அடப்பாவிகளா இப்படியும் இருக்கா? பாரிஸின் முதல் நிர்வாண உணவகம் ‘ஓ’ நேச்சுரலில் அப்படி என்ன ஸ்பெஷல்?

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  

இந்தியாவில் இப்படியான உணவகத்தைக் கனவிலும் நினைத்துப் பார்த்திட வாய்ப்பில்லாத பொழுதில் பாரிஸில் உதயமாகி இருக்கும் இந்த நிர்வாண உணவகம் உலகைத் திரும்பிப் பார்க்க வைத்திருப்பதில் ஆச்சர்யமேதுமில்லை.


உலகில் நிர்வாணத்தை அதன் புனிதத் தன்மையோடு அங்கீகரிக்கும் நாடுகளின் பட்டியலில் ஃபிரான்ஸ் எப்போதும் முன்னிலை வகிக்கத் தயங்கியதில்லை. நிர்வாணத்தை விரும்பும் மக்களின் மெக்கா, மதினா, காசி, குருத்வாரா, பெத்லகேம் எல்லாமும் பாரிஸ் நகரம் தான் என்று சொன்னால் கூடத் தவறில்லை. அந்த அளவுக்கு நிர்வாணத்தை பூஜிக்கும் நாடாக ஃபிரான்ஸும் அதன் தலைநகர் பாரிஸும் திகழ்கின்றன.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஃபிரான்ஸின் மக்கள் தொகையில் 2.6 மில்லியன் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் தொடர்ந்து நிர்வாணத்தை கடைபிடித்து வருகிறார்கள் என்றால் பார்த்துக் கொள்ளுங்கள். மக்களது இந்த மனநிலையை ஊக்குவிக்கும் வகையில் ஃபிரான்ஸ் அரசும் மக்களின் உணர்வுகளைப் புரிந்து கொண்டு அரசு செலவில் சுமார் ஃபிரான்ஸ் நாட்டுக்குள் சுமார் 460 இடங்களை நிர்வாணச் சுற்றுலாவுக்கென ஒதுக்கியுள்ளது. அவற்றுள், ஏறத்தாழ 155 இடங்கள் இரவில் தங்கிச் செல்லக் கூடிய வகையிலான சுற்றுலா முகாம்கள், இவை தவிர 73 கடற்கரைச் சுற்றுலா மையங்களும் அதனுள் அடங்கும்.

அதுமட்டுமல்ல, உலகின் ஃபேஷன் தலைநகருமே ஃபிரான்ஸ் தான் என்கையில் உலகின் நவீனமான புத்தம் புதிய முயற்சிகள் அனைத்தும் ஃபிரான்ஸில் இருந்தே துவங்கப் பட வேண்டும் என்ற உந்துதல் ஃபிரான்ஸ் அரசுக்கு எப்போதும் உண்டு. அப்படியிருக்கையில் முன்னமே இப்படி ஒரு நிர்வாண உணவகம் ஜப்பான் தலைநகரான டோக்கியோவில் தொடங்கப்பட்டு நடைமுறையில் இருக்கையில் ஃபிரான்ஸால் சும்மா இருக்க முடியுமா? ஜப்பானின் அந்த உணவகத்தைக் காட்டிலும் மேலும் சிறப்பு அம்சங்களுடன் கூடிய புத்தம் புது நவீன நிர்வாண உணவகத்தை ஓ நேச்சுரல் ( ‘O’ Naturel) என்ற பெயரில் ஃபிரான்ஸ் துவங்கி விட்டது.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

ஜப்பானின் நிர்வாண உணவகமான ‘அமிர்தா’ வில் உணவருந்தச் செல்லும் வாடிக்கையாளர்கள், தங்களை நிர்வாணப் படுத்திக் கொள்வதற்கு முன்பு தங்களது எடையைச் சரி பார்த்துக் கொள்ள வேண்டும் என்ற விதி உண்டாம். ஆயினும் அந்த விதியை வாடிக்கையாளர்களில் பலர் விரும்புவதில்லை. ஃப்ரான்ஸ் உணவகத்தில் அப்படியான கண்டீஷன்கள் எதுமில்லை என்கிறார்கள்.

இந்த உணவகத்துக்குள் நுழைந்ததும் தம்பதிகளோ அல்லது குடும்பத்தினர் அனைவருமோ மிகச் சுதந்திரமாக ஆடைகளைக் களைந்து அவரவர் ஆடைகளை உணவகத்தின் கிளாக் ரூமில் பத்திரப்படுத்தி விட்டு இயற்கை அளித்த பெருங்கொடையான தத்தமது சொந்த சரீரத்துடன் மிக இயல்பாக, ரிலாக்ஸாகப் பேசிக் கொண்டே இந்த உணவகத்தில் உனவருந்தலாம் உலகின் பிற உணவகங்களுக்குச் செல்லும் போது எத்தகைய சுதந்திரத்தையும், சிறப்பு வசதிகளையும் உணர்வார்களோ அதே விதமான அற்புதமான விருந்துபசரிப்பு அணுகுமுறையை இந்த உணவகமும் அவர்களுக்கு வழங்கத் தயங்காது என்கிறார்கள் இதன் நிறுவனர்களான சதா சகோதரர்கள்.

அன்பிற்கினிய புரட்சி வானொலி நேயர்களே, உங்களிடம் ஒரு அன்பான வேண்டுகோள், எமது சேவை தொடர , உங்களுக்கு பிடித்திருந்தால் மட்டும் நடுவே உள்ள விளம்பரங்களில் க்ளிக் செய்ய முடியுமா?

சுமார் 40 பேர் ஒரே நேரத்தில் அமர்ந்து உண்ணும் வகையிலான இந்த உணவகத்தில் பஃபே வசதியும் உண்டு, இந்த உணவகத்துக்குச் செல்ல ஆன்லைன் மூலமாக பதிவு செய்து கொள்ளலாமாம்.
எல்லாம் சரி ஆனால் சுடச்சுட டேபிளுக்கு வரும் உணவு வகைகளில், ஆவி பறக்கும் வான்கோழி பிரியாணி முதல் கொதிக்கும் நத்தை சூப் வரை இவற்றுள் ஏதோ ஒன்று ஆடைகளற்ற உடலில் கொட்டி புண்ணாகி விட்டால் என்ன செய்வது என்று யோசிக்கிறது தானே நமது காமன் மேன் இந்தியச் சிந்தனை. சரி விடுங்கள்… அதை அவர்களே சமாளித்துக் கொள்வார்கள்.
உலகம் முழுவதிலும் வாழும் மக்களில் நிர்வாணத்தைப் புனிதமாகக் கருதும் அனேகர் இந்த வகையான உணவகங்களை ஆராதிக்கக் கூடும்.

நன்றி தினமணி

இதையும் படிக்கலாமே
Vivegam Official Tamil Trailer
ப்ளூ வேல் சேலஞ்க் விளையாடும் இளம் வயதி...
ரவுடியிடம் கதை அனுமதி வாங்கி எடுக்கப்ப...
BIGG BOSS - 27th September 2017 - Prom...
Karuppan Press Meet stills
உலகிலேயே அதிக அறிவுத்திறன் கொண்ட திருந...
ஆடை மாற்றும் பொழுது குழந்தைகள் அருகிலி...
தொடாமலே.. பெண்களுக்கு காதல்மூடு வரவைக்...
பூகம்பம், எரிமலை, சுனாமி ஏன் தோன்றுகின...
பிரித்தானியாவில் ஐந்து லட்சம் மாணவர்கள...
மலசல கூடம் கட்டுகின்ற முறையை திருடி செ...
பயங்கர நிலநடுக்கம் : தீவுகளை தாக்கும் ...

பதிவு பிடித்தால் பகிரலாமே.
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •  
 •