விஜய் மட்டும் தான் நடிகரா? விஜயின் திரைப்படம் மட்டும் தான் திரைப்படமா? நடிகை தன்ஷிகா சீற்றம்.காரணம் இது தானா?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?
விஜய் படத்துக்கு ஒரு நியாயம்..! – எங்கள் படத்திற்கு ஒரு நியாமா..? – தனிஷ்கா ஆவேசம்
கிருஷ்ணா, விதார்த், தன்ஷிகா நடிப்பில் மீராகதிரவன் இயக்கிய “விழித்திரு” படம் சமீபத்தில் வெளிவந்தது. இந்த படம் பற்றிய திறனாய்வு கூட்டம் மயிலாப்பூர் கவிக்கோ மன்றத்தில் நடந்துது. இதில் கலந்து கொண்டு தன்ஷிகா பேசியதாவது:

சமுதயாத்தில் உள்ள அனைவருக்கும் சமூக உணர்வு உண்டு. சமூக உணர்வு எனக்கும் உண்டு. ஒரு படத்தின் வெற்றியில் கலந்து கொள்வதை விட வேதனையில் கலந்து கொள்வதையே பெருமையாக நினைக்கிறேன். என் மனது பாரமாக இருக்கிறது. என்னால் பேசக்கூட முடியவில்லை. ஒரு இயக்குனரின் 5 வருட போராட்டம் இந்தப் படம். இந்த நிகழ்ச்சியில் நான் கலந்து கொண்டதற்கு நன்றி சொன்னார்கள். திரைப்படத்தின் விழாக்களில் கலந்து கொள்வது நடிகர், நடிகைகளின் கடமை. அப்படி கலந்த கொள்ளும்போதுதான் தயாரிப்பாளர்கள் கஷ்டம் தெரியும்.

நான் வெற்றியை விட தோல்வியை அதிகம் பார்த்தவள். ஆனால் இரண்டையும் சமமாக பார்க்க பழகிக் கொண்டேன். கபாலி வெற்றியின் போதும் நான் அதை தலையில் தூக்கி வைத்து கொண்டாடவில்லை. அதன் பிறகு தோல்வி படங்களில் நடித்தபோதும் தலைகவிழ்ந்து இருக்கவில்லை. ஒரு தமிழ் பெண் சினிமாவில் வளர்வது இந்த சமூகத்தில் மிகவும் கடினம். ஆனால் நான் போராடி வந்து கொண்டிருக்கிறேன்.
விழித்திரு படத்துக்கு சரியான தியேட்டர்கள் கிடைக்கவில்லை. படம் நன்றாக இருந்தும் பேசப்பட்டும் படம் சரியாக போகவில்லை. இது எனக்கு முதல் அனுபவம் இல்லை. இதற்கு முந்தைய உரு படமும் நன்றாக இருந்தும் சரியாகப் போகவில்லை.விழித்திரு படம் முன்பே வெளிவந்திருக்க வேண்டியது. தயாரிப்பாளர் சங்கப் போராட்ட அறிவிப்பால் வெளிவர முடியவில்லை. அதன் பிறகு வந்த மெர்சல் படத்துக்கு திரையுலகமே உதவி செய்தது. வழித்திரு பற்றி யாரும் கவலைப்படவில்லை. இங்கு என்ன நடக்கிறது என்றே தெரியில்லை. பணம் இருப்பவர்களால் இங்கு எதையும் சாதிக்க முடியும் என்பதையே இது உணர்த்துகிறது.
கபாலி படத்தால் என் மார்க்கெட் உயரவில்லை. எனக்கான மார்க்கெட் என்னவோ அதுதான் இருக்கிறது. கபாலி படத்துக்காக முடியை வெட்டினேன். பெரிய படம், ரஜினி சாருடன் நடிப்பதால் நான் அப்படிச் செய்தேன். ஆனால் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்த பெண்களும் வெட்டினார்கள். காரணம் அவர்களுக்கு சினிமா மேல் இருக்கும் பக்தி.

இதே படத்தின் இன்னொரு விழாவில் டி.ராஜேந்தர் பேசியதை பற்றி பலரும் என்னிடம் கருத்து கேட்டார்கள். நான் சொல்ல மறுத்து விட்டேன். அதிலிருந்து நான் வெளிவர ஒரு வாரம் ஆனது. அவர் பெரிய பக்திமான் என்றார்கள். எந்த பக்திமானும் அப்படி பேச மாட்டார்கள். நான் அந்த நிகழ்வை மறக்க நினைக்கிறேன்.
இவ்வாறு தன்ஷிகா பேசினார்.
அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

இதையும் படிக்கலாமே
LIMITLESS - போதை மாத்திரையால் சூப்பர் ...
HITMAN - விறு விறுப் பூட்டும் திரிலிங்...
இசைஞானியின் களத்தூர் கிராமம்
மெர்சல் படத்தை திரையிட மறுக்கும் தியேட...
விஜய் இதை செய்தால் ஐந்து ரூபாய்க்கு மர...
தனுஷ் மற்றும் விஜய் சேதுபதிக்கு பின் B...
போதை மாத்திரையால் சூப்பர் மேனாகும் ஹீர...
தல58 தளபதி62 இரண்டு திரைப்படங்களில் பி...
அதிகமாக பகிருங்கள் .அடிக்கடி ஏலக்காய் ...
கைகுலுக்குவதால் ஆபத்து .அமெரிக்கா ஆரச்...
ஜெயலலிதா ஒக்டோபர் மாதமே உயிரிழந்து விட...
அடடே..ஆச்சர்யம் .! திராட்சை பழத்தில் இ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 • 1.9K
 •  
 •  
 •  
 • 435
 •  
 •  
 •  
 •  
 •  
  2.3K
  Shares