்வேறு மாற்றங்கள் 30 செக்கன்ஸ் கணப் பொழுதில் இடம் பெறுவதனை உணர்ந்து கொள்கிறார். இந்த ஸிமார்ட் பில் மாத்திரையானது கூப்பருக்கு ஒரு மணித்தியாலத்தினுள் ஒரு மொழியினைக் கற்றுக் கொள்ளுகின்ற வேகத்தினையும், நான்கு நாட்களினுள் நாவல் எழுதுகின்ற வல்லமையினையும், அதே வேளை துரித கதியில் சூப்பர் மேன் போன்று தன்னை எதிர்க்க வருவோரை எதிர் கொள்ளும் மனோதிடத்தினையும் கொடுக்கின்றது.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஒரு மாத்திரையினை உட் கொண்ட பின்னர் இலகுவில் போதையினை மறந்து விலகி இருக்க முடியாது என்பதனை உணர்ந்தவராய், சில நாட்களின் பின்னர் மீண்டும் நண்பனிடம் சென்று போதை மாத்திரையினைக் கேட்கின்றார் கூப்பர். அப்போது “தான் எது கேட்டாலும் செய்வியா?” என வினவும் கூப்பரின் நண்பரின் கூற்றுக்கு அமைவாக கூப்பர் வெளியே சென்று உணவுப் பொருட்களை தன் நண்பரிற்காக வாங்கிவரச் சென்று மீண்டும் வீட்டிற்கு வரும் போது, அங்கே நண்பனின் வீடு இனந் தெரியாதோரால் சேதமாக்கப்பட்டு, உடைத்து நொறுக்கப்பட்டிருக்கையில், நண்பனைத் தேடிப் பார்க்கையில் நண்பனும் கொலையுண்டிருக்க காண்கிறார்.

அவசர அவசரமாக கொலையாளிகளைத் தேடிப் பார்க்கையில் கொலையாளிகள் துரித கதியில் மறைந்து விட, நண்பனிடமிருக்கும் போதை மாத்திரைகளையும், பணத்தினையும் தேடி எடுத்துக் கொண்டு தன் வீட்டை நோக்கி நகரும் ஹீரோ கூப்பரை, கொலையாளிகள் மர்ம நபர்களாக பின் தொடர படத்தின் திரிலிங் + மர்மங்கள் ஆரம்பமாகின்றது. தன் வசமுள்ள மாத்திரைகளை ஒவ்வொன்றாக உட் கொள்ளத் தொடங்கும் போது, கூப்பரின் மூளை கம்பியூட்டரை விட வேகமாகவும், அதே வேளை விவேகமாவும் தொழிற்படும் வல்லமையினை பெற்று விட, ஒரு டிஸ்கோ பார்ட்டியில் அக்கவுண்டிங் நபர்களை கண்டு அவர்களுடன் தன் விவேகத் திறமையால் பேசும் போது, அதுவே அப் பைனான்ஸ் புரோக்கர் கம்பனி நபர்களுக்கு பிடித்துக் கொள்ள அவரைத் தம்மோடு இணைத்துக் கொள்ளப் பிரியப்படுகின்றார்கள்.

ஒரு புறத்தில் விவேகத்தால் பங்கு மார்க்கட்டுக்களையும், நட்டத்தில் இயங்கிய புரோக்கர் கம்பனியின் வளர்ச்சியினையும் மேம்படுத்தும் கூப்பர் மறு புறத்தில் கொலையாளிகள்; அவருக்கு கடன் கொடுத்து விட்டு, போதை மாத்திரையினை வாங்கிய அதே ருசியால் மீண்டும் பின் தொடரும் ரஷ்ய மாபிய கும்பல் நபர்கள் என பல தரப்பட்டவர்களுடன் மோத வேண்டிய சூழ் நிலைக்கு ஆளாகின்றார். கூப்பரின் நண்பரைக் கொலை செய்தவர்கள் அடுத்து கூப்பர் நைட் கிளப்பில் மீட் பண்ணிய மற்றுமோர் பெண்ணைக் கொலை செய்கிறார்கள். இக் கொலையொடு தொடர்புடையவர் கூப்பர் என ஆதாரங்களை வைத்து போலீஸ் வலை விரிக்க கொலையாளிகள் தப்பித்து விடுகின்றார்கள்.

தன்னைப் பின் தொடரும் கொலையாளிகள் யார்? அவர்கள் ஏன் பின் தொடர்கிறார்கள்? கூப்பர் கொலையாளிகளிடம் மாட்டினாரா? அடுத்தடுத்து இடம் பெறும் மூன்று கொலைகளுக்கான சந்தேக நபர்கள் யார்? கூப்பர் தன் விவேகத் திறமையால் முன்னேறினாரா? இல்லை நஷ்டத்தில் இயங்கிய கம்பனியை மேலும் அதல பாதாளத்தில் வீழ்த்தினாரா?போதை மாத்திரைகளைத் தொடர்ந்து எடுக்கும் நபரின் நிலை எவ்வாறு அமைந்து கொள்ளும்? முதலிய பல வினாக்களுக்கு படத்தின் இறுதிப் பகுதி விடையாக அமைந்து கொள்கிறது. படத்தினை பார்க்கையில் மேற் கூறபட்ட வினாக்களுகான விடையினை நீங்கள் பெற்றுக் கொள்வீர்கள்.அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்பதற்கு அமைவாக கூப்பரை விட்டுப் பிரிந்த காதலியாக இப் படத்தில் வரும் நடிகை Abbie Cornish அவர்கள், கூப்பரிடம் வசதி வாய்ப்புக்கள் வந்து கொள்ள அவரைத் தேடி வந்து இடையிடையே ரொமாண்டிக் சீன்களால் சூடேற்றியும், செண்டிமெண்ட் காட்சிகளால் மனதில் இரக்கத்தை வரவழைத்தும் செல்கிறார். கூப்பரின் தங்கையாக ஒரு சீனில் மாத்திரம் வரும் நடிகை Anna Friel அவர்கள் போதை மாத்திரைகளைத் தொடர்ந்து யூஸ் பண்ணுவதால் வரும் விளைவுகளையும், இடையில் நிறுத்துவதால் ஏற்படும் தீமைகளையும், போதை மாத்திரைகளைப் பயன்படுத்தியதால் தனக்கு ஏற்பட்ட விபரீதத்தினைக் கூறிச் சமூகத்திற்கு விழிப்புணர்வினைத் தந்திருக்கிறார். திரிலிங் பிரியர்களுக்கு விருந்தளிக்கும் வண்ணம் இயக்குனர் Neil Burger அவர்கள் இப் படத்தினை விறு விறுப்பான கதை அம்சம் கொண்ட படமாக படைத்திருக்கிறார்.

LIMITLESS: திரிலிங் கலந்து சமூகத்திற்கு முரண்பாடான பாதையின் விபரீதத்தினை சொல்லி நிற்கும் படம்.
27மில்லியன் அமெரிக்க டாலர் செலவில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப் படமானது 105 நிமிடங்கள் கால அளவை கொண்டுள்ளது.
இப் படத்தின் ட்ரெயிலரினை யூடியூப்பில் கண்டு களிக்க:


பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 565
 •  
 •  
 •  
 • 65
 •  
 •  
 •  
 •  
 •  
  630
  Shares